இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து…. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அமெரிக்காவில் கணினித் துறையில் பணியாற்றும் இரா. முருகன் சிறுகதை , குறுநாவல் , கட்டுரை , கவிதை ஆகிய இலக்கிய வடிவங்களில் பங்களிப்பு செய்துள்ளார். என். சி . இ . ஆர். டி. பரிசு பெற்றுள்ளார். இவர் கவிதைகளில் பெரும்பாலானவை ‘ கணையாழி ‘ இதழில் வெளியானவை. புத்தகத்தின் தலைப்புக் கவிதை […]
ஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு கருநீல திராட்சைக் கண்களை அழுத்தமாய் முத்தமிட முயன்றேன் . என் இதழ்களை மீறி வாய்க்குள் இரண்டும் வழுக்கிச் சென்றன மாறி மாறி . அம்மிணியை அடக்கி விடலாம் . ஆனால் அவளது முயல்களை அல்ல . —————————————————-
நேதாஜிதாசன் பிஸ்மார்க் கவிதை எழுதி கொண்டிருப்பதாக சொன்னார்கள் பிரவுனியன் இயக்கம் போல அவரை பார்க்க செல்ல திட்டமிட்டிருந்தேன் திடீரென நவீனன் வந்து என்னை பார்க்க வந்தவர் தன்னை பார் என சொல்லிவிட்டு சென்றதாக சொன்னார் ஆனாலும் பயண திட்டத்தை கைவிடும் யோசனை இல்லை ஜெர்மனிக்கு போக என்னிடம் எதுவும் இல்லை கண்ணை மூடினேன் தூக்கம் தூக்கி சென்றது கனவிடம் அங்கு ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது அதன் தனிமையை என்னவென்று சொல்ல என நினைத்த கணநேரத்தில் பறவை […]
இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 157 நாள் : 17-04-2016, ஞாயிறு காலை 10.00 மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமையுரை: திரு வளவ. துரையன்; தலைவர், இலக்கியச் சோலை திருக்குறள் விளக்கம் : திரு வெ. நீலகண்டன் ”பொருள்செயல்வகை” சிறப்புரை : பேராசிரியர் திரு அ. அர்த்தநாரி மாணிக்கவாசகரின் இலக்கியத் திறன்” நன்றியுரை : திரு […]
வே.ம.அருச்சுணன் மலேசியாமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்குமணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்தஉணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்குவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்குபெருமளவில் கூடுவது வியப்பானத் தகவல். மருத்துவ சோதனைக்கு மனைவியை அழைத்துச் சென்று திரும்பும் போதெல்லாம்வழியில் இருக்கும் அந்த உணவகத்திற்குத் தவறாமல் மனைவியை நான் அழைத்துச்செல்வது வழக்கம். சுவையான உணவுக்காக மட்டுமல்லாமல் உணவகத்தின் […]
சி. ஜெயபாரதன், கனடா புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி ஈராறு திங்கள் தாண்டி, சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு ! புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம் சித்திரை மாத நாள் முதலாய் ! புத்தாண்டுக் கன்று உடனே, எழுந்து நிற்கும், தத்தி நடக்க முயலும், நழுவி விழும் தள்ளாடி; நல்ல காலம் வருகுது நமக்கென நம்புவோம். நாச காலம் போகட்டும் எனச் சாபம் இடுவோம். நாடு செழிக்கப் போகுது, நன்மை விளையப் போகுது, நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின வென்று […]
அம்மாவின் ஸ்பரிசத்தில் அனுதினமும் தென்றலாயிருந்தது பசி வந்து அழைக்கும் போது மட்டும் வீடு சேரும் நாளில் செல்லப் பிராணியாய் அலுவல் குடும்பம் அலைக்கழிக்க துய்ப்பு செல்வம் தொடுவானில் நிற்க வழித்துணையாய் புனைவும் பொறுப்பும் கயிறு இழுத்த போட்டிக்கு இடைப்பட்டு சுமைதாங்கியாய் தரிசனங்களின் அலைகள் கட்டுமரமாய் அசைக்கும் நடு ஆயுளில் சொரணை அதிகமான இணையாய் உறக்கம் பறவைகளுக்கு ஆதவன் அடியொட்டி சிறகு விரிப்போ ஒடுங்குவதோ அகமென்பதில்லை அகமே புனைவின் அடிப்படையாயிருக்க சிறகுகளுக்குப் பகலிரவில்லை