தேர்தல் சீர்திருத்தங்களின் தேவையை வலியுறுத்தும் தேர்தல் முடிவுகள்

This entry is part 19 of 19 in the series 13 ஏப்ரல் 2014

      2014 நாடளுமன்ற தேர்தல் முடிவுகள் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை நோக்கி போராட வேண்டிய கட்டாயத்திற்கு  நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை தள்ளி சென்றால் உண்மையான மக்கள் ஆட்சியை நோக்கி நாம் பயணிக்கலாம்.     சாதனைகள் என்று  ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்கள்,சாதி மத வெறியை தூண்டுவதன்  மூலம் 30 சதவீத மக்களின் ஆதரவை பெற்றால் வெற்றி அடைய முடியும் என்ற நிலை மக்கள் ஆட்சியில் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சிதைத்து […]

நரகம் பக்கத்தில்…..(நிறைவுப் பகுதி)

This entry is part 17 of 19 in the series 13 ஏப்ரல் 2014

“புதிய உலகை புதிய உலகை தேடிப்போகிறேன் என்னை விடு!விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு! பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்! மீண்டும் நான் மீளப் போகிறேன் தூரமாய்  வாழப்போகிறேன்” அறைக்குள் இருந்து திவ்யாவின் குரலில் இனிமையான பாடல்  கணீரென்று ஒலித்து கதவையும் தாண்டி எட்டிப் பார்த்தது. கோகிலா…நம்ம திவ்யாவுக்கு ரொம்ப நல்ல குரல்வளம்…நன்னாப் பாட்டுப் பாடறா… நம்ம ராஜேஷ் பாடச் சொல்லியிருப்பான் போல….புதிதாக வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் ராஜேஷின் அப்பா. […]

நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதியும்,இலங்கை எதிர்ப்பு அரசியலும்-சில கருத்துக்கள்.

This entry is part 14 of 19 in the series 13 ஏப்ரல் 2014

-ப.வி.ஶ்ரீரங்கன். இன்று,இலங்கையின் அரசியல் வாழ்வானது மிகக் கொடூராமானவொரு  ஆளும் வர்க்கக் கும்பலால் – சட்டத்துக்குப் புறம்பான கட்சி ஆதிக்கத்தால் வலுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகிந்தா தலைமையிலான அரை இராணுவ ஆட்சிக்குள் வீழ்த்தப்பட்ட இலங்கை அரசானதைக் குறித்துப் பலர் புரிய முற்படும்போது இலங்கையின் நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி ஆட்சி முறைதாம் இதற்குக் காரணமென்கின்றனர். அத்தகையவர்களிலொருவர் இலங்கையின் மதபீடத் தலைவர்களிலொருவரான வண. சோபித தேரர்.இன்றிவர் பின்னால் அணிவகுக்க முனையும் UNP க் கட்சியும் ,அவர்களது மேற்குலகப் பங்காளிகளுமாகப் பின்னும் அரசியலானது இலங்கையில்  சட்டவாத […]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-29 நிறைவுரை.

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

  ஸ்ரீ கிருஷ்ணர் மீதான  ஒரு விமர்சகனின் விமர்சனம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிப் புனையப்பட்ட கர்ண பரம்பரைக் கதைகளை ஒதுக்கித் தள்ளுதல். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மைகளைப் புனரமைப்பது என்னுடைய இந்த ஸ்ரீகிருஷ்ண ஆராய்ச்சியில் என் சக்தி முழுவதையும் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியக் கட்டுக் கதைகளைக் களைவதிலேயே செலவிட்டேன். அவரைப் பற்றிய நிதர்சனத்தைப் புனரமைப்பது என்பது சற்றுக் கடினமான வேலையாகவே இருந்தது. ஏன் எனில் சாம்பல் எவ்வாறு நெருப்பை மூடி விடுகிறதோ அதே போல் […]

திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – அத்தியாயம் 2

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

இவர்களுக்கு ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல் கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை. என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.   அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின் உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள […]

பயணச்சுவை 1 . சென்னையிலிருந்து சேலம் !

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

வில்லவன் கோதை தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி அவர்கள் எப்போதோ  ஓய்வு பெற்றிருந்தார்கள்.  இருவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்  ஒரே ஒரு வித்தியாசம். நண்பர் தங்கவேலு இந்துமத சம்பிரதாயங்களை பின்தொடர்பவர். இன்னொருவர் நண்பர் வேதசிரோன்மணி கிருத்துவத்தை ஏற்று ஊழியம் செய்பவர். இரண்டுமே ஒய்வுக்குப்பிறகு கைகூடியிருக்கிறது என்று சொல்லலாம். விரைவுப்பேரூந்தில்  வந்தால் நல்லதென்கிறார்  ஒருவர்.  ரயில் வண்டித்தொடர்தான் வசதியானது என்கிறார் இன்னொருவர் என்னைப்பொருத்தவரை சேரும் இடம் இருவருக்கும் ஒன்று என்று கருதுகிறவன். இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களே  ! இந்த […]

திரை விமர்சனம் – மான் கராத்தே

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய ஒளிப்பதிவு. மெல்ல மனதை வருடும் பின்னணி இசை. பட்டையைக் கிளப்பும் பாடல்கள். மெழுகுச் சிலையாக நாயகி. ஆரோகண பில்ட் அப்பில் அவரோகணமான படம் “ மான் கராத்தே “ சிவகார்த்திகேயன் அவசரப்பட்டிருக்க வேண்டாம். நான்கைந்து படங்களிலேயே சூப்பர் ஸ்டார் ஆகும் அவரது கனவை, அவரது  நல விரும்பிகள் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கலாம்.. அப்படி செய்யாததால் மீசையில் ஓட்டாத மண்ணாகப் போயிருக்கிறது இந்தப் படம். ஏ.ஆர். முருகதாஸின் கதை வித்தியாசமானது. படத்தின் ஆரம்ப […]

மருத்துவக் கட்டுரை பித்தப்பைக் கற்கள்

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

பித்தப்பைக் கல் பரவலாக 30 வயதுக்கு மேல் ஏற்படக்கூடியது. பெண்களுக்கு ஆண்களைவிட மூன்று மடங்கு அதிகமாகக் காணக்கூடியது. நாற்பது வயதுக்கு மேல், உடல் பருமன் அதிகமான, மணமாகி குழந்தைகள் பல பெற்ற தாய்மார்களுக்கு பித்தப்பைக் கற்கள் அதிகமாகக் காணப் படுகின்றது.            பித்தப்பைக் கற்கள் இரண்டு வகையானவை.            1. கொலஸ்ட்டரால் கற்கள் ( Cholesterol Gall Stones ) – 80 சதவிகிதத்தினருக்கு இத்தகைய கற்களே உருவாகின்றன. நாம் உண்ணும் உணவிலிருந்து கொலஸ்ட்டரால் இரத்தத்தில் கலப்பதோடு, […]

சீதாயணம் நாடகப் படக்கதை – 28​

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை -28​ ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படங்கள் : 58​ & 59​ [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் :   1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma 3.  Mahabharatha By: […]

பொலிவு

This entry is part 8 of 19 in the series 13 ஏப்ரல் 2014

    “ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி  தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு  பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’   சிந்தாமணி சொல்வதைக் கேட்டு  ருக்குமணி  ஒரு நிமிடம் ஆச்சர்யத்துடன்  பார்பபது போல் நின்றிருந்தாள்;  அவள் ஏதோ பரவசத்தில் ஆழ்ந்திருந்தவள்  மாதிரி சொன்னாள் . “ இதை விட  ஒரு பொம்பளைக்கு  வேறெ என்ன வேண்டியிருக்கும்’. வானம் நீலத்தைக் குறைத்துக் கொண்டு பல்லிளித்த்து.   தாய்த்தமிழ்ப் பள்ளி  முக்கு […]