சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அக்கினி -5 தாக்கு கணையை வெற்றிகரமாக ஏவி நாங்கள் ஒரு வரலாற்று மைல் கல் நட்டதாக நான் அறிவிக்கிறேன். அதனால் நமது தேசம் தாக்கு கணைப் பொறி நுணுக்கத்தை கற்றுக் கொண்ட பெருமை அடைகிறது. இப்போது இந்தியா நீட்சி எல்லைத் தாக்கு கணை ஏவும் வல்லமை பெற்றுள்ளது. அது அடைந்த உச்ச உயரம் 600 கி.மீ. (480 மைல்). அதன் முக்கட்ட ராக்கெட்டுகள் திட்டமிட்டபடி இயங்கி குறிப்பிட்ட பளுவைத் […]
எண்ணங்களின் கனத்தில் உடைந்து விழுந்துவிட்டேனா என்று தெரியவில்லை. இல்லை மௌனம்தான் பெருஞ்சுமையாய் அழுத்திற்றோ என்னவோ! ரயில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல என் எண்ணங்களும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்டு காயப்பட்டுக் கிடக்கிறது. எனினும் தூரத்துச் சந்திரனோடு பயணித்து என் விடியலைக் கண்டுவிடலாம் என்ற என் பால்வீதிக் கனவைக் கவிதையாக்கிக் கொடுத்தேன். நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில் கடவுளை முன்னிறுத்தி நான் உலகத்திற்கான கனவு விடியலை என் வாழ்க்கையின் பாடலாகக் காட்டிவிட்டதாகப் பெருமை பேசுகிறார்கள்! […]
நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும் அவரையும் சொகுசாய்ப் படர்ந்தன முளைவிடும்போதே நீ விரித்த பந்தலில் கத்தரிப் பூச்சிகள் காணாமல் போயின நீ தூவிய சாம்பலில் வாடிக்கைக் காகங்கள் கன்றோடு பசு குஞ்சுகளோடு கோழிகள் இவைகளோடு நானும் பசியாறாமல் நீ பசி உணர்ந்த தில்லை அன்று அடைமழை நம் […]
சரத்குமார் நடித்த சூப்பர் படம் ஒன்று ‘சூரியன்.’ அதில் சரத் முதன் முறையாக மொட்டை போட்டிருப்பார். அதோடு பிரபுதேவா பிரபலமாகாத போது சுகன்யாவுடன் ஆடிய ‘ கட்டெறும்பு என்னைக் கடிக்குது ‘ என்ற பாடலும் அதில் தான். ஆனால் அதன் இயக்குனர் யார் தெரியுமா? பவித்திரன்! பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் முடித்து, இப்போது பவித்திரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாட்டுத்தாவணி. சம்பந்தப்பட்ட மாடு படத்தைப் பார்த்திருந்தால் முக்காடே போட்டிருக்கும்! அவலை நினைத்து உரலை இடிப்பது என்பார்கள். […]
ஆர்யா பட்டாவின், விதை இந்திய மண்ணில், கிமு 476ல் விழுந்தது. அவர், தனது 23 வயதில், ஆர்யபாட்டியம் எழுதினார். கணக்கின் சுவாசக்குழுக்குள் விரலைவிட்டு ஆட்டியவர். அல்ஜீப்ராவின் இதய ஒலியை கேட்டறிந்தவர். வான சாஸ்த்திரத்தின் இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர். பிரம்ம குப்தா, வான சாஸ்த்திரத்தின் நூலை எழுதி, ஆர்யபட்டாவின் அறிவு தளத்தில் புகுந்து, வானசாஸ்திரத்தை உலகிற்கு எடுத்து சொன்னவர். பாஸ்கர ஆச்சார்யா கிமு 1114 ல், இந்திய மண்ணில் பிறந்தவர்.இவர், ஆர்யபட்டாவின், விதிகளை கடைப்பிடித்து, பூஜ்ஜியத்திற்கு, விடைக்கண்டுப்பிடித்து, இந்தியாவின் பெருமையை, […]
1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் […]
-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி… ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது… அச்சம்,எரிச்சல், ஆவல்…. ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ, அதிகாரியோ, திணறடித்துக் கொண்டிருக்கலாம்… மரணச் சடங்கோ, விபத்தோ,கூட்டமோ, தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்! தவறவிட்ட உறக்கம் நேரங்காலமின்றி வாய்த்திருக்கலாம்.-
அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க……. பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய் காத்திருந்த கருகூலம் கண்டேன் மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும் கண்டறியாதனக் கண்டேன் என கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய் கன்னியவளை கருத்தாய்க் கவரவே காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள் ஆசுவாசமாய் சூல் கொண்டது சூல் […]
நீலவானம் இலக்கு இருக்கிறதா செல்லும் மேகத்திற்கு பழுத்த இலை உதிர்கிறது இனி அவை எங்கெங்கு பயணப்பட வேண்டியிருக்குமோ அலை மெல்ல கிசுகிசுத்தது கரையோ மறுதலித்தது காற்று வேகமெடுத்தது பூக்கள் ராஜபாட்டை விரித்தது பறவைகள் கூட்டம் மேற்கு நோக்கி பறந்தது வானம் சூரியனுக்கு விடை கொடுத்தது விருட்சத்தின் நிழலில் விழுந்த விதை முளைவிடுமா மணி காட்டும் கடிகாரத்தில் நொடி முள்ளுக்கு ஓய்வு இல்லை மனிதன் மனிதனாக இருந்தால் கடவுளின் இருப்பு கேள்விக்குறியாகாதா மரணப் புதிருக்கு விடை சொல்லுபவர்கள் யார்?
வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர் உள்ளே சென்றவுடன் உடல் ஆசுவாசம் கொள்ளும் மழையின் ரூபம் விழும் இடத்தைப் பொறுத்து மாறும் ருசி கண்ட பூனை நடுநிசியில் பாத்திரத்தை உருட்டும்.