மௌனம் – 2 கவிதைகள்

This entry is part 3 of 13 in the series 2 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா மௌனம் 1 மௌனத்தின் மொழி அறிந்தோர் அறிவார் சொல்லின் வலுவை மௌனம் 2 முன்பெல்லாம் நான் பேசுவேன் நீ மௌனிப்பாய் இதழோரப் புன்னகையால் என்னை வருடிக் கொண்டு இன்று நான் பேசுகிறேன் நீ மௌனிக்கிறாய் தொலைத்த புன்னகையால் என்னை வதைத்துக் கொண்டு

ஏகாந்தம்

This entry is part 2 of 13 in the series 2 ஏப்ரல் 2023

உஷாதீபன்                                                                          ரமணன், தான் தனிமைப் படுத்தப்படுவதாக உணர்ந்தார். தனிமைப்படுத்தப்படுகிறோமா அல்லது தனிமைப்படுத்திக் கொள்கிறோமா என்றும் ஒரு சந்தேகம் வந்தது. நமக்கு நாமே அப்படிச் செய்து கொண்டு, வீணாய் அடுத்தவர் மேல் சந்தேகப்பட்டால்? அது முட்டாள்தனமில்லையா? அநாவசியமான சண்டைகளுக்கு, மனத் தாங்கல்களுக்கு வழி வகுக்காதா?  தனிமைப் படுத்திக் கொள்வதினால்தான் அதை உணர முடிகிறதோ என்று நினைத்தார். வசதியாய் உணரப்பட்டதனால், அதை நிலைக்கச் செய்யும் முகமாகச் சில நடந்து வருகிறதோ?       ஏம்ப்பா இப்டித் […]

கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2023

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் […]