வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து – தீ வளர்க்கும் தியானம் – 5

This entry is part 11 of 41 in the series 8 ஏப்ரல் 2012

தியானம் என்பது யாது? தியானம் என்பது மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி ஆகும். இது இந்தியாவில் தோன்றிய யோகக்கலையை ஒத்த பயிற்சி ஆகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்யப்படுகிறது. இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் அமைதியான இடங்களில் மேற்கொண்டனர். மிக உன்னத மனிதவளக் கலைகளில் தியானமும் ஒன்று. விக்கிபீடியா தியானம் என்பது, இருக்கும் இடத்தில் இருப்பது. நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது. உணர்வுகளை […]

சுணக்கம்

This entry is part 10 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வழக்கம் போல இன்றைக்கும் நான் ஆபீஸுக்கு லேட். என்ன பண்றது?.எனக்கு வாய்ச்ச மகராசி எட்டு மணிக்குத்தான் டிபன் தருவாள்.எட்டரை மணிக்குத்தான் லஞ்ச் பாக்ஸ் ரெடியாகும்.அதுக்கு மேல இந்தக் கூட்ட நெரிசலில் பஸ் பிடிக்கணும்.எங்கே?,கண்ணதாசன் நகரிலிருந்து வேளச்சேரி போவணும். ஆபீஸ் அமைதியாக இருந்தது.டைரக்டர் ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறார்,அறையில் ஃபேன் ஓடிக்கிட்டிருக்கு. “ வாய்யா! எவர் லேட் ஏகாம்பரம்.”—இது ஏ4 ன் நக்கல். “டிராஃபிக்ஜாம்யா.” “இது வழக்கமா சொல்றது. எதையாவது புதுசா சொல்லப்பா.நாங்க 8-30க்கே ஆஜர் தெரியுமில்லே?.” “ அதிசயம்தான் சரீ […]

கவிஞர் சக்திஜோதியின் ‘நிலம் புகும் சொற்கள்’கவிதை தொகுப்பின் அறிமுகமும் விமரிசனமும்

This entry is part 9 of 41 in the series 8 ஏப்ரல் 2012

’நிலம் புகும் சொற்கள்’ கவிஞர் சக்தி ஜோதியின் முதல் படைப்பு. ஒரு பயணத்தை இவ்வளவு அழகாக எல்லோராலும் சொல்லிவிட முடியாது. அய்நிலங்களிலிருந்து எழுந்து வரும் சொற்கள் என்பதாய் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினாலும்,அகநிலத்துள் புகுந்த சொற்கள் தான் கவிநிலத்தின் வரிகளாய் வெளி வந்திருக்கின்றன.வாசிப்பிற்குள் இயல்பாய் நுழைந்துவிடுபவர்களின் கடைசி இலக்கு படைப்பு என்பதாயும் கூறுகிறார்.படைப்புக்கனல் கனன்று கொண்டேயிருக்க வேண்டும்.இல்லையேல் சாம்பலாய் இயலாமையின் பரிதவிப்பு பட்டவர்த்தனமாய் வெளி வரத் துவங்கிவிடும். அடுத்து, இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அன்பு […]

கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

This entry is part 8 of 41 in the series 8 ஏப்ரல் 2012

புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும் , வைக்கோல் உதறியபடியும் யாவரையும் வைத்தபடி இருந்த ருக்கு பெரியம்மாவின் வாசாப்புகள் அலைந்துகொண்டே இருக்கின்றன அவள் காலத்துக்குப் பின்னரும் யார் காதிலும் நுழையாமல்… வைக்கோல் உதறியபடியும்  யாவரையும்  வைத்தபடி இருந்த  ருக்கு பெரியம்மாவின்  வாசாப்புகள்  அலைந்துகொண்டே இருக்கின்றன  அவள் காலத்துக்குப்  பின்னரும்  யார் காதிலும் நுழையாமல்…      […]

தமிழில் ஒலிவடிவமும் சொல்லமைப்பும்- மற்ற மொழிகளோடு ஒரு ஒப்பீடு

This entry is part 7 of 41 in the series 8 ஏப்ரல் 2012

தமிழ் பழமையான, எளிதான, இனிமையான மொழி என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் மற்ற இந்திய  மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உள்ள சொற்களை ஒலி அடிப்படையில் எழுதவோ (transliteration) பேசவோ இயலாது. தமிழ் பத்திரிக்கைகளிலு்ம் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மற்ற மொழிப்பெயர்கள் தவறாக அச்சிடவும் பேசவும் படுகின்றன. .  2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலேயே தமிழ் தேங்கிவிட்டது என்று நான் எண்ணுகிறேன். தமிழ்க்காவலர்கள் என்மீது பாயும் முன் என்னைப் பற்றிய சிறு குறிப்பு : என் தாய் மொழி தெலுங்கு.  நான் […]

தங்கம்

This entry is part 6 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  1 அறிமுகம் ஒரு உலோகம். அதிக விலை மதிப்புடையது. உலகெங்கிலும் மக்களால் விரும்பி வாங்கப்படுவது. தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் பெண்களால் விரும்பி அணியப்படுகிறது. மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது. இதுவே தங்கத்தைப் பற்றிய பொதுவான கருத்து. நானும் உங்களில் ஒருத்தி. வணிகவியலிலோ பொருளாதாரவியலிலோ பட்டம் பெற்றவள் இல்லை. எந்தவொரு தங்கம் பற்றிய முதலீடு மற்றும் வியாபார அறிவும் இது வரை இருந்தது கிடையாது. கடந்த பத்து வருடங்களில் தங்கத்தைப் பற்றிய விலையை மட்டும் தொடர்ந்து […]

தகழியின் ’செம்மீன்’ – ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் புதிதாய்

This entry is part 5 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  தகழியின் ’செம்மீன்’ என்ற மகத்தான மலையாள நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகி( 1962)  ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன. மலையாள நாவல் 1956-ல் வெளியானது. ஐம்பது ஆண்டுகள் கழிந்தும்  நாவல் வாசகர்களை இன்னும் புதிதாய் வசப்படுத்துகிறது. அண்மையில் தான் முதல் முதலாக செம்மீன் நாவலை வாசித்தேன். சுந்தர ராமசாமியின் தமிழாக்கம் அது. இரண்டே நாட்களில் வாசிப்பு வாசிப்பைத் தூண்ட வாசித்து முடித்து விட்டேன். தகழி இந்த  நாவலை இருபது நாட்களுக்குள் எழுதி முடித்து விட்டாராம். ஆச்சரியமில்லை. எழுதும் […]

ஏப்ரல் 29, 21: பாரதிதாசன் பிறந்த நாள்-மறைந்த நாள் நினைவுச் சிறுகதை: ஒரு சந்திப்பு, ஓர் அங்கீகாரம்

This entry is part 4 of 41 in the series 8 ஏப்ரல் 2012

வாத்தியார் வேணு நாயக்கருக்குக் கலியாணம். வாத்தியார் என்றால் பள்ளிக்கூட வாத்தியார் அல்ல. கழி சுழற்றவும் பிடிகள் போட்டு எதிராளிக்கு முதுகில் மண் ஒட்டச் செய்யவும் கற்றுக்கொடுக்கிற வாத்தியார். அதனாலேயே அவருக்கு வாலிப வயது சிஷ்யப் பிள்ளைகள் அதிகம். ஆனால் வாத்தியார் வேணு கவிஞருக்கு சீடர் மாதிரி. கவிஞரிடம் பாட்டுக் கட்டப் படிப்பதெல்லாம் அவரால் நடக்கிற காரியம் இல்லை. கவிஞரிடமும் வேணுவுக்குக் கற்றுக் கொடுக்கும்படியான வித்தை எதுவும் இல்லை. சொல்லப் போனால் கவிஞர்தான் வேணுவிடம் சில உடற் பயிற்சி […]

சந்திரா இரவீந்திரன் ‘நிலவுக்குத் தெரியும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

This entry is part 3 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  செல்வராஜா   கடந்த ஞாயிற்றுக்கிழமை, 18.3.2011 அன்று லண்டன் என்பீல்ட் நகரில்Dugdale Centre மண்டபத்தில் அவை நிறைந்த நிகழ்வாகவும் நல்லதொரு குடும்ப நிகழ்வாகவும் சந்திரா இரவீந்திரனின் “நிலவுக்குத் தெரியும்” சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு நிகழ்வு நிகழ்ந்தேறியது. வடமராட்சி-பருத்தித்துறையில் மேலைப் புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் சந்திரா. 1991இல் பிரித்தானியாவுக்கு இடம்பெயரும்வரை யாழ்ப்பாண அரச செயலகத்தில் பணியாற்றியவர். இவர் 1981இல் (செல்வி) சந்திரா தியாகராஜா என்ற பெயரில் தனது கன்னிப்படைப்பான ஒரு கல் விக்கிரகமாகிறது என்ற சிறுகதையை […]

முள்வெளி – அத்தியாயம் -3

This entry is part 2 of 41 in the series 8 ஏப்ரல் 2012

அறையின் மூன்று பக்கமும் பால்கனி. ஹாலிலிருந்தும் இரண்டு பால்கனிக்குக் கதவு உண்டு. அந்த இரண்டு பால்கனியில் மட்டுமே செடி கொடிகள். ஒரு பால்கனியில் பூந்தொட்டிகள், பூ பூக்கும் கொடிகள். இன்னொரு பால்கனியில் பூ இல்லாத செடி வகைகள், துளசி, போன்ஸாய் செடிகள், உயரமாக வளரும் வரை பால்கனியில் இருக்கும் மரக் கன்றுகள். மூன்றாவது பால்கனியில் நிறைய சிமெண்ட் நாற்காலிகள், சிமெண்ட் ‘பென்ச்’கள், அது அறையிலிருந்து மட்டும் தான் திறக்கும்.அறைக்குள்ளே புத்தக அலமாரி, மேஜை, கம்ப்யூட்டர், சிறிய திவான். […]