உதவிடலாம் !

This entry is part 9 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து அரவணைத்து உதவிடலாம் ! ஓலைக் குடிசைதனில் ஒழுக்குவீட்டில் வாழ்பவர்க்கு ஒழுங்கான வாழ்வுவர உள்ளத்தால் உதவிடலாம் ! நீர்கூடக் கிடைக்காமல் நிம்மதியைத் தொலைத்துநிற்கும் ஊரெல்லாம் தனையெண்ணி உணர்வோடு உதவிடலாம் ! மருத்துவ வசதியின்றி மனம்நொந்து […]

பயன்

This entry is part 10 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சேயோன் யாழ்வேந்தன் இலைகள் உணவு தயாரிக்கின்றன இலைகள் உணவாகின்றன இலைகள் உணவு பரிமாறுகின்றன இலைகள் எரிபொருளாகின்றன இலைகள் உரமாகின்றன இலைகள் நிழல் தருகின்றன இலைகள் சருகாகி சப்தம் செய்து எச்சரிக்கின்றன இலைகள் குடையாகின்றன இலைகள் கூரையாகின்றன இலைகள் ஆடையாகின்றன இலைகள் பாடையாகின்றன இலைகள் வர்ணங்கள் செய்கின்றன இலைகள் தோரணாமாகின்றன இலைகள் எழுதும் மடலாகின்றன இலைகள் மருந்தாகின்றன இலைகள் படுக்கையாகின்றன இலைகள் புகைக்கப்படுகின்றன இலைகள் போதை தருகின்றன இலைகள் பூசாரிகளால் மந்திரிக்கப்படுகின்றன இலைகள் மந்திரிகளாக்குகின்றன இலைகளின் பயன்களைப் பட்டியலிட்ட […]

சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி

This entry is part 11 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன். 0 காரிய சித்திக்காக சுந்தர காண்டம் படிக்கும் மக்கள் மத்தியில் ஒரு சாரார் சற்று திசை மாற, வளைந்த கொம்போடு வாழ்க்கையைப் படிக்கப் போகிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்கென்றே கூரை வேயாத பள்ளிக்கூடங்கள் பல உள்ளன. விடலைப் பருவங்களில், விடலையென்றால், ஏதோ தாம்பத்திய வாழ்வில் தவற நேரிடும் என்ற குழப்பமான செக்ஸ் பாதிப்பால் அரைகுறையாய் டிகிரி வாங்கும் பல்கலைப் பட்டதாரிகள் பலரை என் வாழ்வில் நான் சந்தித்ததுண்டு. அப்போதெல்லாம் அம்மாதிரி ஆட்கள் ஒரு மாதிரி […]

அப்துல் கலாம்

This entry is part 12 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத் தேடும் என்றவரை தேடுதல் இல்லையெனில் சிக்கிமுக்கிகூட நம் அறிவுக்குச் சிக்கியிருக்காதென்றவரை எடுத்துக்காட்டாய் வாழ்வின் இறுதிவரை வாழ்ந்தவரை எடுத்துக்கொண்டது மண் தொழுத அலைகள் அழுத கண்ணீரில் கரைகள் நனைகின்றன ‘கனவு காணுங்கள்’ என்றவர் இன்று என் கனவில் சொன்ன செய்தி ‘விழுந்திருக்கிறேன் விதையாக […]

சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு

This entry is part 13 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

ஆர்.பி. ராஜநாயஹம் தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு ரூ110 — சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் Hell is a city much like London என்றான் ஷெல்லி. Paris is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான். சுப்ரபாரதிமணியனின் ‘தேநீர் இடைவேளை’ நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும். அவருடைய கட்டுரைகள் ‘உலக […]

இரா. பூபாலன் கவிதைகள்

This entry is part 14 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு ‘ என்ற பூபாலன் தொகுப்பில் உள்ள கவிதைகளை , தலைப்புள்ளவை , தலைப்பற்றவை என் நாம் காணலாம். இவர் கவிதைகளில் மொழி ஆளுமை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இது இன்று எழுதும் பலரிடம் இல்லாததாகும். தலைப்பில்லாத முதல் கவிதையில் புனைவு ஒளிர்கிறது, கச்சிதமான சொற்களால் கவிதை பிசிறில்லாமல் அமைந்திருக்கிறது. எளிய கட்டமைபில் கவிதை உள்ளது. சுவரில் [ சுவற்றில் என்று எழுத வேண்டாம் ] மாட்டியிருக்கும் […]

பரிசு

This entry is part 15 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன் பரிசுப் பொருள் என் கௌரவத்தை உறுதி செய்வது பளபளப்புக் காகிதத்தால் மட்டுமல்ல அதன் உள்ளீடு ரகசியமாயிருப்பதால் உள்ளீடற்ற ஒரு உறவுப் பரிமாற்றத்தை அது நாசூக்காக்குகிறது அதன் உள்ளீடு மீண்டும் கை மாறலாம் மினுக்கும் காகிதம் கை கொடுக்க வீசவும் படலாம் பரிசின் எல்லாப் பக்கங்களும் எதிர்பார்ப்புகளால் வலுவானவை கனமான ஒரு செய்தியைப் பரிசுகள் சேர்ப்பிக்கின்றன ரகசியமாய்க் கைமாறும் பரிசுகளில் மட்டுமே சமூகம் கைதவறி விட்டவை உள்ளீடாய்

என் வாழ்வின் வசந்தம்

This entry is part 16 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

பாவலர் கருமலைத்தமிழாழன் அறுபதினை நெருங்குகின்ற வயதில் கூட அறுபதுநாள் முப்பதுநாள் ஆசை மோகம் நறுமணமாய் திருமணம்தான் நடந்த அந்த நாள்களிலே காட்டியபோல் குறைந்தி டாமல் குறுந்தொகையின் இன்பம்போல் பாவேந் தர்தம் குடும்பத்து விளக்கிலுள்ள முதியோர் போல முறுவலுடன் தாயாகப் பெற்றெ டுத்த மூவருடன் நான்காகப் பேணு கின்றாள் ! எங்கிருந்தோ வந்தவள்தான் பெற்றோர் தம்மை ஏந்திநின்ற சுற்றத்தை ஊரை யெல்லாம் பொங்கிவந்த அழுகையுடன் புதைத்து விட்டுப் பொறுப்புடனே வந்தபுது உறவை நெஞ்சுள் தங்கவைத்துப் பிறந்தவீட்டுப் பண்பாட் டோடு […]

பந்தம்

This entry is part 17 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

எஸ்ஸார்சி நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி ‘இதோபார் என்னை ‘என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு. […]

நிலாமகள் கவிதைகள்

This entry is part 18 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ இலகுவானதெல்லாம் இலேசானதல்ல ‘ என்ற கவிதைத் தொகுப்பு நிலாமகளின் [ நெய்வேலி ] இரண்டாவது தொகுப்பு. இவர் தன் சிறுகதைகளையும் தொகுப்பாகத் தந்துள்ளார். இவர் கவிதைகள் கல்கி , யுகமாயினி , காக்கைச் சிறகினிலே , அனுபவம் , நிவேதிதா , சங்கு , புதிய ‘ ழ ‘ , போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. பெண் , தாய்மை அடைந்த பின் சந்திக்கும் கஷ்டத்தைக் கருக்பொருளாகக் கொண்டது ‘ கொடுந்துயர் ‘ […]