‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது?

This entry is part 26 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

அவர்கள் கறுப்பு நிறத்தில் உடையணிந்தவர்கள். முகத்திலும் கறுப்பு நிற கிறீஸ் பூசிக் கொண்டவர்கள். விரல்களில் கூரிய போலி நகங்களை அணிந்திருப்பவர்கள். பெண்களைத் தாக்குபவர்கள். அத்தோடு நன்றாக ஓடக் கூடியவர்கள். எந்த உயரத்திலிருந்தும் குதிக்கக் கூடியவர்கள். இப்படிப் பல கதைகள் அம் மர்ம மனிதர்களைப் பற்றி அன்றாடம் கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. பல பெண்கள் இம் மர்ம மனிதர்களால் காயமடைந்திருக்கின்றனர். சாட்சிகளாக அவர்களது உடல்களில் நகக் கீறல் காயங்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களும் இருக்கின்றன. தாக்குதலுக்குள்ளாகியும், நேரில் […]

நேயம்

This entry is part 25 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

“சாமி கும்பிடறேங்க” *** *** *** சாமி அம்மாசி கும்பிடறேங்க. குரலை உயர்த்தி கூப்பிட்டான். நன்கு வளர்ந்த உடல் .சதை திரண்ட கைகள் ,தொடைகள் , அகலகால்கள் அம்மாசி அருகில் நின்ற இளைஞன். “யேய் பெரிசு பாத்தியா .ரண்டு தரம் கூப்டியே ,திரும்பினாரா.அதா(ன்) இந்த எடதுக்கெல்லாம் வரமாட்டேன்குறேன். மூதி .சும்மா கிடடா .பெரிசா பேச ஆரம்பிச்சுட்டான் .இந்த கொழுப்பெடுத்ததனத்தை படிப்புலே காட்டமுடிலே.சாமி நாலு பேரோட பேசிட்டிருக்காரில்லே .ஒரு அஞ்சு நிமிசம் சவக்களையா கிடந்தா என்ன கேடா? முன் […]

கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்

This entry is part 24 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

The Boy in the Striped Pyjamas கோடு போட்ட பைஜாமா அணிந்த பையன் எனும் நாவல் 2006 ல் ஐரிஷ் எழூத்தாளர் ஜான் போய்ன் என்பவரரல் ஏழுதப்பட்:டு 2008 ல் வெளி வந்தது. இதனை சமிபத்தில் தொலைகாட்சியில் பார்த்தேன் மனதை பிசைந்து விட்டது. பட ஆரம்பத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் 3 சிறுவர்கள் தங்களது விருப்பப்படி விளையாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிறுவனின் பெயர் புருனோ அவனது தந்தை ஜெர்மனியின் மீது அளவில்லா பற்றுடைய […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4

This entry is part 23 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா  தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “உணவு, உடை, வீடு ஆகியவற்றை மனித ஊழியத்தால் உண்டாக்க முடியும்.  ஆனால் அவை உண்டாக்கப் பட்ட பிறகு களவாடப் படலாம்.  குதிரையைக் கையாளுவது போல் நீ மனிதரை நடத்தலாம்.  அதிகாரப் பலத்தால் உன் கை ஓங்கி அவரை நீ ஆட்டிப் படைக்கலாம்.  அல்லது அவரது உரிமையை நமக்காகத் தியாகம் செய்வது அவரது மதக் கடமை என்று விதிமுறை போதித்துக் கட்டுப்படுத்தலாம்.” […]

நாளை ?

This entry is part 22 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காத்திருக்கும்  இறுதி கொண்ட  வாழ்வை மற்றவர்கள்  தீர்மானிக்க  என் பிறப்பின்  உறுதி  இருள் கொண்ட  ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள்  கட்டளை இடும்  முன்னரே  மறுத்துவிடுகிறது  சுய ஒளி. அதன்  நிறப்பிரிகை  கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை  என் பருவங்கள்  கூட  அறிந்திருக்கவில்லை . குற்றசாட்டின் உண்மை  குற்றங்களில்  ஒருபோதும்  இருந்ததில்லை  சட்டங்கள் இயற்றும்  மேதமையில்  இருக்கபோவதில்லை  மனிதம் மறக்க  செய்யும்  மனித நேயத்தில்  மலிந்து கிடக்கிறது . மக்களின் பெருங்கூட்டம் இரைச்சலின் மிகுதி  வருத்தம் கொள்ளும்  அன்பின் பரிதவிப்பு […]

மொழிபெயர்ப்பு

This entry is part 21 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   –          இலெ. அ. விஜயபாரதி

கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 20 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  1715ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளும், மேல் ஆலோசனை சபையினரும் கூடியிருந்தனர்: குற்றவாளியாக அவர்கள் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தவர் நைனியப்பிள்ளை. கண் துடைப்புபோல நடந்தேறிய ஆலோசனைக் குழுவினரின் விசாரணைக்குப் பிறகு ஏற்கனவே எழுதிவைத்திருந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது.   “குற்றவாளியான நைநியப்பிள்ளை 50 சவுக்கடிகள் தோளில் பெறவேண்டுமென்றும், மூன்று வருஷம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும், 8888 வராகன்களைப் பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்திற்கு (அப்போதெல்லாம் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற […]

ஆர்வம்

This entry is part 19 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

தேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் பென்சில் எடுக்கக் கூட அவன் அம்மாவை விரட்டியவன் தேர்வு முடிந்ததும் பாட நூல்களை அலமா¡¢யில் நேர்த்தியாக அடிக்கி வைக்கிறான் புத்தகங்களை அடுத்த ஆண்டு இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்கிறான் புத்தகங்கள் அவனை மிரட்டியிருக்கும்போலும். உருவேற்றுவதில் இருந்து மீண்டு வந்தவன் படிப்பதற்கு எந்த உதவியையும் இதனை நாளும் எதிர்பார்க்காதவன் விளையாட்டுத் திடலை நோக்கி […]

வாக்கிங்

This entry is part 18 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார்.  இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.  இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது.  இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது?  பக்கத்து தெருவிலிருக்கும் அவருடைய ஜவுளிக் கடைக்கே காரில்தான் போவார். இப்பக் கூட டாக்டர் காண்பிச்ச அந்தப் படம் மனக்கண்ணில் வந்து நின்றது. அதாவது இரத்தக் குழாயில் கொழுப்பு அடைச்சா எப்படியிருக்கும், அது இதயத்தை எப்படி […]

எங்கே போகிறோம்

This entry is part 17 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  திகைக்கின்றன திகார் கம்பிகள்- ஊழலும், எதிர்ப்பும் ஒரே சிறையில்.. போதி மரமே போதையில் தள்ளாட்டம்.. காணாமல்போய்விட்டது காந்திஜியின் கைத்தடி.. எங்கே போகிறோம் நாம், மறுபடியும் கற்காலத்திற்கா- ஏழை இந்தியன் புலம்பல் !         -செண்பக ஜெகதீசன்  ..