இடறல்:- *********************** ஹாய் செல்லம் மிஸ்யூடா அச்சுறுத்துகிறது., குறுங்கத்திகளாய் கண்களைக் குத்துமுன் மடக்கிக் குப்பையில் போடும்வரை. யாரும் படித்திருக்கக் கூடாதென எண்ணும்போது அப்ப உனக்குப் பிடித்திருக்கிறதா என்ற கேள்வி கத்தி முனையாய் இடறிக் கொண்டே. சகிப்பு:- ************* கர்ண குண்டலங்களைப் போல கனமாக இருந்தாலும் கழட்டி வைத்துவிட முடிவதில்லை அவைகளை. அறுத்தெறிந்தாளாம் மறத்தமிழச்சி பால்குடித்தவன் வீரனில்லை என்பதால். வீரன் கை வைத்தாலும் வெட்டி எறிய முடிவதில்லை மார்பகங்களையும் கைகளையும் நாய்கள் தின்னும் பிணமானதால். கசியும் வியர்வையூடான […]
நாளுக்கு நாள் கூட்டிக் குறைத்து சிரித்தாலும் வாயை அகல விரித்து சிரித்தாலும் பிறையாக வளைத்து சிரித்தாலும் முகம் முழுக்க விரிய சிரித்தாலும் மற்றவர்கள் நம்மோடு சிரித்தாலும் சிரிக்காமல் புறக்கணித்தாலும் சிரிப்பானது எல்லோருக்கும் குளுமையாக்த்தான் இருக்கிறது. சதா புன்னகைத்துக் கொண்டே இருக்கும் நிலவை பார்த்துத்தான் சொல்கிறேன்.
மற்றுமொரு இரவு உறக்கத்தை வரவழைக்க முஸ்தீபுகளில் ஈடுபட வேண்டியுள்ளது மது புட்டிகளின் சியர்ஸ் சத்தங்களைத் தவிர இரவு அமைதியாக இருந்தது அன்று பகலில் சந்தித்தவர்களில் சில நபர்களின் முகங்களே ஞாபகத்தில் இருந்தது படுக்கையை பகிர்ந்து கொள்ள பணத்தை நீட்ட வேண்டியுள்ளது எதையாவது செய்து தன்னிலை மறக்க வேண்டும் தன்னைப் பற்றிய சிந்தனை தற்கொலைக்கு தூண்டுகிறது அவமானங்களும், உதாசீனப்படுத்தல்களும் குறுவாளால் வயிற்றைக் கிழிக்கிறது மரண சர்ப்பம் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது மது அருவியில் என்னை நனைய […]
வலியில்லாமல் தொ¢த்த தசைகள். நிண ஆற்றை உருவாக்கிய தேகம். வீச்சம் நாறிய மூளை. விஸ்வரூபம் எடுத்த உன்னால் இனியும் வாழக் கற்கிறேன். நடு ரோட்டில் கால் நைந்து போன தவளையைப் பார்த்து. Chandrasekaran S.s.n.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பரிதியை மிக்க நெருங்கிய சிறிய அகக்கோள் புதக்கோள் ! நாசா அனுப்பிய மாரினர் முதல் விண்ணுளவி புதன் கோளைச் சுற்றி விரைந்து பயணம் செய்து ஒரு புறத்தை ஆராயும் ! நாசாவின் இரண்டாம் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் புதன் கோளை இரு புறமும் சுற்றி முழுத் தகவல் அனுப்புகிறது இப்போது. பரிதி சுட்டுப் பொசுக்கும் கரிக்கோள் புதக்கோள் ! பாறைக் குழி மேடுகள் பற்பல நிரம்பியது ! உட்கரு உருகித் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “காரணங்களுக்குச் (Reason) செவி சாய்ப்பவன் மெய்யறிவுக்குச் சரணடைகிறான். காரண மெய்யறிவோ தன்னை ஆளுமை செய்ய வலிமை இல்லாத பலவீன மனத்தை எல்லாம் அடிமை ஆக்குகிறது.” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Man & Superman) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, […]
பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க இருக்கிறது. திரைப்படத்தின் குறுகிய வடிவமான குறும்படம் போல நாடகத்தின் மிக குறுகிய வடிவமான குறு நாடகங்கள் தமிழ் ஸ்டுடியோ மூலம் தொடர்ந்து நிகழ்த்தப்படவிருக்கிறது. பதிற்றுப் பத்து எனும் இந்த அமைப்பு வீதி நாடகத்திற்கான களமாகும். […]
இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய ‘மழை நதி கடல்’ என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ வாய்த்திராத பாலைவன ரியாத் மாநகரில் டூலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம் அமைப்பினர் சார்பாக நடைபெற்றது. சவூதி அரேபியாவிற்கான இலங்கை துணைத் தூதர் திருவாளர். எ. ஷபருல்லாஹ் கான் சிறப்பு விருந்தினராகவும் ரியாத்திலுள்ள இராணுவ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு. எம்.எம். ஷஹீத் சிறப்புப் பேராளராகவும் கலந்து […]
நள்ளிரவுக் கருமை; மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச் சிரிக்கும் சுடரு. விரிவான் விரிவெளி. ‘புதிர் நிறை காலவெளி. வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு. பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமை. பன்முறையெனினும் மீறி வியப்பதற்கெதுவுண்டு. படியளக்கும் படைத்தவரே! படைத்ததேன்? பகர்வீரா? அறிவுத்தாகம் மிகுந்த அலைவு; தாகசாந்திதான் எப்போது? அலையெனப் பரவும் நிலை வரும் வரையிலா? என்று வருமந்த நிலை? அன்றி ‘அதிவெளி’ கடக்கும் ஆற்றல் வரும் வரையிலா? என்று வருமந்த ஆற்றல்? ngiri2704@rogers.com
கணையாழி 1965ல் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் எனக்கு அது பார்க்கக் கிடைத்தது. உடனே சந்தா அனுப்பி வைத்தேன். அப்போது அதன் விலை 40 பைசா தான். அதோடு, முதல் இதழிலிருந்தே வாங்கிச் சேகரிக்கும் என் வழக்கப்படி, விட்டுப்போன இதழ்களைக் கேட்டு ஆசிரியர் கஸ்தூரிரங்கள் அவர்களுக்கு எழுதினேன். சில இதழ்களே கிடைத்தன. எஞ்சியவற்றை அதன் சென்னை அலுவலகத்தின் பொறுப்பாளரான திரு.அசோகமித்திரன் அவர்களிடம் கேட்டு, அவரும் அன்போடு, விட்டுப் போனவற்றைத் தேடி வாங்கி அனுப்பினார். பிறகு சென்னைக்கு கஸ்தூரிரங்கன் அவர்கள் […]