தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

         கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும்.          பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்  எடுக்கும் பொறுப்பும் பாட்டியுடையதுதான். அப்படி எடுக்கும் போது என்னை வெண்ணெய் உருண்டைகளை உண்ணச் சொல்வார். வெண்ணெய் உருக்கி நெய் எடுப்பார். நெய் மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.அதோடு முருங்கைக் கீரையைச் சேர்த்து உருக்கினால் அதன் மணமும் சுவையும் தனி!       […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 90

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு -2)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ செல்லும் பாதை மேல் நான் நடந்த பொழுது சுற்றிலும் நான் பார்த்தேன்; நீ மட்டுமின்றிப் பிறரும் அங்கிருந்தார் ! தெரியாதவை கூட அங்கிருப்பதை நம்பினேன் ! இங்கிருப்பவை நினைவிற் கொள்ளும் ஆழமான பாடங்கள் ! தனிப்பட்ட இச்சை இல்லை […]

காத்திருத்தலின் வலி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

தாயின் கருவறையிலிருந்து விட்டு விடுதலையாகும்போதும் மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கான பெரும்கனவுகளுடன் நிற்கும்போதும் படித்தவற்றையெல்லாம் தேர்வு அறையில் கொட்டி விட்டு முடிவுக்காக காத்திருக்கும்போதும் ஊரே கூடியிருக்கும் இடங்களில் அன்புக்குரியவரின் வருகைக்காக ஏங்கித்தவிக்கும்போதும் வேலைவாய்ப்பிற்காக ஆண்டுக்கணக்கில் கிடைக்குமென்று நம்பிக்கொண்டிருக்கும் போதும் திருமணச்சந்தையில் வரன்தேடி இளமை அழிந்தொழிந்து உழைத்து ஓடாக தேயும்போதும் பிள்ளைவரம் வேண்டி கோவில்கோவிலாக அலைந்துதிரியும்போதும் என்னுள் உண்டாகும் வலி நீ உணர வாய்ப்பில்லை ஏனென்றால் நீதான் இன்னும் இம்மண்ணில் வந்து பிறக்கவில்லையே! அமுதாராம்

பாஞ்சாலியின் புலம்பல்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  ஒரு அரிசோனன்   நான்தான் பாஞ்சால நாட்டின் இளவரசியான பாஞ்சாலி; துருபத மன்னனின் மகளான திரௌபதி; கருப்பாக இருப்பதாலும், கார்மேக வண்ணனான கண்ணனால் உடன்பிறப்பாக ஏற்கொண்டதாலும், கிருஷ்ணை என்றும் அழைக்கப்பட்டவள். பெண்மையைப் போற்றும் பெருந்தகையாளர்களே! நீங்கள் ஏன் என் பக்கம் பேசுவதில்லை? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா என்று பேசும் உங்கள் கூற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்று, ஐந்து கணவர்களைக் கொண்டேனே, அதை ஏன் நீங்கள் பாராட்டிப் பேசுவதில்லை? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்த […]

கண்ணீரைக்கசியவைத்த நூல் – திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   சில எழுத்துப்பணியின் காரணமாய்ப் படிப்பது கொஞ்சம் அண்மையில் தடைபட்டது. விளைவு படிப்பதே நின்றதுபோல் ஒரு பிரமை ஏற்பட்டது. என்ன செய்வது ? ஏற்றுக்கொண்டதை முடிக்கவேண்டுமே என்ற அக்கறை ஒருபுறம். நேரத்தை வீணாக்காமல் எழுதிகொண்டுதானே இருகிறோம் என்ற சமாதானம் மறுபுறம். நீடிக்கும் இந்தமனநிலையில் கைக்குக்கிடைத்த நூல் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் திரு த. ஸ்டாலின்குணசேகரன் எழுதிய ‘மெய்வருத்தக் கூலிதரும்’ என்ற வானொலி உரைநூல். அண்மையில் நடைபெற்ற பத்தாவது ஈரோடு […]

நுனிப்புல் மேய்ச்சல்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   எங்கள் வீட்டுக்கால்நடைகள் எப்போதும் பார்த்தது வைக்கோல்தான்   தும்பை அவிழ்த்து கட்டுத்தறியைவிட்டு சுதந்தரமாய் மேய பச்சைப்புல்வெளிநோக்கி ஓட்டினேன்   வரப்பிலிருந்து இறங்கி ஒன்றும் ஒழுங்காய் மேயவில்லை   பச்சைப்புல்வெளி கண்களைக்கவர்ந்தும் இச்சையின்றிக் கால்நடைகள் இங்கும் அங்கும் திரிந்தன   சுற்றிச்சுற்றி வந்தன இறங்கிமேயவில்லை   அடித்து விறட்டி இறக்கிப்பார்த்தேன் இம்மிகூட அசையவில்லை   அப்போதும் நுனிப்புல்லையே மேய்ந்தன   பசும்புல் பார்த்தும் நுனிப்புல் மேயும் கால்நடைகளை வைத்துக்கொண்டு புல்வளர்த்து என்ன […]

வால்மீனை முதன்முதல் நெருங்கிய ஐரோப்பிய விண்ணுளவி ரோஸட்டாவின் தளவுளவி வால்மீனில் இறங்கப் போகிறது.

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.esa.int/spaceinvideos/Videos/2013/10/Rosetta_s_twelve-year_journey_in_space http://www.dailymail.co.uk/sciencetech/article-2715387/Rosettas-best-view-Esa-releases-incredible-images-comet-just-620-miles-away-spacecraft-closes-in.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=swNXPxqgW_w பரிதிக் கருகில் சுற்றும் வால்மீனைநெருங்கி ஈசா விண்ணுளவிமுதன்முதல் தளவுளவி ஒன்றை இறக்கப் போகுது  !வால்மீன் உற்பத்தி செய்யும்வளையத் தட்டை சில்லி விண்ணோக்கி கண்டுபிடித்தது ! முந்திரிப் பருப்பு போல்தோற்றம்  !வளையத் தட்டில் வடை போல்மையத்தில் துளை ! அழகு முகம் காட்டி, வால்மீன்வழிபடும் பரிதியை,வாலைப் பின்னே தள்ளி !வயிற்றுக் குள்ளே உறைந்து விட்ட உயிரின வளர்ச்சிக்கல்லறைகள் !தூரத்தில் பரிதி  ஒளிக்கனல் குன்றவால்மீன் […]

வல்லானை கொன்றான்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ?       சில்லென் றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்       வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்       வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக       ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை       எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்         வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றாழிக்க       வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். திருப்பாவையின் பதினைந்தாம் பாசுரம் இது. இப்பாசுரம் அருமையான நாடகப் பாணியில் அமைந்துள்ளது. பாசுரம் […]

ஆறில் ஒரு பங்கு – நிறைவுப் பகுதி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

“மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று.  அதன் பின்னிட்டு அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடு நாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது? மீனாம்பா? – அட, போ! மீனாம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே? …..  ஐயோ எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள்?  ….. ” என்பதாக ஒரு க்ஷணத்திலே […]

12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு – ஜெர்மனி

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

அன்புடையீர், வணக்கம். 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2014 அக்டோபர் 4,5 ஆம் தேதிகளில் ஜெர்மனியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அறிவிப்பு மடல் இணைப்பில். உலகத் தமிழர் பண்பாடு, கலை, கலாச்சார, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக உலகளாவிய தமிழ்க்கல்வி புலம் பெயர் தமிழர்கள் தமிழர் சமயமும் வழிபாடும் தமிழர் நாகரீகமும் தமிழ்க் கலைகளும் தமிழ் மரபுகள் தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள் […]