என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க “இது முடிவில்லை” என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால் வியர்த்தெழுந்த போது என் அருகில் அமர்ந்திருந்தாள் ‘இருள் எப்போதும் தோற்றமே” என்றாள். மற்றொரு நாள் மௌனமாய் அருகில் “இந்தக் காயங்களை உடனே உன் சக்தியால் ஆற்றக் கூடாதா?” “மானுட உடல் இன்பம் துன்பம் இரண்டையும் அனுபவிக்கும். நீ மானுடனே” புன்னகைத்தாள் தைரியம் கூடி ஒரு நாள் “நீ ஏன் […]
கவிஞர் இரா.மாரியப்பன் தமிழ், ‘இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்’ என மூன்று பிரிவுகளை உடையது. இவற்றுள், நாடகத்தமிழ் மட்டுமே படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி அனைவராலும் விரும்பக்கூடியது; ரசிக்கக்கூடியது. அதனால்தான் விடுதலைப் போராட்டக் காலங்களில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் வள்ளி திருமணம், பாஞ்சாலி சபதம் போன்ற நாடகங்களின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினர். இது அனைவரும் அறிந்ததே. இன்றும்கூட திரையுலகில் முகம்காட்டியவர்களே நாட்டை ஆள்கின்றனர். இதோடு மட்டுமா? நடிகை குஷ்புவுக்குக் கோவில் கட்ட முயற்சி எடுத்ததுவும், நடிகர்களது […]
தினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான். “மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்” என்றான். “எங்க அப்ளே பண்ணீங்க ?” “ஆன்லைன்ல” “ஆன்லைன்ல பண்ணதெல்லாம் இங்க வராது, 25 ரூபாய் பணம் கட்டி, […]
கனவு இலக்கிய வட்டம் ————————————————– டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார். ” சாயத்திரை ” நாவல் “ ரங்க […]
டேவிட் பார்கவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே வீச்சாய்ப் போய்க் கொண்டிருந்தாள் அவள். அந்தப் பின்பக்கத்திலிருந்து இவன் பார்வை அகலவேயில்லை. மனசு ஏங்கியது. துடித்துத் துவண்டது. பிடி கொடுக்கவே மாட்டேன் என்கிறாளே? தவியாய்த் தவிக்க விடுகிறாளே? அப்படியே கட்டிப்பிடித்து சாய்த்து, மடியில் இருத்திக் கொண்டு கைகளை இஷ்டம்போல் விளையாட விட வேண்டும் என்று துடிக்கிறது மனசு. . அத்தனையும் இன்று ஏமாற்றமாகிப் போனது. மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டிருப்பாளோ? கண்களையே அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தாளே? உள்ளபடி காட்டிவிடுமே […]
இரா. ஜெயானந்தன். சாதிமத பேதங்கள் வேரோடு களைய மாமழையே வருக ! மனிதமன மாசுகள் முற்றிலும் அகல மாமழையே வருக ! ஏழை பணக்காரன் எண்ணங்கள் ஒழிய மாமழையே வருக ! இந்து முஸ்ஸீம் கிருத்துவம் இணய மாமழையே வருக ! இளைய நெஞ்சங்களின் இணப்பகம் அறிய மாமழையே வருக போலி அரசியல் முகமூடிகள் கிழிய மா மழையே வருக ! உண்மை அரசியல்தோன்றி ஊழ்கள் ஒழிய மா மழையே வருக ! மனிதம் என்றொரு மாமேரு […]
சென்னையில் டிசம்பர் 16 (இன்று) சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத ராணுவத்தைப் பாரட்டியது. விழாவில் பங்கு கொண்ட கர்னல் ப்ரதீப் குமார் சென்னை வெள்ளதில், ஒவ்வொரு நகரவாசியும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ததை கவனத்தில் கொண்டு வந்தார். சென்னை மக்களின் ஒடோடி வந்து உதவி செய்யும் மனப்பான்மை நம் நாட்டிற்கே முன்னுதாரணம் என்று கூறினார். மேலும், பலர் விடுமுறை எடுத்து, கட்டுபாடாக சேவை பணியில் ஈடுப்பட்டது பாரட்டுதலுக்குரியது. Lt. Col. திரு ராஜா பிள்ளை […]
வளவ. துரையன் அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த முதலைகள் கரையேறி யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்சியளித்தன. தடாகத்தின் மீன்கள் தங்களைப்போன்று முதல் அவதாரம் எடுத்தவன் வரும்போது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் துள்ளிக் குதித்தன. காய்ந்த தேக்குமர இலைகள் மெதுவாகச் சத்தமிடும் வண்ணம் அவற்றின் […]
ம.ராதிகா முனைவர் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46 முன்னுரை ஒரு மொழிக்கு இன்றியடையாத இலக்கணப்பிரிவு வினைச்சொல்லாகும். வினைச்சொல்லானது ஒரு பொருளின் படைப் பெயர்ச்சியைக்(Movement) காட்டும். இப்புடைப் பெயர்ச்சி நடைபெற்றதாகவும் இருக்கலாம், கற்பனையாகவும் இருக்கலாம். வினைச்சொல் வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காலத்தைக் காட்டும். இதனால் வினைச்சொல்லைப் பொதுவாகக் காலக்கிளவி என்பர். வினைச்சொல்லுக்கு ஜெர்மன் மொழியில் (Time wood) காலக்கிளவி என்று பெயர் வழங்குகிறோம். வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது. தமிழில் வினைச்சொற்களின் தன்மைகளை நன்கு […]
நந்தன் ஆ இப்பொழுது தான் விழித்தேன் விர்ர் என்று பறந்திட ஓடினேன் பறக்க முடியவில்லை ? திரும்பிப் பார்த்தேன் என் இறக்கைகளை காணவில்லை என் இறக்கைகள் இருந்த இடத்தில் அவை பியிக்கப்பட்டதற்க்கான அடையாளம் மட்டுமே இருந்தது ஆ! என் இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது ! யார் பியித்தார்கள் என்று கேட்டேன் பதில் ஏதும் இல்லை என் இறக்கைகளை காணவில்லை என் இறக்கைகள் ! எல்லை என்ற ஒன்றையே அறியாத என் இறக்கைகள்! எங்கே அவை ? தேடினேன் ! […]