நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும் இரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு ஐந்துகிலோ உபரியாக க் கிடைக்கப் போவதில்லை. ஒரு பக்கம் பகலில் முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த […]
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்கமுடியாது என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) நானோடு நான் போய்க்கொண்டிருக்கிறேன். தொலைந்துபோன கைப்பேசிக்குள் சிலவும் செயலிழந்துபோன கைப்பேசிக்குள் சிலவுமாய் கண்காணிப்புக்காமராக்கள் காலாவதியாகிவிட்டன. எல்லாநேரமும் என்னைப் பின் தொடர்ந்துகொண்டிருந்த உளவாளிக் குறுஞ்செய்திகள், கண்றாவி விளம்பரங்கள், கையறுநிலைக்குத் தள்ளும் வந்த வராத அழைப்புகள், பார்த்த மாத்திரத்திலேயே பிச்சைக்காரியாக உணரச்செய்யும் எண்கள், நினைத்த நேரமெல்லாம் நான் கேட்காமலேயே திரையரங்குகளிலோடும் புதுப்படங்களைப் பட்டியலிடும் பாக்ஸ்-ஆபீஸ் லாண்ட்லைன் எண், பாட்டுக்கேள் என்று பிடிவாதம் பிடிக்கும் எண், தொலைவின் தொலைவை எண்ணி அலைக்கழிக்கவைக்கும் அண்டார்ட்டிகா அலைபேசியெண், ஆணாயிருந்தால் பெண்வேண்டுமா […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா (விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் ) இலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன் ஆழியில் பானைகள் செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலாதாரக் கரு எங்கே கர்ப்ப மானது ? கருவின்றி, தூண்டலின்றி உந்துவிசை யின்றி உண்டாகுமா ? அருவமாய்க் கரும்பிண்டம் கடுகு அளவில் அடர்த்தியாய் இருந்ததா ? பெருவெடிப் பின்றித் தாவிப் பாய்ந்து விரிவதா பிரபஞ்சம் ? கருவை வடிவாக்க […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி 1.மகப்பேறின்மை. பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத் துறையிலா வசன வாவி துகிலிலா கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. இது தரும் பொருளாவது, அடக்கமிலாத அறிவினாலும்,துய்க்கப் படாத இளமையாலும்,நீராடுவதற்கான படித்துறைகள் இல்லாத தாமரைகள் மலர்ந்த குளத்தினாலும்,ஆடையிலாது புனைந்த அழகினாலும்,தேன்துளிர்க்கும் மலர்களால் தொடுக்கப்படாத மாலையினாலும் மேன்மேலும் கற்றுப் பெருகிடாத புலமையாலும்,நீரரண் எனும் அகழியால் சுற்றப் படாத நகரத்தினாலும் (ஏரி, குளம், […]
வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. ஆணை விடப் பெண் வேறு சில வண்ணங்களுடன் அழகாக இருக்கும். பெண்குருகின் வாலில் 26 முதல் 28 இறகுகளும், ஆண் பறவையின் வாலில் 14 முதல் 16 இறகுகளும் இருக்கும். நிலத்தில் இருக்கும்போது இது […]
டாக்டர் ஜி. ஜான்சன் 201. நல்ல செய்தி நாடகத்தை எழுதி, அதை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்தபின்பு மருத்துவமனை ஊழியர்களிடையே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதிலும் தாதியர் பயிற்சி மாணவியர்கள் என்னை ஒரு கதாநாயகனாகவே பார்க்கலாயினர். பால்ராஜ் , கிறிஸ்டோபர் ஆகியோருடன் சேர்ந்தபின்பு நான் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்களின் மீது இரக்கமும் அன்பும் கொண்டு பழகலானேன். ஒரு மருத்துவர் அவர்களின்மேல் பரிவுடன் இருப்பது அவர்களுக்கு உற்சாகத்தையே தந்தது. அவர்களில் சிலர் தங்களுக்கு உள்ள குறைகளை என்னிடம் […]
டாக்டர் ஜி. ஜான்சன் எஸ் .எல். இ . என்பது ” சிஸ்டமிக் லூப்பஸ் எரித்திமேட்டோசிஸ் ” ( Systemic Lupus Erythematosis ) என்பதின் சுருக்கம் இதை பல உறுப்புகளின் அழற்சி எனலாம். இதில் செல்களின் நூக்கிளியஸ் என்பதற்கு எதிராக எதிர்ப்பு சக்தி அல்லது ” எண்டிபாடி ” என்பது இரத்தத்தில் உருவாகும். இது ஒரு வினோதமான நோய்தான். இது பெரும்பாலும் 20 முதல் 40 வ்யதுவரையுடைய பெண்களை அதிகம் தாக்குகிறது. உல கில் சுமார் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ உன்னை ஊடுருவி நோக்குகிறேன் ! சென்ற தெங்கே சொல் ? உன்னை அறிந்ததாய் எண்ணினேன், உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு ? வேறாகத் தெரிய வில்லை ! ஆயினும் மாறி விட்டாய் நீ ! உன்னை ஊடுருவி நோக்குகிறேன் ! முன்பு போல் இல்லை நீ. உன்னுதடுகள் ஏதோ முணுமுணுக்கும், என் செவிகள் கேளா ! மென்மை யானது உனது குரல் ! ஆயினும் தெளிவாய் இல்லை […]