அன்புடையீர் வணக்கம் இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014 நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின் சிறந்தபங்களிப்பைவேண்டுகிறோம். உடன்அனுப்பி வைக்க அறிவிப்புமடல் உங்கள் பார்வைக்கு மீண்டும் தங்கள் நண்பர்களிடத்திலும் சொல்லுங்கள் தங்குவதற்கு செட்டி நாடு பாரம்பரியம் சார்ந்த வீடும் மனம் நிறைய வரவேற்பும் வயிறுநிறையசெட்டிநாட்டு உணவும் கொண்டு கம்பன் தமிழைக்கற்போம். Displaying k1.jpg
ஜனவரி 6 2002 அரசாங்க ரௌடிகள்- காலச்சுவடு கண்ணன்- நாகர்கோவிலில் அனுமதி பெறாத கட்டிடங்கள் மற்றும் அரசு நிலத்தில் உள்ள கட்டிடங்கள் என பெரிய இடிப்பு நடந்தது. அதை ஒட்டி கண்ணன் காட்டமாக எழுதியிருக்கும் கட்டுரை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20201061&edition_id=20020106&format=html ) XXX தொல்காப்பியம் -ஜெயமோகன் நா.விவேகானந்தன் என்னும் ‘தமிழறிஞர்’ தொல்காப்பியத்தை ஆராய்ந்து அது ஆண் பெண் உறவு பற்றிய காமரசம் மிகுந்த நூல் என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்கு பல ‘தமிழறிஞர்கள்’ வாழ்த்துரை வேறு எழுதி இருக்கிறார்கள். […]
மகாபாரதத்தில் உள்ள உத்தியோக பர்வம் தண்டனைகள் பற்றியும் மன்னிக்கும் மாண்பு குறித்தும் உள்ள உரையாடல்கள் நிறைந்த பகுதியாகும். இதே பர்வத்தில் அதிகாரம் குறித்தும் அதனை முறையாக பயன்படுத்தும் விதம் குறித்தும் கூறப் படுகிறது. ஒரு சமூகம் அதன் குற்றவாளிகளை இரண்டு விதமாக நடத்துகிறது.ஒன்று குற்றவாளியின் குற்றங்களை மறந்து மன்னிப்பது. மற்றொன்று அவர்களது குற்றங்களுக்கு தண்டனை அளிப்பது. அதற்காக அனைத்துக் குற்றங்களுமே மன்னிக்கப் படுமாயின் மொத்த சமூக அமைப்பும் நிலைகுலைந்து போய் விடும்.மாற்றாக அனைத்துக் குற்றங்களையும் தண்டிக்க என்று […]
ஹாங்காங் கை தாக் விமான நிலையத்தில் வந்திறங்கினான். அவனை அழைத்துச் செல்ல வில்லி சான் வந்திருந்தார். வழியெல்லாம் சான் நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றியும், புரூஸ் லீயை விட நன்றாக நடிக்க முடியாவிட்டாலும் அவன் பேரில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, அவனைக் கதாநாயகனாகப் போட உள்ளதாகவும் சொல்லிக் கொண்டே வந்தார். மூன்று வாரத்திற்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த லோ வெய் நிறுவனத்திற்கு, சானை வில்லி அழைத்துச் சென்றார். லோ வெய்யிடம் சானை அறிமுகப்படுத்தினார். […]
அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய விமர்சன அரங்கிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். ஆறு முக்கிய எழுத்தாளர்கள் இவ்வரங்கில் விமர்சிக்க இருக்கிறார்கள். வாய்ப்பிருப்பின், இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள். இத்துடன் விமர்சன அரங்கிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்கள், தெரிந்த/அறிந்தவர்/வாசகர்/ஊடக வட்டங்களில் பகிர்ந்து […]
தொன்மங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துதல் என்பது நவீன இலக்கியத்தின் ஒரு கூறாகவே தற்போது இருந்து வருகிறது. அவற்றைக் கட்டுடைத்துப் பார்த்து அப்படி உள்ளே புகுந்து பார்ப்பதன் வழியாய் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் நல்ல கருத்துகள் கிடைக்குமா என்பதே ஒரு தேடல் முயற்சியாகும். புதுமைப் பித்தனின் ’ சாப விமோசனம் ‘ தொடங்கி இம்முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆனால் இது நவீன இலக்கியப் படைப்பாளிக்கு பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. அந்தச் சவாலில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் […]
வில்லவன் கோதை இயல்பாகவே தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும் மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள் கற்பனை வளமும் மிகுந்தவர் களாகவே இருந்திருக்கவேண்டும். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக நிறைந்து கிடக்கிற நீதி நூல்களும் இலக்கிய குவியல்களுமே இதற்கு சான்றென கருதுகிறேன். ரசனை மிகுந்தவராக இருப்பதால்தான் ஒரு காரியத்தை ஆஹ..ஓஹோ என்று பாராட்டுவதும் இன்னொரு காரியத்தை த்தூ..து என்று நிராகரிப்பதும் எப்போதுமே இந்த சமூகத்தில் நிகழ்கிறது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்…! தலையாலங்கானத்து […]
அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில் நமட்டுச் சிரிப்பை உதிர்ப்பாள். இப்போதைய வார்த்தைகளில் இருந்த கோபமான நிராகரிப்பு அவன் உடம்பைக் குறுகச் செய்த்து. வேர்த்து விறுவிறுத்திருந்த பனியன் சட்டையை கழற்றியிருந்தான். இடுப்பு உள்ளாடையைக் கழற்ற எத்தனித்தபோது அவன் லுங்கியின் நுனியை வாயில் கவ்வியிருந்தான். ஆனால் அது ஏனோ நழுவி அவனை நிர்வாணமாக்கியிருந்தது. ஜெயபால் […]
Pinched Nerve எந்த நரம்பும் அழுத்தத்திற்கு உட்பட்டால் அதன் செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகி, வலியும், மதமதப்பும், தசைகளின் பலவீனமும் உண்டாகும். இதைத்தான் நாம் பொதுவாக நரம்பு தளர்ச்சி என்கிறோம் . இந்த அழுத்தத்தை நரம்பு கிள்ளப்படுவதாக ( pinching ) வேறு விதத்தில் கூறப்படுகிறது. இவ்வாறு நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாவது, அல்லது கிள்ளப்படுவது பல்வேறு காரணங்களால் உண்டாகலாம். கர்ப்பம், காயம், திரும்ப திரும்ப தொடர்ந்து செய்யும் செயல், மூட்டு நோய் போன்றவை […]
நா.பா. என்னும் இரெண்டெழுத்துச் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்ட அமரர் திரு. நா. பார்ததசாரதி அவர்களின் மறைவு நாள் டிசம்பர், 13 ஆகும். அவருடைய சமுதாய நாவல் குறிஞ்சி மலர் கல்கியில் வெளியான போதும், வெளியான பின்னரும் புதிதாய்ப் பிறந்த தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு அந்தப் புதினத்தின் நாயகியின் பெயரான பூரணி என்பதைப் பல பெற்றோர் சூட்டி மகிழ்ந்தார்களாம்! அதே போல் அதன் நாயகன் அரவிந்தனின் பெயரும் பல குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டது. (இதே போல், பேராசிரியர் அமரர் […]