திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும் “ கனவு” இலக்கிய இதழுக்கு […]
(1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு போன வல்லரசு அரக்கர் பின் சென்று பாரத அன்னைக்குப் பேரழிவுப் போரா யுதத்தை ஆரமாய் அணிவிக்க லாமா […]
“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை. ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த […]
அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh.htm என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மாதம் இருமுறை (11 மற்றும் 26 ஆகிய தேதிகளில்) தங்களுக்கு தகவல் வந்து சேரும். படித்துப் பயன் பெற வேண்டுகிறோம். வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை தெரிவிக்கவும். நன்றி. குறிப்பு: பாரதியாரின் பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் முழுமையாக தொகுத்து நமது இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தலைவர், பாரதி சங்கம், தஞ்சாவூர்
மெல்ல என்னை இழந்து கொண்டிருந்தேன் திடுமென வீசிப்போன புயலில் தன்னருகதை இழந்த சிறு துகள்களாய் என் ஒட்டு மொத்தமும் ஒடுங்கி விட்டிருந்தது வீசியெறிந்ததொரு அலையின் எதிர் நீச்சல்காரனாய் சிதைந்த உடம்புகளோடும் இழந்த துடுப்புகளோடும் அந்நிகழ்வுகளின் அரூபங்கள் வழியே பின் தொடர வேண்டியதுள்ளது. முற்றுமாய் தங்கள் மௌனங்கள் களைந்த என் வார்த்தைகளை சிலர் பறித்துக் கொண்டிருப்பார்கள் இன் முகமாய் முன் இளித்து என் பித்தட்டு வழியே ரகசியங்களை பை நிறைய திணித்துக் கொள்வார்கள் பலர் ஒரு ஓரமாய் ஒடுங்கிய […]
எழில் இனப் பெருக்கம் மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]
வீட்டில் சகுனங்களில் நம்பிக்கை இருந்திருக்கலாம் குறுக்கே போன கருப்புப் பூனை சாக்கில் ஐந்து நிமிடங்கள் கூடுதலாய் இருந்திருக்கலாம்.. பொம்மைக்கூட்டத்திலிருந்து பிரித்து கொணரப்பட்ட குழந்தையொன்றைக் கைப்பிடித்து நடத்திவருவதைப் போலிருக்கிறது நான் இழுத்துவரும் ட்ராலி, என் நடையின் நேர்கோட்டுக்குப் பின்னால் உருண்டுவந்தபடி.. “செல்போன் சார்ஜர் எடுத்து வச்சியா?” “பனியா இருக்கு, ஸ்வெட்டர் போட்டு போ” அக்கறைக்குரல்கள் துரத்தல்களாய்க் கேட்க பிரியாவிடைபெற்று நடக்கிறேன், விடிந்தால் விரியும் மீண்டுமொரு விடுதி நாள்..
தேர்வு மையத்திற்கு கூட வரவில்லை என்றால் அப்பாவுக்கு என் மேல் அக்கறை இல்லை கூடவே சென்று நிழல் பார்த்து உட்கார சொன்னால் ஏன் அப்பா இப்படி படுத்தறீங்க என்று சடைத்து கொண்டாள் என் மகள் மகள் என்றாலும் பெண்தானே புரிந்து கொள்ள முடியவில்லை
றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான். கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் ‘ஷொப்பிங் பாக்’கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில […]
கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் இருத்தி ஒரு திசையைத் தேர்ந்தெடுத்து மேற் செல்லலும் தரும் பாதுகாப்பு இணையற்றது. இந்தப் பத்திரமே ஒரு சிறை மற்றும் தன்னளவில் ஒரு தேக்க நிலை என்னும் பரிமாணம் தென்படும் தருணம் ஆன்மீகத்தின் துவக்கமாக அமைகிறது. அனேகமாக அது ஒரு கர்வ பங்கம் அல்லது கையறு நிலையினின்று பிறக்கும். அப்படித் துவங்கும் ஆன்மீகம் பிடிபடும் கால […]