டெம்போரல் லோப் என்பது என்ன? படத்திலிருப்பது மூளையின் பல பகுதிகள். ஒவ்வொரு பகுதியும் ஒரு லோப் என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் டெம்பில் temple என்பது http://en.wiktionary.org/wiki/temple நெற்றிக்கு பக்கவாட்டில் கண்களுக்கு பின்னால் இருக்கும் இடம். இந்த இடத்தில் இருக்கும் மூளையின் பகுதி டெம்போரல் லோப் என்று அழைக்கப்படுகிறது. உடலின் உணர்வு தளங்கள், கண், மூக்கு, வாய், தோல் ஆகியவை இந்த பகுதிக்கு தன் நரம்புகளை அனுப்பிகொடுக்கின்றன. இந்த மூளை அந்த உணர்வுகளை பொருளுள்ளதாக மாற்றுகிறது. […]
“வாடா சூரி…என்ன டூரெல்லாம் போயிட்டு வந்தாச்சா?” – உறாலில் அமர்ந்து தினசரிச் செய்தியில் ஆழ்ந்திருந்த கணேசலிங்கம் கேட்டார். தயக்கத்துடனேயே நுழைந்த சூரிய நாராயணன் என்ற சூரிக்கு முதலாளியின் யதார்த்தமான அழைப்பு சற்று தெம்பைக் கொடுத்தது. என்னடா ஒரேயடியா பதினைஞ்சு நாள் லீவு கேட்குற? அப்புறம் கடையை யார் பார்த்துக்கிறது? என்று சலித்துக் கொண்டவர் இன்று சாதாரணமாய் அழைப்பது சற்று நிம்மதியைக் கொடுத்தது. கடையைப் பார்த்துக் கொள்ள என்று இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவனின் இருப்பு […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் … எது எப்பிடியானாலும் நம்ம ஜாஸ்பர் கிப்சன் தான் முதன் முதலில் ஓபரா மற்றும் உச்சஸ்தாயி பாடகரின் முகவரி அட்டைகளிலும் ‘அட் ஹோம்’ என கூட இடம் பிடித்த முதல் எழுத்தாளர். ஆக அவர் நமது திருமதி பார்த்தன் திரஃபோர்டின் பிரதம விருந்தாளி என அழைப்பு பெறாமல் எப்படி? அவர் கலந்துகொள்ளும் ஓபரா நிகழ்ச்சிகளின் முன்வரிசையில் அவள் இடம்பிடித்தாள். என்றாலும் அது கௌரவ நுழைவுச்சீட்டு அல்ல, கைக்காசு கொடுத்துப் போய் அமர்ந்தாள். […]
முட்டாளுக்குச் செய்த உபதேசம் ஒரு காட்டுப்பிரதேசத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றிருந்தது. அவை குளிர் காலத்தில் அசாத்தியக் குளிரால் வாடிக்கொண்டிருந்தன. இரவில் ஒரு மின்மினிப் பூச்சியைக் கண்டன.. ‘அது நெருப்புத்தான்’ என்று அவை எண்ணி அதைச் சிரமப்பட்டுப் பிடித்து, காய்ந்த புல்லையும் இலைகளையும் போட்டு அதை மூடிவிட்டன. பிறகு தங்கள் கைகளையும், வயிற்றையும், மார்பையும், விலாப்புறத்தையும் அதன்முன் நீட்டிக் காட்டிச் சொறிந்துகொண்டபடியே மானசீகமான உஷ்ணத்தை அனுபவித்து இன்படைந்தன. அவற்றில் ஒரு குரங்கு குளரில் ரொம்பவும் வாடியதால் அதிலேயே […]
கவிஞர் குட்டி ரேவதியின் ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் நூல் வெளியீட்டு விழா நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:30 மணிக்கு. இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர். சிறப்பு அழைப்பாளர்கள்: அழகிய பெரியவன் பாலை நிலவன் யாழன் ஆதி தமயந்தி அஜயன் பாலா நர்மதா ப்ரவீண் & குட்டி ரேவதி எந்த அதிகாரத்தோடும் சமரசம் கொள்ளாமல் இயங்கும் பெண் பாலியல் மொழியைக் கொண்டாடுகிறது, தமிழ் ஸ்டூடியோ! இந்த இயக்கத்துடன் வாசகர்களே […]
Learn Hindu Vedic Astrology Level : Beginner Duration : Jan 14th – Apr 14th 13 Classes Time : Saturday 4 pm to 6 pm Location : South Brunswick By : Jyothidarathna S. Chandrasekaran (author of Neegalum Jothidar Aagalam) $250 /- Medium : Tamil / English Contact : (732) 444 2237 / chandru_soma@yahoo.com http://www.tamiloviam.com/site/?p=2161
செங்காளி பொழுது புலரும் நேரத்தில் ஒரு சிற்றூரில் எழும் ஓசைகளெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து எப்படி பூபாளம் என்னும் பண்ணில் பாடுவதைப்போல் இருக்கின்றது என்பதைச் சொல்லும் பாடல்கள் —————————————————————————————————– பொழுதும் புள்ளினமும் கொக்கரக் கோவெனக் கோழிகள் கூவிட காக்கைகள் ஒருசில காவெனக் கரைந்திட குருவிகள் கூட்டம் கீச்செனக் கத்திட இருள்தான் மெதுவாய் இளகிடும் நேரம் வெள்ளி முளைக்குமிவ் விடியற் காலையில் மெல்லென கிராமம் முழித்திடும் வேளையில் பண்ணை வீட்டில் பட்டியில் தொட்டியில் என்னதான் நடக்குதென எட்டிப் பார்ப்போம் அவளும் குடும்பமும் கிழவன் எழுமுன் கிழத்தி எழுந்து நழுவின சேலையை நன்றாய்க் கட்டி அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து தொழுதபின் கண்களில் தாலியை ஒற்றி […]
கே.எஸ்.சுதாகர் ஷோபனா நிலைக்கண்ணாடி முன் நிற்கின்றாள். தன் ஆடைகளை சரி செய்தவாறே அழகு பார்க்கின்றாள். பிறை நிலவிற்குள் செந்நிறப்பொட்டு. முகமெங்கும் மெல்லிதாக அரும்பி நின்று மினுப்புக் காட்டும் வியர்வைத் துளிகள். லிப்ஸ் ஸ்டிக்கில் கூரிய செவ்வாய். நீலநிற சுடிதாரில் அழகாய்த்தான் தெரிந்தாள். சரி! பார்த்தது போதும் என்று தனக்குள் எண்ணியவாறே பின்னால் திரும்புகின்றாள். “எப்படிடா செல்லம்! நான் வடிவா இருக்கிறேனா?” பதில் இல்லை. ஆடைகளைக் களைந்துவிட்டு அடுத்த உடுப்பை மாட்டுகின்றாள். எல்லாம் புத்தம் புதிதான பளிச்சென்ற விலையுயர்ந்த […]
அருண் காந்தி ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு… இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம் வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு. நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.கேக்குறியா நீ? யேட்டி!யேட்டியோவ்…வாணி… ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்? இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா? அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் […]
அக் கிராமத்தின் சிற்றோடைக் கரையோரம் கால் முட்டிப் பாகம்வரை செஞ்சேற்றினுள் அமிழ்ந்து.. தேகமெங்கும் சகதித் தீற்றுடன் மல்லாக்கக் கிடந்தது அச்சிலை… கண்களிலும் உதட்டிலும் புன்னகைப் பூவிரிக்க கச்சை கட்டிய கூர் முலையும், வடிவேயான இடையுடனும் .. யாரையோ எதிர் நோக்கிக் காத்திருக்கும் பாவனையில் … இடக்கை நாடி தாங்க வலக்கை இடையில் வைத்து காத்திருக்கும் அச்சிலையின் கை விரல்கள் சிலவற்றை காணவில்லை.. உடைந்தவை உதிர்ந்திருக்கலாம்…. அற்புதமான அச்சிலை எக்காலம் செய்ததென்றோ எப்படியங்கு வந்ததென்றோ யாருக்கும் தெரியவில்லை… வயதான ஒருவர் சொன்னார் … தன் சிறு பிராயத்தில் கரையோரம் நின்றிருந்து.. காலப் போக்கிலது நிற்க முடியாமல்ப் படுத்ததென்று… யாரோ துப்பிய வெற்றிலை எச்சில் உறை ரத்தம் போல் தலைக் கிரீடத்தில்… சிதைந்துக் கொண்டிருப்பது வெறுமொரு கற்சிலயல்ல… சிந்தையுள் காதலுடன் .. யாரையோ நினைவிலேற்றி மனமுழுக்க வடிவமைத்து விரல்கள் வழி மனமிறக்கி உளிகளில் உயிர் கொடுத்து பலநாட்கள் பாடுபட்டுச் செய்தெடுத்த … எக்காலமோ வாழ்ந்திருந்த ஓர் அற்புத சிற்பியின் காதலுடன் கூடிய கலையும், உழைப்பும் கூடத்தான் … – பத்மநாபபுரம் அரவிந்தன்-