அன்புமிக்க வாசகர்களே, நைல் நதி நாகரீகம் என்னும் எனது நூலைச் சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் வெளியிட்டுள்ளார். 4000 ஆண்டுகட்கு முன்பே சீரும், சிறப்பமாய்ச் செழித்தோங்கிய ஃபாரோ மன்னர்கள் ஆட்சியின் கீழ் அமைக்கப் பட்ட பிரம்மாண்டமான பிரமிடுகளின் கணிதப் பொறியியற் கலைத்துவக் கலாச்சாரத்தைப் பற்றிய நூலிது. நைல் நதி நாகரீகம் பற்றிய கட்டுரைகள் தொடர்ந்து திண்ணையில் வெளிவந்தவை சி. ஜெயபாரதன், கனடா
3 சுதாகர் ராஜா, தங்கள் அரண்மனைக்கு வந்து பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கேட்டது, அவன் எதிர்பார்க்காதது. ஏனென்றால் அவன் அப்படி ஒரு பரிகார பூஜையோ, யாகமோ இதுவரை நடத்தியது இல்லை. ராஜ குடும்பம் என்றால் அவர்களிடம் ஏகப் பட்ட தங்கம், பணம் இருக்கும். உண்மையில அந்த நகைப் பெட்டியை கண்டுபிடிச்சு கொடுக்க முடியுதோ இல்லியோ, அந்த நகைப் பெட்டியை தேடறதுக்காக பூஜை, யாகம் செய்யறதா சும்மா சொல்லி, பூஜை செலவு, தட்சிணைங்கிற பேர்ல […]
https://youtu.be/_7pZAuHwz0E சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ சுழலும் புவிக் கோளைச் சுற்றும் நிலவின் பின் முகத்தை நாசா துணைக்கோள் முதன்முதல் படமெடுக்கும் ! இதுவரை தெரியாத பின்புறம் இப்போது கண்படும் ! சைனா 2020 இல் நிலவின் பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும். அண்டவெளிப் பயணம் செய்து விண்வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மறுபடி மண்மீது கால் வைத்தார் சைன விண்வெளித் தீரர் ! அமெரிக் காவின் விண்வெளி […]
திண்ணை வாசகர்களுக்கு ஜூலை 17 தேதியிட்ட திண்ணை பிரசுரிக்கப் படவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறோம். பின் தேதியிட்ட சில இணைப்புகள் செயல்படவில்லை. சரிசெய்ய முயல்கிறோம்.
அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்
( சொர்ணபாரதியின்,”எந்திரங்களோடு பயணிப்பவன்”, நூலினை முன் வைத்து) வாழ்க்கை, சம்பவங்களால் கட்டமைக்கப் படுகிறது.சம்பவங்கள்,துக்கங்களாலும் சந்தோஷங்களாலும் கட்டமைக்கப்படுகின்றன. சந்தோஷங்களும் துக்கங்களும் சில வேளைகளில் நம்மாலும் பல தருணங்களில் நம் கட்டுப்பாட்டை மீறியும் நிகழ்கின்றன. நிகழ்பவை எதுவாயினும் எதிர்கொள்ளும் கட்டாயத்தைக் காலம் நமக்கு வழங்குகிறது.வழியில்லை;எதனையும் எதிர்கொண்டேதீர வேண்டும்.மகிழ்ச்சியின் போது துக்கத்தை எதிர் கொள்ளும் அவகாசமாயும் துக்கத்தின் போது மகிழ்ச்சியை எதிர்கொள்ளும் நம்பிக்கையாயும் உணர்வெழுச்சியை எதிர்கொள்வது இயல்பாகிறது.அது போலவே,கவிமனம், கவிதையின் வாயிலாகவே சந்தோஷத்தை சுகிக்கவும் துக்கத்தைத் துடைக்கவும் முயற்சிக்கிறது.அந்த முயற்சியின் பலனாய் […]
திரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் மேகத்திற்கு மீண்டும் செல்லும் கொட்டும்பனி போன்று அற்பாயுளில் மறைந்த ஆளுமையின் நாட்குறிப்பும் தொலைந்தது. முருகபூபதி – அவுஸ்திரேலியா ” செ.கதிர்காமநாதன் பட்டப்படிப்பு முடிந்ததும் இலங்கையின் பிரபல்யமான பத்திரிகை நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இக்காலம் மிக இக்கட்டான காலம். தக்க ஊதியமே இவருக்கு கிட்டவில்லை. எழுத்தாளரான இவருக்குக் கிடைத்த மாதச்சம்பளத்தையே சொல்லத்தயங்கினார். தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று வருந்தினார். மனம் […]
ப.கண்ணன்சேகர் திரையுலக தேசத்தில் திக்கெட்டும் கொடிபறக்க தேன்தமிழின் நாயகனாய் தெளிவான நடிப்பாற்றல்! விரைந்தோடும் வாழ்க்கையில் வெற்றியை நிலைநாட்டி வியப்பூட்டும் நடிகனாய் விளங்கிய படைப்பாற்றல்! தரைதட்டா கப்பலென திரையுலக வாழ்விலே தரமிக்க படங்களை தந்திட்ட உழைப்பாற்றல்! நரைத்திட்ட வயதிலும் நயாகரா நகரத்தின் நல்லாட்சி தந்தையென நடத்திய சிறப்பாற்றல்! விடுதலை தியாகிகளின் வீரத்தைக் நேரிலே வெண்திரையில் காட்டிய வெற்றிமகன் சிவாஜி! மிடுக்கென தோற்றத்தில் மெருகேற்றும் பாத்திரங்கள் மிளிர்ந்திட திரையிலே மீட்டியவர் சிவாஜி! அடுக்குமொழி வசனங்கள் அழகுடன் பேசியே அன்னைதிரு […]
” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். ‘ அசடு ‘ , ‘ கிரகங்கள் ‘ ஆகிய இரு நாவல்களின் ஆசிரியர். பயம் , நிச்சயமின்மை , சலிப்பு ஆகியவை இவரது கவிதைகளில் மேல் தூக்கலாகத் தெரியும் உணர்வுகள். மாணவனாக இருந்த போது மார்க்ஸாக உலகத்தைப் பார்த்தவர் 63 […]
அடையாள அரசியல் என்பதெல்லாம் பெரிய சொல்வழக்கு… அடையாளம் என்று சுருக்கிக் கொண்டு பார்த்தால் கூட கதிர்பாரதியின் முகம் எதிலும் தென்படாது – கவிஞர், பத்திரிக்கையாளர் என்பதைத் தவிர. ஒரு முக்கிய இலக்கியப் பரிசுத்தேர்வில் இருந்தபோது வேதாகம், அதன் தொன்மக்குறீயீடுகள், விவிலிய மாந்தர்களின் பெயர்கள் சரளமாய் அவரின் கவிதைகளில் தென்படுவதைப்பார்த்து ஒரு மூத்தப் பேராசிரியர் அவரின் அடையாளம் பற்றி கேள்விகள் எழுப்பினார். ஆ.செங்கதிர்செல்வன், கதிர்பாரதி என்ற பெயர்களையே முணுமுணுத்தேன். ஆனால் அவர் வேறெதையோ தேடிக்கண்டடைந்தார். அந்த “ […]