மத்திய கிழக்கின் நாத்திக பிரச்சாரகர்

This entry is part 20 of 20 in the series 26 ஜூலை 2015

நான்ஸி ஏ யூசூப் இஸ்லாமிய அடிப்படைவாததால் வரையறுக்கப்படும் பிரதேசத்தில், இஸ்மாயில் முகம்மது தனது கொள்கையான “கடவுள் இல்லை” என்பதை உரத்து கூறுகிறார். அவர் தனியர் இல்லை என்பதையும் கண்டு வருகிறார். இஸ்மாயில் முகம்மது யூட்யூப் வழியாக மத்திய கிழக்கு மக்களை நாத்திகத்தின் பக்கம் திருப்ப முயற்சி செய்துவருகிறார். மூன்று வருடங்களுக்கு முன்னால், 30 வயதான முகம்மது இஸ்லாமை துறந்தார். அன்றிலிருந்து தனது புது கொள்கையை பற்றி உரத்து கூறவும் பரப்பவும் முயன்றுவருகிறார். அவர் தனது யூட்யூப் சேனலாக […]

காற்றுக்கென்ன வேலி – அத்யாயம் 1 (குறுந்தொடர் )

This entry is part 19 of 20 in the series 26 ஜூலை 2015

உஷாதீபன் ——— அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி இவன் சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாயில்வரை பார்த்தான். மனம் […]

ஜெர்மனி கிறிஸ்துவர்கள் மீது விதிக்கப்படும் கட்டாய சர்ச் வரி காரணமாக ஏராளமான கிறிஸ்துவர்கள் சர்ச்சுகளிலிருந்து வெளியேறுகின்றனர்

This entry is part 1 of 20 in the series 26 ஜூலை 2015

ஜஸ்டின் ஹக்லர் ஏறத்தாழ 400000 ஜெர்மானியர்கள் தாங்கள் புராடஸ்டண்ட் சர்ச்சுகளிலிருந்தும் கத்தோலிக்க சர்ச்சுகளிலிருந்தும் விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். ஜெர்மானிய அரசாங்கம் சர்ச்சுகளுக்கு பணம் வழங்க, பங்குகளிலிருந்து பெறும் லாபத்துக்கும் 8 இலிருந்து 9 சதம் வரைக்கும் இந்த சர்ச் டாக்ஸ் பெறப்படும் என்று அறிவித்ததே இதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான ஜெர்மன் கிறிஸ்துவர்கள் அதிகாரபூர்வமாக கிறிஸ்துவத்திலிருந்து விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். சென்றவருடம் மட்டுமே 200000 ஜெர்மானியர்கள் தாங்கள் புராடஸ்டண்ட் சர்ச்சிலிருந்து விலகுவதாக எழுதிகொடுத்துள்ளனர். இது கடந்த 20 ஆண்டுகளில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்கள் […]

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழா

This entry is part 3 of 20 in the series 26 ஜூலை 2015

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `அறுவடைகள்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, தாயக ஒலி ஆசிரியர் திரு தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக இலண்டன் இலக்கிய நிறுவகத்தின் தலைவர் வவுனியூர் இரா உதயணன் அவர்களும் […]

தொடுவானம் 78. காதல் மயக்கம்

This entry is part 4 of 20 in the series 26 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் சென்னை மெரினா புஹாரி உணவகம் பல வகைகளில் சிறப்புமிக்கது. அது மெரினா கடற்கரையில் அமைந்துள்ளதால் கடல் காற்று ஜிலுஜிலுவென்று வீசும். உணவகம் சுத்தமாக இருக்கும். நல்ல வரவேற்பும் கிடைக்கும். நான் சென்ற ஆண்டில் அடிக்கடி அங்கு சென்றுள்ளதால் அங்குள்ள சிப்பந்திகளுக்கு என்னைத் தெரியும். அதோடு அவர்களுக்கு நிறையவே ” டிப்ஸ் ” தந்துள்ளேன். நாங்கள் தனி அறையில் அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கோழி பிரியாணி கொண்டுவரச் சொன்னோம். புஹாரி பிரியாணி தனிச் சுவை […]

மிதிலாவிலாஸ்-27

This entry is part 5 of 20 in the series 26 ஜூலை 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன்       tkgowri@gmail.com காலையில் சித்தூ விழித்து பார்க்கும் போதே ஊரிலிருந்து அன்னம்மா வந்து விட்டிருந்தாள். பையை உள்ளே கொண்டு போட்டவள், “ரமாகாந்த் திரும்பவும் துபாய்க்கு போய் விட்டான். அவன் மாமியார் வீட்டில் என்னை இருக்கச் சொன்னான். அவன் அந்தப் பக்கம் போனானோ இல்லையோ, அவன் மாமியார் இது என்ன சத்திரமா சாவடியா என்று அடிக்க வந்து விட்டாள். ஒரு வாய் காபி கூட கொடுக்கவில்லை. இருந்தாலும் வளர்த்து ஆளாக்கியவள் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ்

This entry is part 6 of 20 in the series 26 ஜூலை 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 500 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். Note: Children Cultural Group is producing a radio programme. Please listen to our programme on RTHK and […]

போராடத் தயங்குவதோ

This entry is part 7 of 20 in the series 26 ஜூலை 2015

பாவலர் கருமலைத்தமிழாழன் குடிநீர்தான் வரவில்லை என்றால் ஊரே கூடியொன்றாய்ப் போராட்டம் நடத்து கின்றீர் வடியாமல் மழைநீர்தான் தெருவில் நின்றால் வரிசையாக நின்றுகுரல் கொடுக்கின் றீர்கள் செடிகொடிகள் மண்டிசாலை பழுது பட்டால் சேர்ந்தொன்றாய் செப்பனிடக் கேட்கின் றீர்கள் குடிகெடுக்கும் மதுதடுக்க மட்டும் ஏனோ குரல்கொடுக்க இணையாமல் ஒதுங்கு கின்றீர் ! தெருநடுவில் வைத்திருக்கும் கடையில் ; கோயில் தெருவினிலே விற்கின்ற கடையில் ; பள்ளி தெருவினிலே நடத்துகின்ற கடையில் ; நாளும் தெருவிருப்போர் நடக்கின்ற காட்சி கண்டும் திருவான […]

கேள்வி பதில்

This entry is part 8 of 20 in the series 26 ஜூலை 2015

– சேயோன் யாழ்வேந்தன் கேள்வி எதையாவது கேட்டுக்கொண்டுதானிருக்கிறது பதில் எதற்கும் பதிலளிக்காத போதும் ஆதியில் ஒரு கேள்வி ஒரு பதில்தான் இருந்ததாம் ஒரு கேள்வி விளங்காமல் இத்தனை கேள்விகள் ஒரு பதிலும் விளங்காமல்தான் இத்தனை பதில்கள் – கேள்வி தான் பதில். பதில் கேள்வி கேளாமல் போ. seyonyazhvaendhan@gmail.com

மறுப்பிரவேசம்

This entry is part 9 of 20 in the series 26 ஜூலை 2015

சிறகு இரவிச்சந்திரன். நானும் ‘தண்ணி வண்டி’ தங்கராசும் ஒண்ணா படிச்சவங்க. ஒரு நாள் ஓல்டு பாய்ஸ் மீட்டிங்லே தங்கராசுதான் இதைப் பத்தி பேசுனான். ‘அவனுக்கு செம கிக்கு’ மணிவண்ணன் சொன்னான். நமக்கு மட்டும் இல்லையான்னு நெனைச்சுகிட்டேன். பொறியியற்கல்லூரிலே படிச்சுட்டு தனியார் கம்பெனிகள்லெ வேலை பார்க்கிற எங்களுக்கு கிடைக்காத ‘கிக்’கா. அதனால ஏற்படுற மன வருத்தத்திலே நாங்க போடாத ‘பெக்’கா. ‘இல்ல மாம்ஸ் நமக்குன்னு ஒரு எடம் வேணும்.ஜாலியா பேச , தண்ணியடிக்க’ எல்லோரும் அவனைப் போல நித்திய […]