சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்ச அகண்ட வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தாய் நாமறிந்தது, ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது நிலவு ! புவிக் குழியில் நிரம்பும் கடல்நீர் ! பரிதியின் ஒளிக்கதிரில் பகல் இரவு மீண்டும் எழும் ! உயிரினம் தோன்றிப் பிழைத்ததும் பயிரினம் வளர்ந்ததும் மயிலினம் பறந்ததும் புழுவினம் ஊர்ந்ததும் ஒரே ஒரு […]
ஜோதிர்லதா கிரிஜா எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் புதிதாக ஓர் இளைஞர் வேலையில் சேர்ந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். என்றோ படித்தவற்றை யெல்லாம் சொல்லுக்குச் சொல் நினைவுகூரும் ஆற்றலும் படைத்தவர். முக்கியமாய்த் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகளை எல்லாருக்கும் சொல்லித் தாம் இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கும் தன்மையுள்ளவர். வேலையில் சேர்ந்த பின் வந்த முதல் ஜூன் மாதம் முதல் தேதியன்று, ”இன்றைக்கு என் பிறந்த நாள்!” என்று சொல்லிக்கொண்டு என் இருக்கைக்கு வந்து சாக்கலேட் கொடுத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு […]
வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில் வெளிப்பார்வை கிடைக்கிறது. தொலைநோக்கி வசதியும்கூட இருந்தது. கணிசமான சுற்றுலாப்பயணிகள் பரந்து காணப்பட்டனர். அந்த மேற்பரப்பின் வடதிசையில் ஒரு பழம்பெரும் கோயிலும் ஒரு பெட்டிக்கடையும் காணப்பட்டது.அந்த சின்னஞ்சிறு கோயில் கேரள பழங்குடியனர் வழிபடும் ராமசாமிகோயிலாம் ஆண்டின் […]
முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 6 மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 21, 22, 23, 24. இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி வாழைத் தண்டு கலவை கீரை மணத்தக்காளி கீகீகீகீகீரெய்ய்ய்ய்ய்….. என்று ராகமாய் செவி தீண்டிய வார்த்தைகளில் கண்விழித்தேன். நேற்று பிலிட் [B. Litt] பட்டப் படிப்பிற்கான பாட இலக்கணத் தேர்வு. நேற்று இருந்த பதட்டம் இன்று இல்லை. வெகு நேரம் கண் விழித்துப் படித்ததில் கண் எரிந்தது. புத்தகம் வாங்கிய போதிலிருந்தே படித்திருக்க வேண்டும். இதென்ன சாகுற நேரத்துல சங்கரா சங்கரான்னு என்று இடித்துரைத்த மனதை அதட்டியது மற்றொரு மனம். தேர்தல் வேலை இருந்தது. […]
சு.மு.அகமது தினம் காகிதப்பூக்களை உயிர்ப்பிக்கிறேன் மகரந்த துகள்களின் வாசத்தை சிறை பிடிக்கிறேன் ஆனால் எனக்குள் விஞ்சியிருக்கிறது தோல்வியின் எச்சங்கள் அலகுகளால் எண்ணப்படும் மிச்சங்கள் பயத்தீற்றல்கள் சாம்பலின் சாயல்கள் இனிப்பின் கசப்பறியா ஊடகங்கள் எங்கோ வேர் பதித்திருக்கிறது சோம்பலின் பிரதிகள் பதியனில்லா பொதிகள் தோல்வியின் இரணங்கள் முடிவுரைக்கு முகவுரை தேடும் முகங்களே வாசத்தை பூசுங்கள் என் காகிதப்பூக்களில் ! – சு.மு.அகமது
மீனாள் தேவராஜன் தமிழர்கள் நாம் ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவே விரும்புகிறோம். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு பல ஆண்டுகளாக இருந்ததன் பலனாகும். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்கள் நமக்குத் தேவையா?’ என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதே இல்லை. அவன் பேசுகிறான் ,நான் பின்பற்றுகிறேன். இது நாகரிகம் என்று நினைத்து நடைபோடுகிறது, தமிழகம். ஆடை அலங்காரம்; ஆங்கிலேயர்களைப் போல் ஆடை அணியதான் விரும்புகிறோம். வெளியே ஓரிடத்திற்குப் போக வேண்டுமென்றால் பாண்ட் சட்டை போட்டு ஆண்கள் கிளம்புகிறார்கள். அதுவும் […]
கதவுப்பிடிகளின் மீது வேகம் போலி நாசூக்கு தராதரம் சிலர் மட்டும் காட்டும் உரிமை அதிகார மைய அறைகளில் செயலாகப் பசையாக புழங்கும் வீட்டு வாசற் கைப்பிடியும் அவ்வாறே. அது அடிக்கடி அசையும் அமையும் சத்தம் அதிகமென்னும் அலட்டல் பாசாங்கே கைப்பிடிகளைத் தேடாதவன் வெறுங்கை வீசி வேகமாய் நடக்கிறான் வேற்றுக் கிரகம் நோக்கி இரவும் பகலும் சில சமயம் குழம்பியதாய் அசை போடும் நினைவும் நிகழும் மயங்குவதாய் எப்போதோ அசையும் கைப்பிடியில் தனக்கேதுமில்லை என்னும் தெளிவான புரிதலில் மௌனித்திருப்பார் […]
வளவ. துரையன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் வாலி வதைப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது. வாலியும் சுக்ரீவனும் போர் புரிவதைக் கம்பர் அப்பாடலில் கூறுகிறார். “தந்தோள் வலிமிக்கவர் தாமொரு தாய்வயிற்றின் வந்தோள் மடமங்கை பொருட்டு மலைக்க லுற்றார் சிந்தோ[டு] அரியொண்கண் திலோத்தமை காதல்செற்ற சுந்தோப சுந்தப்பெயர்த் தொல்லையி னோருமொத்தார்” [கிட்காந்தா காண்டம்—274] இப்பாடலில் கம்பர் உவமையாகக் கூறும் ஒரு வரலாறு அவர்தம் புராண அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். ”தமது தோள்வலியால் மிக்கவர்களும், ஒருதாயின் […]
சத்யானந்தன் கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்- ஆசாரகீனன் செப்டம்பர் 2, 2005 இதழ்: தாராளவாத வேடம் போடுவதில் கனடாவுக்கு இணையாக எந்த மேலை நாட்டையும் கூற முடியாது. இணைப்பு இருப்புத் தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்- வெங்கட் சுவாமிநாதன்- வங்காளத்துக்கு ரவீந்திரர் எதைச் செய்தாரோ அதையே சுப்பண்ணா கர்நாடகத்துக்குச் செய்தார். இணைப்பு நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை- நாகூர் ரூமி- எல்லாவற்றையும் படைத்த அல்லாவை யார் படைத்திருப்பார்? இணைப்பு செப்டம்பர் 9, […]