அத்தைமடி மெத்தையடி

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

த்லுலுலுவ்வாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ.. என்று குட்டிக் குழந்தையை மடியில் இட்டு கே ஆர் விஜயா தாலாட்டும்போது நாமும் குழந்தையாகிவிடமாட்டோமா என்றிருக்கும். இந்தப் பாடலை இன்று என்றில்லை கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு வயதிருக்கும் பார்த்த அன்றிலிருந்தே அப்போதிலிருந்தே அப்படி ஒரு பைத்தியம் இந்தப் பாட்டின் மீதும் கே ஆர் விஜயாமீதும். எனக்கு மூன்று அத்தைகள் உண்டு. அதில் இரண்டாம் அத்தைக்கு கே ஆர் விஜயா சாயல் அதிகம் இல்லாவிட்டாலும் அந்த சுருட்டை முடி உண்டு. […]

துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட இரண்டாம் ஆண்டு விழா

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

துபாய் : துபாயில் எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் இரண்டாம் ஆண்டு விழா ஜூன் 6ம் தேதி மாலை வெகு விமரிசையாக நடைபெற்றது. துவக்கமாக எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட துணை முதல்வர் மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருமதி மீனா சிவராமன் வந்திருந்து வாழ்த்தினார். எமிரேட்ஸ் தமிழ்ப் பள்ளிக்கூட முதல்வர் நாகப்பன் பள்ளியின் சிறப்பு குறித்தும், வளர்ச்சி குறித்தும் இப்பணிக்கு கலிஃபோர்னியா தமிழ்க் […]

மையல்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஸ்வரூப் மணிகண்டன்  தேய்பிறை நிலவில் எரிகின்றது காடு. நிலவெரித்த மிச்சத்தை சேர்த்து வைக்கும் எனது முயற்சிகளை முடிபோட்டுத் திரிகொளுத்துகிறது உன் அருகாமை. காட்டில் தொலைவதற்கும் காடே தொலைவதற்கும் உள்ள வேறுபாட்டை யோசிக்க விடாமல் தற்பொழுதில் நின்று திரிகிறது காலம்.

மணவாள  மாமுனிகள்  காட்டும்  சீர்மாறன்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

  வளவ.  துரையன் திருவாய்மொழி  நூற்றந்தாதி  என்பது  ஸ்ரீமத்  மணவாள  முனிகள்  அருளிச்  செய்துள்ள  பிரபந்தமாகும்.  அதில்  48-  ஆம்  பாடலை  மிக  முக்கியமானதாகக்  கருதுவார்கள்.அப்பாசுரம்  இதுதான். ”ஆராவமுதாழ்வார்  ஆதரித்த  பேறுகளைத் தாராமை  யாலே  தளர்ந்துமிக—தீராத் ஆசையுடன்  ஆற்றாமை  பேசி  அலமந்தான் மாசறு  சீர்மாறனெம்  மான்” இப்பாசுரத்தில்  நம்மாழ்வாரை  “மாசறு  சீர்மாறன்”  என்று  மணவாள  மாமுனிகள்  குறிப்பிடுகிறார்.  மேலும்  இப்பாசுரம்  திருவாய்மொழி  ஐந்தாம்  பத்தின்  எட்டாம்  திருவாய்மொழிப்  பாசுரங்களின்  பொருள்களைச்  சுருக்கமாக  எடுத்துக்  கூறுகிறது. இப்பாசுரத்துக்கு  பிள்ளைலோகம்  […]

தண்ணீர்கள்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

    சத்யானந்தன்   குழாயில் ஒன்று கிணற்றில் வேறு அருந்தும் கோப்பையில் பிரிதொன்று தண்ணீர்கள் தானே?   மறுதலித்தார் பின் மௌனமானார் என்னுடன்   மூன்று கைத் தோழனாய் மின்விசிறியையே வெறித்திருந்தார் இறுதி நாட்களில்   துண்டுப் பிரசுரங்களாய் அவர் பதித்த பாடல்கள் எங்கே மறைந்தன?   சுருதி மாறாத மின் விசிறிச் சொல்லாடலை அவதானிக்கும் பொழுதுகளில் அவர் நிழலாடுகிறார்   இதன் தோழமை அவரின் இலக்கணமில்லை

பிரான்சு கம்பன் கழக மகளிர் விழா அழைப்பிதழ்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

மகளிர் விழா அழைப்பிதழ் அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற ஐந்தாம் ஆண்டு மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  நாள்: 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை இடம்: L’Espace Associatif des Doucettes, rue  du Tiers Pot (à côté Collège Henri Wallon 95140 Garges les Gonesse அன்புடன் திருமதி சிமோன் இராசேசுவரி தலைவர்: கம்பன் கழக மகளிரணி திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் செயலாளர்: கம்பன் கழக மகளிரணி திருமதி லெபோ லூசியா பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி மற்றும் கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள் கம்பன் கழகத்தினர் – பிரான்சு http://francekambanemagalirani.blogspot.fr http://bharathidasanfrance.blogspot.fr

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 80 (1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Earth, My Likeness) (I dreamed in a Dream) 1. எனக்குப் பிடித்த பூகோளம் 2. கனவுக்குள் கனவு கண்டேன் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1. எனக்குப் பிடித்த பூகோளம். நான் விரும்பும் பூமியே ! ஓய்ந்தது போல் தோன்றினும் உருண்டு திரண்ட பெருங்கோள் நீ ! […]

மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..   28,06,2014 அன்று மாலை 06.30. மணிக்கு இலக்கியவீதியின்,   இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்-   மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..   தலைமை: திரைப்பட இயக்குநர் திரு ஞான, ராஜசேகரன். இ.ஆ.ப.   சிறப்புரை: முனைவர் கல்யாணராமன் அவர்கள்..                     (பேராசிரியர் -நந்தனம் கலை அறிவியல் கல்லுரி..)    விருதாளர்: எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்..   ஒருங்கிணைப்பு: […]

காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை அமைக்கிறோம் என்பதில் முதலில் தீண்டாமை இல்லாத தேசத்தை அமைத்தல் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் திருமலை தன்னுடைய காந்தி தேசம் என்ற நூலில். புதிய தரிசனத்தில் வந்த பதினான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு காந்தி தேசம் என்ற நூலாக 2013 இல் வெளிவந்திருக்கிறது. பரபரப்புத் தகவல்களையும் சினிமா நிகழ்வுகளையும் எளியமக்களின் அந்தரங்க வாழ்வையும் பலர் காணக் கேலிக்கூத்தாகப் […]

ஆட்டம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான். கு.அழகர்சாமி