இரு கவிதைகள்

This entry is part 7 of 9 in the series 7 ஜூன் 2020

  பிராட்டி   1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 ‘சிரிச்சால் போச்சு’ என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும் என. என் பெண்கள் எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். உலகம் அதுபாட்டிற்கு நடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. 3 பெண்ணைக் காபந்து செய்வதாக நடிக்கிறார்கள் என்று நீ நினைக்கும் பிஜேபியை உனக்குப் பிடிக்கவில்லை என்றால்  […]

பாலின பேத வன்முறை ( Gender Based Violence )

This entry is part 8 of 9 in the series 7 ஜூன் 2020

ஜனவரி 16.. 2020 .டாக்கா நகரம் பொங்கல் தினம் , தமிழர்களின் திருவிழா. தமிழ்நாட்டில் பொங்கல் கொண்டாடுவது குறித்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஊரிலிருந்தால் பொங்கலை விரும்பி சாப்பிட்டு இருக்கலாம் என்று நினைத்தேன் , நேற்று தொழிற்சங்க வாதியும்  பின்னலாடை துறை சார்ந்த போராளியுமான கல்பனோ அத்தர் அவர்களுடனானச் சந்திப்பில் அவர் அளித்த ஐந்து வகை இனிப்பு பண்டங்களை சாப்பிடாமலே பார்த்துக்கொண்டிருந்தேன். பெயர் எதுவும் தெரியவில்லை. நமக்குத் தெரிந்த ரசகுல்லா அதிலில்லை. பக்கமிருந்த சமூக செயல்பாட்டாளர் வியாகுல மேரி சாப்பிடுங்கள் வங்கதேச இனிப்பு பதார்த்தங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக […]

வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்

This entry is part 3 of 9 in the series 7 ஜூன் 2020

கோ. மன்றவாணன்       கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. யாரோ சிலர், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளார்கள். அது தனக்காகச் சாப்பிடவில்லை என்றாலும் தன் வயிற்றில் உள்ள குட்டிக்காகச் சாப்பிட வேண்டிய நிலை. அந்த வெள்ளந்தி யானை, மனிதர்களை நம்பி உள்ளது. அன்னாசிப் பழத்தை வாய்க்குள் நுழைத்துச் சாப்பிட முயல்கையில் அது வெடித்துவிட்டது. வலியால் யானை […]

கறுப்பினவெறுப்பு

This entry is part 6 of 9 in the series 7 ஜூன் 2020

கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய  தீராத தீண்டாமைப் போர். கறுப்பும் வெளுப்பும் அங்கே. சமமில்லை ! ஆப்ரகாம் லிங்கன் அடிமைகட்கு விடுதலை பெற்றார். வெள்ளைக் காவலர்  ஆயினும் கறுப்பரை வேட்டை ஆடும் விலங்குகளாய் பலி ஆடுகளாய்த் தமக்கு நாட்டில் நடமாடும் எளிய […]

காலப்பயணமும் , காலமென்னும் புதிரும்

This entry is part 2 of 9 in the series 7 ஜூன் 2020

காலப்பயணம் சாத்தியமா என்பதுமனிதனின் விடைகிடைக்காத கேள்விகளுள் ஒன்றுஒளியின் வேகத்தை அடைந்தால் காலம் நின்று விடுகிறது என்கிறது அறிவியல். அதாவது ஒளியின் வேகத்தில் சற்று நேரம் பயணித்துவரலாம் என நினைத்து விண்கலத்தில் கிளம்புகிறீர்கள்.   சரி போதும் என நினைத்து புறப்ப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்தால் அதிர்ச்சி.  உங்கள் கடிகாரத்தில் அரைமணி நேரம்தான் கடந்துள்ளது.  நீங்கள் புறப்பட்ட இடத்திலோ ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. கலாச்சாரம் , தேச எல்லைகள் என எல்லாம் மாறிவிட்டனஆக , காலம் என்பது நெகிழ்வுத்தன்மை […]

புலம்பல்கள்

This entry is part 1 of 9 in the series 7 ஜூன் 2020

உன் தவறுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அவற்றின் மேல் கம்பீரமாக நின்று பேசுகிறாய் உன் கற்பனைகளுக்கு முலாம் பூசிக் குற்றச்சாட்டுகளென என்னைச் சுற்றி வேலி கட்டுகிறாய் கயிற்றைப் பாம்பென்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறாய் நீ காது தாண்டிய உன் வாய் அறியாமையை முழக்கியும் நீ ஓய்ந்தபாடில்லை யூகங்களின் பரந்த வெளியில் நின்று நீ தாண்டவமாடுகிறாய் அபாண்டத்தை முன் வைக்கும் உன் புலம்பல்களே உனக்குத் தண்டனையாகிறது           ++++++++

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

This entry is part 4 of 9 in the series 7 ஜூன் 2020

              இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம் ஏந்தி இருப்பார்கள்.   ===============================================================================              தழைவர்க்கக் கருவெப்புத் தடி சக்ரத்தினரே             கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட் கட்சியினரே.           [102] [கரு=கருக;வெப்பு=வெப்பம்; தடி=தடுக்க; கழி=மூங்கில்; பொதிகக்க=முத்துகள் உதிர]       அது பாலை நிலம். அங்கே வெப்பத்தினால் […]

வெகுண்ட உள்ளங்கள் – 2

This entry is part 5 of 9 in the series 7 ஜூன் 2020

கடல்புத்திரன் வடிவேலு இடுப்பிலிருந்து ரிவால்வாரை எடுத்து ‘மேல் வெடி’ வைத்தான். சனம் அவன் மேல் பாய்ந்தது. அவனிடமிருந்து ரிவால்வர், மகசின், கிரனேட்டு எல்லாவற்றையும் பறித்து எடுத்து விட்டார்கள். யாரோ ஒருவன் அவன் மண்டையையும் உடைத்து விட்டிருந்தான்.இரத்தக் காயத்தோடு அவன் நின்றபோது வள்ளங்கள் கரை சேர்ந்தன. “எவன்ரா?, எங்கட பெடியள்களை அடிச்சது’ பொறுப்பாளர் போல இருந்தவன் கோபமாக இறங்கினான். வடிவேலு நின்ற கோலத்தை பார்த்த போது அவனுக்கு நிலமை விளங்கவில்லை. பொதுவாக தீவில் எல்லா இயக்கங்கள் மத்தியிலும் ஒரளவு […]