முனைவா் சொ. ஏழுமலய் தமிழ்ப் பேராசிரியா், பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூா். செக்கச் சிவந்த மண்ணு செழிப்பா இருந்த மண்ணு! நாலு தலைமு றையாய் நாசம் பண்ணி பாக்குறாங்க! சோளம் கம்பு கடலையெல்லாம் சாயப் பட்டறை தின்னுப் போச்சு! நாளும் இந்தக் கொடுமையாலே நானிலமே பாலை யாச்சு! காடு மலை மேடெல்லாம் காத்தடிக்கும் மழை பெய்யும் காட்ட வெட்டி கொன்னதாலே நாடும் கெட்டு நரகமாச்சு! காத்து வாங்க […]
பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த எழுத்தாளர் தவசி எழுதிய ’அப்பாவின் தண்டனைகள்’ என்னும் நாவலைத்தான் முதலில் படித்தேன். அந்த நாவல் வழங்கிய அனுபவம் நெஞ்சில் இருக்கும்போதே, ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு இதழில் வெளிவந்த ‘பூனைகள் நகரம்’ என்னும் ஜப்பானியச் சிறுகதையை அடுத்து படித்தேன். (மூலம்: ஹாருகி முரகாமி) அசோகமித்திரன் கட்டியெழுப்பும் சீரான தந்தை-மகன் உறவு சார்ந்த படைப்புகளை தராசின் ஒரு […]
அண்ணா தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை நேருக்கு நேர் பார்த்து அவருடைய சொல்லாற்றலைச் செவுமடுக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அவருடைய தமிழைத்தான் அதுவரை அரசியல் மேடைகளின் தொலைவில் நின்று கேட்டதுண்டு. ஆனால் அண்ணாவின் ஆங்கில உரையை வெகு அருகாமையில் அமர்ந்து இரசித்தது எங்கள் கல்லூரியில்தான்! அது கல்லூரியின் பட்டமளிப்பு விழா. மருத்துவம் படித்து முடித்து வெளியேறும் மருத்துவ பட்டதாரிகளுக்கு முறைப்படி பட்டம் வழங்கும் விழா. கல்லூரி முதல்வர் சாமர்த்தியமாக அண்ணாவை அதில் சிறப்பு விருந்தினராக […]
கிரீடம் என்றாலே அரசன் நினைவுக்கு வருவதை ஏசுவின் சிரசிலிருந்து பெருகிய ரத்தம் இல்லாமலாக்கியதில் வரவான கையறுநிலை அருகதையில்லா அன்பில் ஆட்கொல்லியாக….. தலையைச் சுற்றித் தூக்கியெறுந்துவிடத்தான் வேண்டும் இந்தத் திறவுகோலை. வீடே யில்லையென்றான பின்பும் இதையேன் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது என் கை? அறிவுக்கும் மனதுக்கும் இடையறாது நடந்துகொண்டிருக்கும் இந்தப் போட்டியில் வெற்றிக்கம்பத்தின் எதிர்முனை நோக்கி நான் ஓடியவாறு….. பெருவலியினூடாய் புன்னகைத்துக்கொண்டிருந்தேன். கல்தடுக்கிக் கால்கட்டைவிரலில் மின்னிய ரத்தச்சொட்டு என்னவொரு நிவாரணம் என எண்ணாதிருக்க […]
[Japan’s Seikan Subsea Mountain Tunnel] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://youtu.be/HX-yhXFK7ss https://youtu.be/7lcwecXiL0I https://youtu.be/5nYGzo7QcUM ++++++++++++ முன்னுரை: இரண்டாம் உலகப் போரில் தோற்றுச் சரணடைந்த ஜப்பான், அதி விரைவில் எழுந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைப் போல் தொழில் வளத்தில் முன்னேறி, ஆசியாவின் பொறித்துறைப் பூதமாகவும், வல்லரசாகவும் உச்ச இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது! நவீனப் பொறி நுணுக்கங்களும், தொழிற்துறை நூதனங்களும் படைக்கும் மிகச் சுறுசுறுப்பான மாந்தரைக் கொண்டது ஜப்பான் தேசம்! தேள் கொடுக்கு […]
நாசூக்காகக் காய்களை நகர்த்துகிறவர்கள் இரண்டு மூன்று நகர்வுகளை யூகிக்க வல்லவர்கள் கடிகார முள் சுருதியுடன் பேதலிக்காத அலை அசைவுக் கடல்களானவர்கள் யாரிடமிருந்தும் கற்பவை கற்றிடக் கூடவில்லை ராட்சத வணிக வளாக நகர் படிக்கட்டுகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து காலெடுத்து வைப்பதை மட்டும் நகல் செய்ய இயன்றது
திண்ணை வாசகர்களே, எனது தமிழ் விஞ்ஞான நூல் “விண்வெளி வெற்றிகள்” முதற் தொகுப்பு : சந்திரமண்டலப் பயணங்கள் பற்றியது, தாரிணி பதிப்பக வெளியீடாக திரு. வையவன் சிறப்பாகச் செய்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகத் திண்ணையில் தொடர்ந்து வெளிவந்த எனது அண்டவெளிப் பயணக் கட்டுரைகளின் முதற் தொகுப்பே இது. தொடர்ந்து மற்ற தொகுப்புகளாக அடுத்து செவ்வாய்க் கோள் பயணங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன், புளுடோ விண்ணுளவிகள் பற்றி வெளியீடுகள் வரும். நூல் […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி நிழலைவணங்கி நேர்மையாய் வளர்ந்த ஏகலைவனுக்குத் துரோகம்செய்த துரோகி வேடம்போடத்தெரியாத வேடனுக்கு துரோணர் குரு துரோகி துரோகி குரு அவரிடம் கற்ற அரசகுமாரர்களில் தனித்தும் தினித்துவத்தோடும் விளங்கினான் அர்ச்சுனன் கற்றதில் கவனமும் குரு பக்தியும் நிறைந்தவன் அர்ச்சுனன் குருவிடம் கற்ற வித்தைகளை அரங்கேற்றும் நிகழ்வு நடந்தது மன்னர்கள் மன்னர்கள் அறிஞர்கள் ஆசிரியர்கள் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , ” அவரைப் போல நகலெடுக்க முடியாமல் பலரும் திணறும் வடிவமைதிகொண்ட கவிதைகள் ” என்கிறார் சிபிச்செல்வன். புத்தகத் தலைப்பான ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ என்ற கவிதை , கண்மாய்க் கரையில் கொக்குகள், காக்கைகள் , மைனாக்குருவிகள் பற்றிய இயற்கைக் காட்சிகளை முன் நிறுத்துகிறது. பெரும்பாலும் சாதாரண கவிதைமொழியே கையாளப்பட்டுள்ளது. இதில் பிறரால் நகலெடுக்க முடியாத அசாதாரணம் […]
சேயோன் யாழ்வேந்தன் சொற்களின் சிற்பி சிற்பியின் உளிச்சிதறல்களில் புதுப்புது சொற்களைக் காண்கிறான் சொற்களின் வேடன் வேடனின் வித்தைகளில் புதுப்புது சொற்களைக் கண்டெடுக்கிறான் சொற்களின் கடவுள் கடவுளின் மொழியில் புதுப்புது சொற்களைச் சேர்க்கிறான் சொற்களின் புத்தன் புத்தனின் சொற்களில் புத்தனைத் தேடித் தோற்கிறான். seyonyazhvaendhan@gmail.com