வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –

This entry is part 26 of 36 in the series 18 மார்ச் 2012

எத்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல்’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த […]

வளவ. துரையனின் நேர்காணல் – 2

This entry is part 25 of 36 in the series 18 மார்ச் 2012

வினாத் தொகுப்பு——–பாரதி இளவேனில் [அன்பாதவன்] இரண்டாம் பகுதி அண்ணா—பெரியார் குறித்தெல்லாம் கவியரங்கக் கவிதைகள் வாசித்தவர் வாழ்வில்” வைணவ விருந்து” எப்படி? ஒரே வரியில் பதில் சொல்லித் தப்பித்து விடலாம். “எல்லாம் தமிழில்தானே இருக்கிறது”. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறக் கூடியவைதானே? கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது “ மாற்றம் என்பது மானிடத் தத்துவம் “. நான் இலக்கியத்தில் புகுந்தபோது ஈர்த்தவை திராவிட இயக்கமும், பகுத்தறிவும், இறை மறுப்பும்தான். வளவனூர் […]

‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை

This entry is part 24 of 36 in the series 18 மார்ச் 2012

தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்கு சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், கற்களும், தடங்கல்களும் நிறைந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் புயலின் […]

முன்னணியின் பின்னணிகள் – 32

This entry is part 23 of 36 in the series 18 மார்ச் 2012

  சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> பிளாக்ஸ்டேபிளுக்குத் திரும்பும்போது திருமதி திரிஃபீல்ட் தனது காரை அனுப்பியுதவ முன்வந்தாள். ஆனால் எனக்கு நடக்கலாமாய் இருந்தது. அடுத்த நாள் மதியச் சாப்பாட்டுக்கு அவசியம் வருகிறேன், என விடைபெற்றுக் கொண்டேன். அதனிடையே எட்வர்ட் திரிஃபீல்டுடன் நான் கலந்துறவாடிய அந்த இரு பருவங்கள், அவற்றைப் பற்றிய என் நினைவுக் குறிப்புகளை எழுதித் தர முடியுமா என்றும் யத்தனிக்கலாம். பாதை பாம்பு வளைசலாய்ப் போனது. வழியில் நடமாட்டமே யில்லை. இவர்களிடம் என்னவெல்லாம் […]

சாதிகள் வேணுமடி பாப்பா

This entry is part 22 of 36 in the series 18 மார்ச் 2012

“எல ஒரு சாமிய கும்பிட்டா கும்பிட்ட மாரியா இருக்கும்?….இப்டி பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்.” “யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌ என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து த‌ஸ்தாவேஜி போடுதாம்லா அதப்பாருலெ” “அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து. க‌வ‌ர்மெண்டே குத்ர‌ ப‌ச்ச‌டே இது. எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ அப்டி எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ இப்டி எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே துட்டு எடுக்க‌ணும்னா ஓட்டு வேணும்லே ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே.” “அவ்வொ வ‌ந்தாவ‌ இவ்வோ வ‌ந்தாவ‌ எல‌ […]

பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்

This entry is part 21 of 36 in the series 18 மார்ச் 2012

    முன்னுரை :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை […]

“நிலைத்தல்“

This entry is part 20 of 36 in the series 18 மார்ச் 2012

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை. மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை […]

மணம்… தாங்கும்…..பூக்கூடை…! ஹைக்கூ:

This entry is part 19 of 36 in the series 18 மார்ச் 2012

மணம் கரைந்து…. உலர்ந்து உதிர்ந்தது … செடியில்…பறிக்காத மல்லிகை..! —————————————— சாமந்தி….முகத்தில்…சந்தோஷம்.. மணத்தாலும்…விதவை தானே… மல்லிகை…! —————————————– இரும்பென…. கருவண்டு.. காந்தமாக… மகரந்தம்…. பாவம்….தாமரை…! ——————————————— சேற்றில் நான்…! வேலியாய்..நீ ..! நான் மட்டும் பூஜைக்கு..! தாமரை..! ———————————————— பூக்காட்டில் பாம்பு…! நெருங்க மறுக்கும் அவள்… கருநாக… ஜடையில் என் நர்த்தனம்..! தாழம்பூ..! ——————————————— ஈராறு ஆண்டுகளாய்… காத்திருந்தது… தென்றல்… ! முதல் குறிஞ்சியின்… வாசம் பிடித்து தூது சொல்ல..! ———————————————— மழை கரைக்காமல் குடை கொண்டு […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை

This entry is part 18 of 36 in the series 18 மார்ச் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 11) எழில் இனப் பெருக்கம் ஆடவன் கடமை மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 4 என்னை நினைப்பாயா ?

This entry is part 17 of 36 in the series 18 மார்ச் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னை நினைத்திருப் பாயா இன்னும் நீ ? உன்னை விட்டு வெகுதூரம் ஓடிப் போகினும் என்னை நினைப் பாயா ? என் பழைய காதல் சிலந்தி வலையால் மறைந்து புதிய காதல் படர்ந்தாலும் நீ நினைப் பாயா ? நெருங்கி நான் நிழல் போலிருந்த சமயம் இருப்பதோ இல்லாததோ உனக்குத் தெரியாத போதினும் நீ நினைப் பாயா ? நினைத் […]