தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஒன்பது மணி நெருங்கிக் கொண்டிருந்தது. மைதிலி இண்டஸ்ட்ரீஸ் என்று பெரிய பலகையுடன் இருந்த ஆபீஸ் கட்டிடமும், மிதிலாவிலாஸ் பங்களாவும் மின்விளக்கு தோரணங்களால் தகதகவென்று மின்னிக் கொண்டிருந்தன. ஆபீஸ் கட்டிடத்தின் வாசலில் “மைதிலி இன்டஸ்ட்ரீஸ் ஆண்டு விழா என்ற பேனர் கட்டப்பட்டு இருந்தது. சாலைக்கு இருபுறமும் கார்கள் வரிசையாக நின்று இருந்தன. மேலும் வந்து கொண்டிருந்த கார்களுக்கு வழி காட்டுவது போல் செக்யூரிடி ஆட்கள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4 Gorbachev and Reagan பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு […]
வைகை அனிஷ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல பாடல்கள் நாகூரைப்பற்றிப் பாடுவதுண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நாகூர். நாகூர் பிரபலம் ஆவதற்கு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நாகூர் சாகுல்ஹமீதுவின் கல்லறை தான். இந்து மதசாயலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த தர்காவில் காணலாம். நாகூர் […]
தமிழ் சேஷ லுத்தரன் திருச்சபையின் தலைமையகம் திருச்சியில் ” தரங்கைவாசம் ” எனும் பெயர் கொண்ட பெரிய வளாகத்தினுள் இருந்தது. அங்குதான் பிரபலமான ஜோசப் கண் மருத்துவமனையும் உள்ளது. அப்போது அதன் நிறுவனர் டாக்டர் ஜோசப் அதில் பணியாற்றினார். அதுவும் லுத்தரன் சபையைச் சேர்ந்ததுதான். பேராயர் இல்லமும் அங்குதான் உள்ளது. அந்த பங்களாவின் பெயர் ” தரங்கை இல்லம் ” என்பது. தரங்கை என்பது தரங்கம்பாடியைக் குறிப்பதாகும். லுத்தரன் சபை தரங்கம்பாடியில் உருவானது. அதை உருவாக்கியவர் இந்தியாவின் […]
அப்பாவுக்கு நில சர்வேயர் வேலை. படித்தது என்னமோ டிப்ளமோ தான்! ஆனால் ஊரில் எல்லோரும் அவரை இஞ்சியர் என்றுதான் கூப்பிடுவார்கள். “ எடே! அது இஞ்சியரும் இல்ல.. மாஞ்சியரும் இல்ல.. இன்ஜினியர்!” “ இந்த பொகை வண்டிய ஓட்டுவாகளே? அவுக மாதிரியா?” “ அடே மாக்கான்! அது இன்ஜின் டைவரு! இவரு இஞ்சியரு “ திருத்தம் சொல்லி அலுத்துப் போய்விட்டார் அப்பா! அப்பாவுக்கு இவனும் அண்ணனுமாக இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் கோபால் அடிக்கடி மாறும் அப்பாவின் […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனக்குச் சொந்தமான கண்களே என்ன செய்கிறீர் ? நம்பிக்கைத் துரோகம், நய வஞ்சகம் புகழப் படும் ஒழுக்கத் தவறு ! ஒரு கண்ணீர்த் துளியின் உதிர்ப்பே உன் காட்சியாய் இருந்தால் செத்திட வரும் துணிச்சல் குளிர்ந் தடங்கும் உணர்ச்சி ! தகுதி பெறா கண்ணீர்த் துளிகள் வெகுமதி இழந்தால் ஒளி வீசிய எனது விழிகள் வெளிப்படா இனிமேல் […]
[திலகன் எழுதிய “புலனுதிர் காலம்” கவிதைத் தொகுப்பை முன்வைத்து] கவிதையைப் பற்றிக் கூற வந்த கண்ணதாசன் ஒரு முறை சொன்னார். ”உண்மை கால், பொய் கால், ஒளிவு கால், மறைவு கால் சேர்ந்ததுதான் கவிதை”. திலகனின் ’புலனுதிர்காலம்’ கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது இதுதான் நினைவுக்கு வந்தது. மேற்கூறிய அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக திலகன் தன் கவிதைத் தொகுப்பை முன்வைத்துள்ளார். ஒரு படைப்பாளனின் படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதை இப்போது புறக் காரணிகள்தாம் தீர்மானிக்கின்றன. […]
மழைவரும்போல் தெரிகிறது பாதையோர குறுநீலப் பூக்கள் பாவாடைப் பச்சையில் விரிகின்றன. ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம். தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச் சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம். இறுக்க மூடிவரும் இரவில் மோதிப் போதவிழக்காத்திருக்கிறது ஒற்றை மொக்கு. தொடப்போகும் மரவிரல் பார்த்து சிணுங்கிச் சலிக்கிறது சர்க்கரைத் தீர்வு. காதல் சீண்டலில் வெட்கித் தலைகுனிகிறது காணாமலே உணரும் காமவர்த்தினி. பரஸ்பரத் தொடுகையில் பூத்து விரிகின்றன குறுஞ்சாமரங்களாய் இளஞ்சிவப்புப் பூக்கள் உறங்கப் போகும் பறவைகள் தாலாட்டில் மோனத்தில் ஆழ்கிறது மழை மரம். […]
கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் கேட்டது. துரைசாமி முதலியார் அண்ணாந்து பார்த்தார். மப்பும் மந்தாரமுமாக எந்த நேரத்திலும் வானம் பொத்துக் கொள்ளலாம் என்று பயமுறுத்திற்று. முதலாளி சொக்கேசம் பிள்ளை மேற்கே போக வேண்டும். குமாஸ்தா துரைசாமி முதலியார் கிழக்கே போக வேண்டும். வீடு அந்தத் திசையில்தான். ஆரணி கடைத் தெருவில் எல்லாக் கடைகளும் பூட்டிவிட்டாலும் கடைசியாக […]
நாகா டோர்செட் ரோட்டில் இருக்கும் அந்த மூவறை வீட்டை 70 களில்தான் வாங்கினார். 20000 தான் விலை. மாதத்துக்கு 120 வெள்ளி செலுத்திக் கொண்டிருக்கிறார். நாகலிங்கம் என்கிற நாகாவைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 12 வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். வந்ததுமுதல் அடைக்கலராஜ் வம்சாக்கடையில் தான் வேலை செய்கிறார். அடைக்கலராஜிடம் தான் காசு என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, குடும்பம் என்றால் என்ன என்றெல்லாம் நாகா தெரிந்துகொண்டார். ‘நமக்கு வரும் காசை கடவுள் மாதிரி பாக்கணும் தம்பீ. அப்பத்தான் […]