அண்மையில் மறைந்த மு. அன்புச்செல்வன், ப.சந்திரகாந்தம் ஆகிய மலேசியாவின் இரு தலைசிறந்த எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தையும் அவர்கள் படைப்புக்கள் மீதிலான கருத்தரங்கம் ஒன்றையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகள் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30க்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க இல்லத்தில் நடைபெறும். காலை 9.30க்கு தேநீருடன் நிகழ்வுகள் தொடங்கும். தொடர்ந்து மறைந்த எழுத்தாளர்களுக்கு அவருடைய நண்பர்களும் சக எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்துவார்கள். […]
1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர். 2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார். 3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும். 4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் […]
26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில […]
1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவரையில் அவரது பெயரை மட்டுமே அறிந்திருந்தேனே யல்லாது, அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. சி.எல்.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த ‘க்றிஸ்டியன் லிட்டரேச்சர் சொசையட்டி’ – கிறிஸ்துவ இலக்கியக் கழகம் – என்கிற அமைப்பு அந்நாள்களில் ஆண்டுதோறும் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 51. நீக்ரோ இன மக்களின் நம்பிக்கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏழை….. “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்” அட என்னங்க வரும்போதே பாடிகிட்டு வர்ரீங்க…என்ன போன வாரம் கேட்ட கேள்விக்குரிய விடையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்லையா…அப்பறம் என்னங்க […]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய தமிழ்ப் பற்றும், திராவிட உணர்வும் மேலோங்கியது. தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதைக் கண்டு வியந்து போனேன். தங்களுடைய எழுத்தாற்றல் மூலமாக எவ்வாறு இளைய தலைமுறையினரை பகுத்தறிவுப் பாதையில் கொண்டுச் செல்ல திராவிட இயக்கம் முயன்று வருவதையும் உணரலானேன். […]
(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு. அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும். அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள். குறிப்பு : கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன். ) 1. மெங்கின் பயணம் வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், […]
”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் Mountommaney என்னுமிடத்தில் அமைந்த Centenary Community Hub மண்டபத்தில் நிகழ்ந்த கலை – இலக்கிய சந்திப்பு அரங்கில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணைந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக நடந்த காலை அமர்வில் மெல்பனிலிருந்து வருகை தந்த கலை – இலக்கியச்சங்கத்தின் தலைவர் எழுத்தாளர் டொக்டர் நடேசன், சங்கத்தின் துணைச்செயலாளர் கவிஞர் ஆவூரான் சந்திரன் மற்றும் செயற்குழு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.space.com/25177-asteroid-between-saturn-and-uranus-has-rings-animation.html http://www.space.com/25226-watch-artists-impression-of-the-ringed-asteroid-chariklo-video.html நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று தூசியைப் பிடித்துக் காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கிடும் ஜப்பான் ‘கழுகு’ […]