பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) அதுதான் அழகு அதுவல்லாமல் வேறெது அழகு? கண்கள் நம்மைக் கண்டுகொள்ளாமல் கண்டுகொள்வது எதை? அனுமதியின்றி கண்கள் செல்வது எங்கே? அதை நினைத்தால் மனசு பறபறக்கும் பார்த்தால் கவிதை பிறப்பெடுக்கும் பலருக்கும் அப்படித்தான் கவிதை பிறக்கிறது சிற்பியின் உளி அதைத்தான் […]
சாக்கடையல்ல சமுத்திரம் ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன். உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்… வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி அள்ளும் கொள்கல அளவுக்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நதியின் நன்னீர் பொங்குமாக் கடலின் மங்கலத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும்; இனங்கண்டுகொள்ளும் தன்னை அத னோர் அங்கமாய் என்றே இன்றுவரை நம்பியிருந்தேன். தன்மேற் செல்லும் தோணியிலிருந்தும் படகிலிருந்தும் சாகரப்பரப்பில் சவாரி செய்யும் […]
(Children of Adam) (Whoever You are Holding Me Now in your Hand) இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றி கொண்ட நீவீர் யாராயினும் ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இப்போது உன் கரத்தால் என்னைப் பற்றிக் கொண்ட நீவீர் யாராயினும், எல்லாம் பயனற்றுப் போகும் ஒன்று மட்டும் இல்லாமல் போயின் ! மேலாக உமக்கு முன் எச்சரிக்கை […]
சி. ஜெயபாரதன், கனடா [சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை –26 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு : வையவன் ஓவியம் : ஓவித்தமிழ் படம் : 54 & படம் : 5 5 [இணைக்கப் பட்டுள்ளன] தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland […]
ஷைன்சன் ரயில் வண்டி நெய்யாற்றிங்கரை ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் அங்கே ரயில் நிற்கும். பாசஞ்சர் கம்பார்ட்மென்டின் படிக்கருகில் நான் நின்று கொண்டிருந்தேன். காலை நேரத்துக் குளிர்காற்று ரயில் வண்டியின் வேகத்திற்கேற்ப என் மீது மோதிக் கொண்டிருந்தது. நெய்யாற்றிங்கரை என்று எழுதியிருந்த மும்மொழிப் பெயர்பலகை கண்ணில் பட்டது. மலையாள எழுத்துகள் ஓரளவுக்குப் பரிச்சயமாகிவிட்டன. மெதுவாகிக் கொண்டிருந்த ரயில் வண்டி நின்றது. பிளாட்பாரத்தைப் பார்த்தேன். வேலைக்குச் செல்பவர்கள், படிக்கச் செல்பவர்கள், இலக்கின்றி அலைபவர்கள் என ஒரு […]
வாய்ப்பு அந்த சொல் உச்சரிக்கப்பட்டுவிட்டது அப்போது நீ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாய் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன் விரல்களிலின்றி மொக்கையாக இருக்கும் கைகள் அடிக்கடி நினைவுக்கு வந்தன கழிவிரக்கம் கொள்வதற்கு ஊனமாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை பள்ளிகளில் பென்சிலைக் களவாடியது ஏனோ ஞாபக அடுக்குகளில் வந்து போகிறது கவிதை எழுத ஆரம்பித்ததிலிருந்து மதுவில் நீந்துவதை மறந்திருந்தேன் எத்தனையோ ரட்சகர்கள் தோன்றினாலும் வாழ்க்கையை நேர்த்தியாக்க யாருக்கும் வழங்கப்படவில்லை மீண்டும் ஒரு […]
ஒரு காலத்தில் இப்பகுதியில் கொசுக் கடியால் மலேரியா காய்ச்சல் பரவி ஆயிரமாயிரம் பேர்கள் இறந்து போக நேர்ந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அயரா உழைப்பால் மலேரியா இன்று முன்னேறி வரும் நாடுகளில் ஓரளவு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் இடத்தை இன்று டெங்கி காய்ச்சல் பிடித்து வருகிறது என்றால் அது மிகையன்று. இன்று கொசுக்கடியால் வைரஸ் தொற்று உண்டாகும் வியாதிகளில் டெங்கி காய்ச்சல்தான் முதலிடம் வகிக்கிறது. உலகின் வெப்பப் பிரதேசப் பகுதிகளில் வருடத்தில் 500 – […]
சுவற்றில் அட்டை போல் ஒட்டிக்கிடந்த கடிகாரத்தின் சின்ன முள் ஆறில் நிற்க, பெரிய முள் சத்தமில்லாமல் பன்னிரண்டில் வந்து நிற்கையில், வாசல் கேட் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் பக்கத்துவீட்டு ரகு. ஹாலில் அமர்ந்து ஜோதிட மலர் படித்துக்கொண்டிருந்த ராதாவின் அப்பா நீலகண்டனிடம், ‘குட் ஈவ்னிங் தாத்தா’ என்றான். ‘ஆங்..வாப்பா’ என்றார் தாத்தா ஜோதிட மலரில் புதைத்த முகத்தை விடுவிக்காமல். ரகு பக்கவாட்டிலிருந்த ராதாவின் அறைக்குள் நுழைந்து சப்பனிக்காலிட்டு அமர்ந்து, கொண்டு வந்திருந்த பத்தாம் வகுப்பு […]
தோற்பதிலும் சுகம் எனக்கு சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை உயிர்ப்பித்து அதில் தட்டச்சு செய்து சேமிப்பில் தேக்கி வைக்கவே கற்றிருந்தேன். அந்த வகையிலேயே என் கணிணி அறிவின் தரம். வேலைக்கு வந்த புதியது என்பதால் அவ்வளவாக யாரும் என்னைப் பணி செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தியதில்லை. வேலை நேரமே எனக்கு பயிற்சி […]
சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html ) கண்ணகி கதை இலக்கியமா?- தந்தை பெரியார்- இந்தக் கதை இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடு தான். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403045&edition_id=20040304&format=html ) யுக பாரதியின் தெப்பக் கட்டை- சேவியர்- சங்கூதும் […]