மந்திரச் சீப்பு (சீனக் கதை) வெகு காலத்திற்கு முன்பு, சேவல் தான் வயல்வெளியின் அரசனாக இருந்தது. அது வயல்வெளியில் திரிந்து கொண்டு இருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் காப்பதையே வேலையாகக் கொண்டிருந்தது. எதிரிகளைக் கண்காணிக்க, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறந்து செல்லும் திறனையும் பெற்றிருந்தது. ஒரு நாள் டிராகனும் புழு ஒன்றும் சேவல் செய்யும் வேலையைக் காண வயலுக்கு வந்தன. ஒவ்வொரு வீட்டு உச்சியிலிருந்து உச்சிக்குத் தாவிச் சென்று நாய்களையும் நரிகளையும் பயமுறுத்துவதைக் கண்டன. வயல் மிகவும் பாதுகாப்பாக […]
காலத்தின் கண்ணியில் இன்னொரு இரவு கூடியிருக்கும். மழையின் இடைவிடா மோகத்தில் மையிருள் இன்னும் குழைந்திருக்கும். மின்னல் வெட்டி மழை கொளுவி நிலம் எரிவதாய்த் தோன்றும். சரமென இடி இடித்து கடித்துக் குதறும் குகையை யார் புரட்டிப் போடுவது? வெளவால்கள் கதறும். தெரிந்த முடிவிலிருந்து தெரியாத கேள்விக்கு தயாராகாது பழகிய இருளில் பரபரக்கும். இருள் கூடி இனி இடி மின்னல் கேள்வி இல்லையென்று தளர்த்திக் கொண்டு தளர் மேனி […]
நாம் சின்னப் பிள்ளையில் அம்புலிமாமா, கோகுலம், பாப்பா மலர், பாலமித்ரா,அணில், முயல் போன்ற புத்தகங்கள் படித்திருக்கிறோம். அழ. வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளும், வாண்டுமாமாவின் கதைகளும் என்றால் நேரம் காலம் தெரியாமல் படித்து ரசித்திருக்கிறோம். இதுபோக தாத்தா பாட்டி போன்றோரும் அம்மா, அப்பாவும் கதை சொல்லி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று நகரங்களில் வாழும் ஏன் கிராமங்களில் வாழும் குழந்தைகளுக்குக் கூட கல்வியைத் தாண்டி ஏதும் சிந்திக்க முடியவில்லை. கதை சொல்லும் தாத்தா பாட்டிகளும் அம்மா அப்பாக்களும் அருகி விட்டார்கள். […]
வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8 மூன்று அங்க நாடகம் ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1. [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2. [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம் அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட […]
பவள சங்கரி காலை நேர பரபரப்பு ஏதுமில்லாமல் ஒரு மயான அமைதி.. சரியான இடைவெளியில் டொக்.. டொக்.. என்று செக்யூரிட்டி சிஸ்டத்தின் சத்தம் மட்டும் பலமாக ஒலிப்பது போல இருந்தது. வீடு முழுவதும் ஊதுவத்தியின் நறுமணம். புகை வரும் திசை நோக்கிச் சென்ற கால்கள் பூஜை அறையில் ஜெகஜோதியாக விளக்குகளும், புத்தம் புது மலர்களின் மென்மணத்துடன் பளபளவென துடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெள்ளியிலான விக்கிரகங்கள். வரவேற்பறையில் அலங்காரமாக வீற்றிருக்கும் புத்தர் மற்றும், நடராசர் சிலைகளும்கூட குறைவில்லாமல் இருந்தது. […]
கோசின்ரா பார்வையாளர்களே கண்களை மூடாதீர்கள் அவைகள் திறந்தே இருக்கட்டும் பதற்றமான மனம் ஆறுதல் கொள்ளட்டும் மன்னிப்புகளை வீட்டில் விட்டு வந்திருப்பீர்கள் என நம்புகிறோம் யாரவது தவறுதலாக கொண்டு வந்திருந்தால் இலவசமாக மன்னிப்புகள் வைக்குமிடம் வெளியே இருக்கிறது அங்கே வைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளுங்கள் போகும் போது ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள் ஏனெனில் உங்கள் மன்னிப்புகள் நீங்கள் யாரென்பதை காட்டிக்கொடுத்து விடும் அப்புறம் இதே இடத்தில் நீங்களும் இருக்க நேரலாம் மேலும் யாரிடமாவது இரக்கம் கருணை அன்பு […]
—————– குழப்பங்கள் கருக்கொண்டு பிரசவித்த சூன்யத்தினுள் கரைந்தபடி காலம் தொப்புள்கொடி அறுபடும் முன்னரே தாயையிழந்த பிஞ்சாய் பற்றிக் கொள்வதற்கோரு விரல் தேடி வீறிடுகிறது வறண்ட மனம் பலநூறு பகலவனாய் சுட்டெரிக்கின்றன இயலாமைகள் என் ஆகாயத்தை ஏங்கித் தவிக்கின்றன என் பாலைவன ஏக்கங்கள் நிசியிலுறங்கா ஓநாயின் ஓலத்தோடு கரைகிறதென் கதறல் அருகிலிருக்கும் அரவத்தின் கிசுகிசுப்பில் பயந்து ஒடுங்குகிறதென் சுயம் என்னுடைய வாழ்வை என் பயங்கள் வாழ்கின்றன.
காரைக்குடி கம்பன் திருநாளின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ உள்ளது. கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்க வருக இதனுடன் அழைப்பினை இணைத்துள்ளேன்
கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிக மாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. […]
_கோமதி நல்ல கோடை காலத்தின் ஒரு மாலை நேரம். ஆற்றங்கரையில் கையில் ஒரு கத்தைபேப்பருடன் தனியாக உட்கார்ந்திருந்தேன். பளபளவென்று தேய்த்த தங்கக்குடம் போல மின்னும் குடங்களில் பெண்கள் தண்ணீர் நிரப்பிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி பேசியபடி போய்க்கொண்டிருந்தனர். சில பெண்கள் காலிக் குடங்களுடன் படி இறங்கியபடி பேசிக் கொண்டுமிருந்தார்கள். அவர்களில் சில சிறுமியரும் சில கிழவிகளும் கூட இருந்தனர். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சும் சிரிப்பும் கட்டாயமிருக்கும். ஸரஸா, புஷ்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். “பாவம்டி, அந்த […]