கணினியில் தமிழைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமீரகத் தமிழ் மன்றம் தனது 12-வது ஆண்டு விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடியது. துபாய் பெண்கள் உயர்தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவைக் காண 1400 பேர் திரண்டிருந்தனர் உறுப்பினர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு மிகச்சரியாக ஆறுமணிக்குத் துவங்கிய விழாவில் பிரசித்தம் மற்றும் ’மதர்ஸ் ப்ரீஸ் குழுவினரின் கண்கவர் நடனங்கள் பார்வையாளர்களை சுண்டியிழுத்தன. அதிலும் குறிப்பாக துபாய் சர்க்கஸ் என்ற பெயரில் ’மதர்ஸ் ப்ரீஸ்’ குழுவினர் நடத்திய சாகசங்கள் […]
சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை குளிராக பாந்தமற்றமாகவே இருந்தது. மழை வேறு பிடித்துக் கொண்டது. மேட்டுத் தெருவில் விகாரேஜை நோக்கி நடந்தேன். வழியில் தென்பட்ட கடைகளின் பெயர்கள் எனக்கு ஞாபகம் இருந்தது. அந்த கென்ட் பிரதேசத்துக்கேயான பேர்கள், கால காலமாக, நூற்றாண்டு காலமாகப் புழங்கி வரும் பெயர்கள் அவை… கான். கெம்ப். கோப். இகல்தன்… ஆனால் கடைகளில் எனக்கு அடையாளந் தெரிகிறாப் போல யாரும் சிக்கவில்லை. அட இங்கே ஒரு காலத்தில் […]
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. […]
— தமிழ்மணவாளன் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. அண்மையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ என்னும் திரைப்படம் வெளியான போது, பரவலாக பலரது பாராட்டுகளையும், குறிப்பிடத்தக்க ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. வியாபார ரீதியிலான படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வித்தியாசமான அம்சங்களுடன் சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ’தம்பி வெட்டோத்தி சுந்தரம்’வியாபார ரீதியிலான அம்சங்களைக் கொண்ட படம் தானெனினும், அழுத்தமான கதையின் துணையோடு அதனை பூர்த்தி செய்திருந்தது எனலாம். படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு, பணிவாய்ப்பு மறுக்கப் […]
இந்த கதையின் கதாநாயகன் நான் தான் என்பதாய் நினைத்து கொண்டால் என்னை விட அறிவற்றவர் எவரும் இந்த உலகில் இல்லை என்றே நீங்கள் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.அபூர்வத்தெறிப்புக்கள் போலன்றி நான் எப்போதும் வெளியே தெரிவதில்லை.நன்கு உலர்ந்த துணியின் மீது விழும் நீர்த்துளி சற்று நேரத்திற்கு மட்டுமே தனது இருப்பை உணர்த்திவிட்டு மறைவது போன்றது தான் எனது தெறிப்பும் இருத்தலும்.தாமரை இலை மீது உருண்டு திரண்ட துளிகளாய் என்னை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் எனது விழைவு கூட என்னை உங்களிலிருந்து தனித்துக்காட்டுவதாய் படலாம்.ஆனால் […]
– டெனிஸ்கொலன் நாகரத்தினம் கிருஷ்ணா மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்) காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை […]
புத்தாண்டு பிறந்த அன்று அதனை வாழ்த்தி வரவேற்பதற்காக அய்ந்துகிலோ பச்சரிசி வாங்கி வண்ணங்கள் பல சேர்த்து அலுவலக வாயிலிலே கோலம் போட்டிருந்தார்கள். கோலம் போட்ட அய்ந்து கிலோ அரிசியும் அய்ந்து ரூபாயுக்கு பெருநகர ரேஷன் கடை வாயிலில் வாங்கியதாம். மத்திய அரசின் ஒரு அலுவலக வாயிலில்தான் அந்த அழகுக்கோலம். அந்தக்கோலம் போட்டவர்கள் ஐவரும் அந்த அலுவலகத்துப் பெண் ஊழியர்கள். அவ்வலுவலக அதிகாரிகள் சிலரும் கூடவே இப்படியும் அப்படியும் அக்கோல கோஷ்டியோடு தொங்கிகொண்டிருந்தார்கள். கம் கணபதியே நம என்று […]
வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம். கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், மதுரைக் கோட்டை, காவானிகாவல் என்று பழக்கத்தில் இல்லாத பெயர்களில் ஊர்கள். கதை நடைபெறும் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னராட்சிக் காலம். கொம்புலி ( பசுபதி ) கள்ளர்களின் தலைவன். வரிப்புலி ( ஆதி ) காவல்காரனாக இருந்து கள்ளனாக மாறியவன். ராணியின் வைர அட்டிகையை, தனி ஒரு ஆளாக திருடியிருக்கும் வரிப்புலியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் […]
ரிஷ்வன் ராம் ஒரு கணம் அதிர்ச்சியில் சிலையாகிவிட்டான், அவன் அதைப் பார்த்த பொழுது, . அந்த எட்டுக்கு எட்டுக்கு அலுவலக அறையில், நான்கு சேர்கள் இருக்க, அதில் மூன்று சேர்கள் காலியாக, அதில் ஒன்றில், ஷிவானி அமர்ந்திருந்தாள், இல்லை இல்லை அப்படியே பின்புறம் சரிந்து, மேல் கூரையைப் பார்த்தபடி, அணிந்திருந்த துப்பட்டா விலகி, நாடு மார்பில் குத்திய கத்தியு டன், ரத்தம் சேரில் வழிந்து, மார்ப்லஸ் தரை எங்கும் ஒரே ரத்தமயமாய், கண்கள் மேலே பார்க்க, நிறைய […]
இளவரசன் கசீர் போர்களத்திலிருந்து குதிரையில் திரும்பிக் கொண்டிருந்தான். அவன் வகடு பழங்குடியினரை ஆளும் நகம்பாவின் மகன். வகடு பேரரசை ஆள வேண்டும் என்று போர்டுமா பழங்குடியினர் அவர்கள் மேல் போர் தொடுத்திருந்தார்கள். வகடு இனத்தவரும் சற்றும் மனந்தளராமல் அவர்களை எதிர்த்து வந்தார்கள். வெற்றி அல்லது செத்து மடி என்ற உறுதியான கொள்கையிடன் இருந்தான் இளவரசன். நகம்பா வயதான போதும், எட்டு குழந்தைகளுக்குத் தந்தையான கசீருக்கு பட்டத்தை கொடுக்காமல், போர் தொடுக்க அவனை அனுப்பிய வண்ணம் இருந்தார். இந்தப் […]