மட்டக்களப்பில் வைத்து

This entry is part 19 of 29 in the series 12 மே 2013

  மஞ்சுள வெடிவர்தன தமிழில் – ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும் உறுதியான கணமொன்றில் மாத்திரமே   தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும் களப்பு நீரில் நீண்ட தம் வெளிச்ச ரேகைகளை வரையும்.   கல்லடிப்பாலம் அரண் […]

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)

This entry is part 18 of 29 in the series 12 மே 2013

க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. […]

சுமைதாங்கி சாய்ந்தால் ……..

This entry is part 17 of 29 in the series 12 மே 2013

  “நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”   “ம்ம்ம்”   “என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.?”   “அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. […]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1

This entry is part 16 of 29 in the series 12 மே 2013

  மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  [ http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=kjvJ7dRjJbs ] 2.  [ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cN_0xW87fdU  ] The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  அமெரிக்காவில் நேர்ந்த 1777 ஆண்டு “சுதந்திரப் போரின்” [American War of Independence] சமயத்தில் நடந்ததாக எழுதப் பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி.   பிரிட்டீஷ் காலனி அதிகாரி […]

புதிய வலை இதழ் – பன்மெய்

This entry is part 15 of 29 in the series 12 மே 2013

Dear Friends, We are launching the E-Journal Panmey for political and idealogical discussions. You can read the first issue of Panmey with this link:http://panmey.com/content/ Please interact and contribute with your writings: Panmeyithazh@gamail.com Prem

வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது

This entry is part 13 of 29 in the series 12 மே 2013

இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது முதலாவது நாவலும் நானும் மட்டுமானது வனசாட்சி ‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், […]

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

This entry is part 12 of 29 in the series 12 மே 2013

தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். 90 […]

நீங்காத நினைவுகள் – 2

This entry is part 11 of 29 in the series 12 மே 2013

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. பேராசிரியர் கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பொன்னியின் புதல்வர் எனும் தலைப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னால் எழுதிய ஆசிரியர் சுந்தா என்பது இதற்கு ஒரு கூடுதல் காரணமாகும். இவ்விழாவுக்குச் செல்லா விட்டாலும், அது பற்றிய சேதிகளை அறிந்து மகிழ்ந்ததற்குக் காரணம் சுந்தாவை நான் சந்தித்து அளவளாவியுள்ளதுதான். அந்தச் சந்திப்பின் போது அவருடைய மேன்மைகளைப் புரிந்துகொள்ள […]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5

This entry is part 10 of 29 in the series 12 மே 2013

டிடிங்……ட்டிங்…….டிடிங்…….டிடிங்……ட்டிட்டிங்……ட்டிட்டிடிங்…….டிங்க்க்க்க்க்க்க்க்…….தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் அம்மா கல்யாணி, சற்றே பரபரப்பானவளாக……யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்…. அதுக்காக இப்படியா.. காலிங் பெல்லை….பூஜை மணி அடிக்கிறா மாதிரி அடிக்கறது……என்று கோபத்தோடு சொல்லிக் கொண்டே “வரேன்…..வரேன்….வரேன்…..வரேன்….” காலிங் பெல் ஒரு தடவை அடிச்சா போதாதா…இது வீடா இல்லை செவிட்டு ஆஸ்பத்திரியா…..இப்படி நூறு தடவை அடிச்சு சுவிட்ச்சை கைல பேத்து எடுத்துண்டு வரேன்னு யாருட்டயாவது சவால் விட்ட மாதிரின்னா இருக்கு….நல்ல கூத்து….சொல்லிக்கொண்டே கதவைத் திறக்கவும்…எதிரில் அழகான பெண் […]

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

This entry is part 9 of 29 in the series 12 மே 2013

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் வெளியிட்டு உதவ வேண்டுகிறேன் நன்றி! தொடர்பு முகவரி காசி இல்லம் drpanju49@yahoo.co.in 25, 20வது தெரு, ஔவை நகர், லாசுப்பேட்டை(அஞ்) புதுச்சேரி – 605 008