மிதிலாவிலாஸ்-19

This entry is part 9 of 25 in the series 17 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆனால்.. சித்தார்த்தாவை பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை. இனிமேல் தன்னுடைய யோசனைகளை எல்லாம் அவனைப் பற்றித்தான் இருக்க வேண்டும். இந்த பத்தொன்பது வருடங்களாக சித்தார்த்தா துரதிர்ஷ்டவசமாக இழந்த சந்தோஷம், ஆயிரம் மடங்காய் தாயின் அன்பு வடிவத்தின் அவனுக்கு கிடைக்க வேண்டும். கடவுள் உயிருக்கு உயிரான நினைவுச் சின்னத்தை பத்திரமாக தன்னிடம் ஒப்படைத்து இருக்கிறார். கண்ணின் இமைபோல் அதனை பாதுகாக்க வேண்டும். அவள் உடல் மிதிலாவிலாசில் தரிக்கவில்லை. சித்தார்த்தாவை […]

தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி

This entry is part 10 of 25 in the series 17 மே 2015

.   (வேலூர் மத்திய சிறைச்சாலை) வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை. வேலூர் தமிழகத்தின் வட கிழக்கில் உள்ள நகரம். பாலாற்றின் கரையோரத்தில் வேலூர் அமைந்துள்ளது. அப்போது அது வாட ஆற்காடு மாவட்டத்தில் இருந்தது. ( தற்போது வேலூர் தனி மாவட்டமாகிவிட்டது ). வேலூர் பல அரசாட்சிகளின் கீழ் ஆளப்பட்ட சரித்திரப் […]

மூன்று குறுங்கதைகள்

This entry is part 11 of 25 in the series 17 மே 2015

0 1. துவக்கு 0 கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள். ‘ எல்லா விடுமுறை நாட்களும் நம்ம பேட்டரியை ரீ சார்ஜ் செய்துக்கற நாளுங்க. அத எல்லாரும் செஞ்சு கிட்டா சோர்வே வராது ‘ இது கிட்டத்தட்ட மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொள்வான் அவன். ஆனால் வெளியில் சொல்வதில்லை. அவள் […]

நெருடல்

This entry is part 12 of 25 in the series 17 மே 2015

அவன் எழுதிய ஒரு கட்டுரை நூல்தான் ‘படித்தலும் படைத்தலும்’ அதற்கு நெல்லிகுப்பம் பெரியவர் ஜிஜியார் விமரிசனம் எழுதியிருந்தார். த்ரமான ஒரு இலக்கிய பத்திரிகையிலும் அது பிரசுரமாகி வெளி வந்திருந்தது.. அந்த இலக்கிய பத்திரிகையைப்பிரித்து அதனைப்பார்த்ததுமே அத்தனை மகிழ்ச்சி.அதே இலக்கிய பத்திரிகையில் அவ்வப்போது அவன் எழுதிய கட்டுரைகள்தான் சமீபத்தில் இப்படி ஒரு புத்தகமாக வந்தது… அவன் எழுதி அவை வெளியும் வந்து சற்று பேசவும் பட்ட அவைகளை த் தொகுத்து ஒரு நூலாகவெளியிட சின்னதாக அவனுக்கு ஆசை. எங்கு […]

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

This entry is part 13 of 25 in the series 17 மே 2015

ஜெ ரகுநாதன் “ லகு! ப்லமாதண்டா! அட்ச்சே பாலு அந்த சிக்ஸ்!” நாராயணன் குதி குதியென குதித்தான். எங்கள் டீம் வின் பண்ணின சந்தோஷம். நான் 47 அடித்து நாட் அவுட் வேறு. “போடா மயிறு! ரகு லொட்டாங்கைன்னு தெரியாதா ஒனக்கு? லெக் சைடுல போட்டு போட்டு குடுக்கற!” எதிர் அணி சித்தார்த் கோண்டுவை திட்டித்தீர்த்துக்கொண்டு போக, நாராயணன் ஓடி வந்து என்னை கட்டிக்கொண்டே விட்டான். அவன் என் மஹா ரசிகன்! நாராயணன் பற்றிச்சொல்ல வேண்டும். நீங்கள் […]

முழுக்கு

This entry is part 14 of 25 in the series 17 மே 2015

கைப்பேசி ஒலித்தது. எடுத்து யாரென்று பார்த்தேன். கோவிந்தராசனின் அழைப்புதான் அது. ”வணக்கம் கோவிந்து, சொல்லுங்க” என்றேன். ”ஒண்ணுமில்ல, அதான் நேத்திக்கு சொன்னேன்ல; சரியா மதியம் மூணு மணிக்கு வண்டி ஒங்க வீட்டுக்கு வந்திடும். நாலுபேருக்கும் ஒங்க வீட்ல டிகிரி காப்பி. அதைக் குடிச்சிட்டு கெளம்பறோம். ஆறரை மணிக்கெல்லாம் சமயபுரம். அங்கே ஆத்தாளக் கும்பிடணும். அதுக்கப்புறம் சீரங்கம். அங்க பெருமாளச் சேவிக்கறோம். ராத்திரி அங்கியே தங்கிட்டு காலைல திண்டுக்கல் போறோம்” “சரி கோவிந்து, பயணத் திட்டமெல்லாம் சரியாய்த்தான் இருக்கு. […]

பல்லக்கு

This entry is part 15 of 25 in the series 17 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம் ( பொன்னியின் செல்வனை அடியொற்றி எழுதப்பட்டது ) பல்லக்குமெல்ல ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் தீவட்டி பிடித்த வீரர்களும் குதிரையில் தொடர்ந்தார்கள். பார்த்துக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் திரும்பி ஜாடை செய்தான். குதிரைகளின் குளம்பொலி குறையும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு மெதுவாக ஆழ்வார்க்கடியான் சொன்னான். “பார்த்தாயா தம்பி”? “ஓய் வைஷ்ணவ சிகாமணியே, சித்தம் பிசகிவிட்டதா உமக்கு ? நள்ளிரவில், எந்தவித கொடிபடைகளுமின்றி பயணிக்கும் ஒரு பல்லக்கை காட்டி பார்த்தாயா என்று கேட்டால் என்னத்தை சொல்வது ” ? ஆழ்வார்க்கடியான் […]

தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…

This entry is part 16 of 25 in the series 17 மே 2015

  ” இப்படியொரு கவிஞரா என்று மலைப்பை ஏற்படுத்திவிட்டார் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் தமது ” பறையொலி ” கவிதைத் தொகுப்பின் மூலம் ” என்கிறார் தினமணி ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதன்.   இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவது இவர் கவிதைகளின் முக்கிய கூறாகிறது. கச்சிதமான சொற்களால் கவிதையைப் பிடித்துக் கொண்டுவந்து நம் முன் நிறுத்துகிறார். ஏதோ ஒரு கவலை இவர் எழுத்தில் மௌனமாய் நின்று கொண்டிருக்கிறது. அதன் உயிப்பை […]

சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

This entry is part 17 of 25 in the series 17 மே 2015

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு   NCBH   நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா   * 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூர் * தலைமை :   இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் ) வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை )     சிறப்புரை:   தோழர் ஆர். நல்லக்கண்ணு ( […]

கடந்து செல்லும் பெண்

This entry is part 18 of 25 in the series 17 மே 2015

    நீ மெதுவாய் நடந்து வர நேரமும் பொழுதும் இருக்கிறது.   அதற்குள் ஒன்றும் நடந்து விட முடியாதென்று உறுதியாயிருக்கிறாய்.   நீ தனியாக நடந்து வருகிறாய் என்பதால் பொறுப்பாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறாய்.   உன் வனப்பில் இருக்கும் கண்டிப்பில் யாரும் உன்னை பலவந்தப்படுத்தி விட முடியாது.   யார் மேலான அவநம்பிக்கையிலும் அதைரியத்திலும் உன் நம்பிக்கையையும் தைரியத்தையும் நீ அமைத்துக் கொள்ளவில்லை என்பது தெரியும்.   காதலை வெளிப்படுத்துவது பலவீனமில்லையென்பதில் நீ யதார்த்ததை […]