கரோனா ஸிந்துஜா 1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம். 2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம். முத்தமிடும் சுத்தக் காற்று. இரைச்சலற்ற தெரு. முற்றத்திலும் திண்ணையிலும் உரையாடும் குரல்கள். இழந்தவை இவையென நினைத்தவை அனைத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டு இழக்க முடியாததை எடுத்துச் சென்றது. […]
Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் […]
எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது. தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன. தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் […]
கோ. மன்றவாணன் ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் உண்டு. அவர்களே கால தேவனை மதிப்பவர்கள். “கூட்டம் வந்ததும் தொடங்கி விடலாம்” என்று அமைப்பாளர்களில் ஒருவர் சொல்வார். காத்திருப்போம் காத்திருப்போம் காலம் கரைந்துகொண்டு இருக்கும். ஆறரைக்குத் தொடங்கிவிடலாம் என்பார்கள். அந்த ஆறரையை அவர்கள் மறந்து விடுவார்களோ என்னவோ…? மணி ஏழு நோக்கி ஏறுநடை போட்டபடி இருக்கும். ஓரளவு கூட்டம் வந்திருக்கும். அதற்குமேல் வருவோரைப் பற்றி […]
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம். கொரானா விழிப்புணர்வு போட்டிகள் © பதிவுக் கட்டணம் இல்லை. © போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். 1.திறனறி தேர்விற்கு இந்த இணைப்பிற்குச் சென்று பதிவிடவும் தமிழரின் சூழலியல் குறித்த திறனறி வினா. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியல், முன் உணர்வு, விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்பு தொடர்பான வினாக்கள். (பதினென் மேற்கணக்கு, […]
”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா என் பொண்ணு தூங்கவே இல்லை தெரியுமா? என்றான் பதிலுக்குக் கோபு. ”ஆமாம் அவ தப்புதான செஞ்சா?” “என்னா பெரிய தப்பு?, வீட்டுக் கணக்கைப் போடல; அதான” “ஆமாம் அது தப்பில்லையா? புள்ளங்க வீட்ல போட்டுக்கிட்டு வரணும்தான டீச்சர் தராங்க; அதைப் போடாம வந்தா குத்தந்தான” “அதுக்காக பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்றதா? “சரி; […]
தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் (அ) மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை ‘நாலு கண்ணா’ என்றும் ‘புட்டிக்கண்ணாடி’ என்றும் உரக்க அழைப்பவர்கள் எப்படி உற்ற நண்பர்களாக முடியும்? உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை மனிதர்களாகக் கொள்ளத் தகுமா? அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே தன்னை அப்பழுக்கற்ற வராக்கிக்கொள்ள முடியு மென்ற அரிச்சுவடியை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் தெரியவில்லை. அப்பட்டப் பொய்யை அடுத்தடுத்துச் சொல்வ தாலேயே அதை மெய்யாக்கிவிட முடியுமென்றும் படித்திருக் கிறார்கள். எந்தப் புத்தகத்தில் தெரியவில்லை. நம்மிடமுள்ள நூல்கள்தான் […]
நாகர்கோவில் கேரளா எல்லையில் பாரசாலை பக்கம் ஒரு முக்கிய பிரமுகரின் திருமணம். ஊர்மக்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளென பலரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.கேரள போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடைய சக நண்பர்களும் கூடவே வந்து இறங்கினர். வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த இருவர் எல்லோரையும் வரவேற்பதைப் போலவே வாருங்க சார் என அவரை உள்ளே அழைத்து வரவேற்றார். ஆச்சரியமாகத்தான் இருந்தது அந்த திருமணத்திற்கு சென்றிருந்த நம்ம ஊர் நண்பருக்கு. அவரும் கற்பனை செய்து […]
கடல்புத்திரன் இக்குறுநாவலில்…., சம்பவங்கள் சில உண்மையானவை. வெவ்வேறு இடங்களில் நடந்த கதைகளை நாவலுருவத்திற்காக ஒரு குடும்பத்தோடேயே இணைத்து சில பொதுவான அபிப்பிராயங்களை கலந்து கற்பனை பண்ணி எழுதியிருந்தேன். இயல்பான பேச்சுத்தமிழை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படியே எழுத முயன்றேன். “பேச்சுதமிழ் பற்றிய ஆய்வுப் புத்தகம்” (வன்னிய சிங்கம் எழுதியது) ஒரு உற்சாகத்தைத் தந்தது. இரு தமிழ் வழக்கை விட்டு (உரையாடலை பேச்சுத் தமிழிலும் மற்றதை செந்தமிழிலும் எழுதுதல்) ஒரு தமிழில் (எல்லாவற்றையும் பேச்சுத் தமிழில்) […]