ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் வணிகத்தைப் பாருங்கள். பீரங்கி, வெடிமருந்து தயாரிக்கிறேன். விற்ற பணத்தை நான் தர்மத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இதில் எனக்கில்லை குற்ற உணர்வு. பணம் பணம்தான் ! அது விஸ்கி விற்று வந்தால் என்ன ? வெடி மருந்து விற்று வந்தால் என்ன ? பணத்தின் நதி மூலத்தைப் பார்த்தால் பலர் சாவடியில் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான் ! […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ஒரு வழியாக இந்தப் பள்ளிக்காலமும் முடிவுக்கு வந்தது. பிளாக்ஸ்டேபிள் நிலையத்தில் இறங்கும் போதே மனம் சிறகடித்துப் பறக்கிறது.¢ இக்கிணி உசரங் கொடுத்திருந்தேன் இப்போது. தெர்கன்பரியில் நீல செர்ஜ் புது சூட் தைத்திருந்தேன். புது டை தனியே வாங்கி வைத்திருக்கிறேன். ரெண்டும் அணிந்து டக் டக்கென்று நடந்து போகப் பிரியப்பட்டேன். சரக்குவண்டியில் என் பெட்டி தனியே வந்தது. சரியான நேரத்திற்கு அது என் பெட்டியைக் கெண்டு சேர்த்துவிடும். வந்து தேநீர் சட்டுப்புட்டென்று குடித்த ஜோரில் […]
வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே. ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை..” என்கிறார் கட்டுரையாளர்.விருட்சம் சார்பில் எழுத்தாளர் அழகியசிங்கர் நிறைய […]
முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி. மங்கல விளக்குகளுக்குத் திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர் ஒளியூட்டிய பின், கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர் திருமிகு தணிகா சமரசம் ஆகிய மூவரும் கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று உரத்த குரலில் கம்பன் வாழ்த்தை முழங்கினர். ஆறு காண்டங்களின் கடவுள் வணக்கப் பாடல்களையும் அழகாகப் பாடினார் மகளிரணி உறுப்பினர் […]
காலப்போக்கில் களிமண் திரண்டு கரையை நிறைத்ததால் கடல் வணிகம் குன்றிப்போக காலாவதியாகிப்போன கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும் காரைக்குடி சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் கைவிடப்பட்டதால் காற்று வாங்கும் ரயிலடிக்கும் இடையே பல ஆண்டுகளாக பசுமை மாறாமல் பரந்து நிற்கின்ற பாதாம் மரத்தடியில் பள்ளிப் பருவத்தில் பரீட்ச்சைக்குப் படிக்கச் செல்வதுண்டு குட்டிக்ககுரா பவுடரும் கொலுசுச் சப்தமுமாக உலவும் மோகினிப் பிசாசுக்குப் பயந்து கட்டிடத்துள் செல்வதில்லை எனினும் இயற்கையின் ஓர் உபாதைக்கு கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஒதுங்குகயில் ஆர்வம் எட்டிப்பார்க்க தூசு படிந்த தரையில் […]
நாய்களின் நடுநிசிகள் தனதாக்கிக் கொண்ட தெருவின் வழியே நாய்களைத் துரத்தும் கோடங்கிப் பயணம் எனது. நான் பேயாய்த் தெரிந்திருக்கக்கூடும் நிறங்களைப் பிரித்தறியாத நாய்களின் கண்களுக்கு. உரக்கக் குழைத்து அடையாளம் காட்டின- பொங்கி வழியும் அவைகளின் பயத்துடனான பளிங்குக் கண்களின் வழி என் பேய் பிம்பத்தை. பேய் வேடம் தறித்து நாய்களைத் துரத்த ஆரம்பித்ததில் நித்தமும் என் பயணத்தைத் தெருக்கள் விரும்பின. நிம்மதியிழந்த நாய்கள் அடுத்த தெருவில் தஞ்சம் புகுந்து நான் செல்லும் தெருவில் பேய் நடமாட்டம் இருப்பதை […]
மகா சந்திப்பொன்றில் சுய பகிர்வு உள்ளடக்கிய வாரத்தைகளை தேடி கொண்டிருக்கையில் ஊடுருவும் பார்வை விடுவித்து கொள்ளும் மவுனம் கடந்து கொண்டிருக்கிறது . உன் வெட்க நிற பிரிகையில் வண்ணங்களை தூவி கொண்டிருக்கிறாய் பொழிவின் ஒளி பிரபஞ்சத்தை மறைப்பதாக இருக்கிறது . போதும் விட்டு விடு உன் ஒவ்வொரு செய்கை நம் நிறைவின் தொடக்கமாகிறது . நொடிகளை இச்சமயம் பழித்து கொண்டிருக்கிறது நம் எண்ணங்கள் . முடிவிலி காலம் உண்டெனில் அது இதுவாக இருக்க கடவது . அதில் […]
Mr. Mohammed Yoonus explained his meeting with Aringyar Anna in Hong Kong. Hope it interests our readers. TCA (Tamil Cultural Association, Hong Kong) and Aringyar Anna
வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும். வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், […]