கௌசல்யா ரங்கநாதன் ———-1-தினம் இருமுறைகளாவது, பிரும்மாண்டமான, பிரபலங்கள் வசித்திடும், அந்த தெருவில் உள்ள “கிளி கொஞ்சும்” என்ற வாக்கியத்துக்கொப்ப, கட்டப்பட்டிருக்கும் அந்த லேடஸ்ட் மாடல் பங்களாவையும், அங்கு முகப்பு வாயிற் படிக்கட்டில் அமர்ந்து எங்கோ வெறிக்க பார்த்தவாறு, சோகம் கப்பிய முகத்துடன் காணப்படும் அந்த முதியவரையும் (அகவை 80 கடந்தவராய் இருக்கலாம்)பார்த்தவாறே போய்,வருவது என் வழக்கம்.. பங்களா வாயிற் கேட்டிலிருந்து முகப்பு வாயிலேகூட அரை கி.மீ. இருக்கலாம் என்றே நினைக்கத் தோன்றும்..தவிர அப்போதுதான் புதிதாய்,வண்ணம் பூசப்பட்டது […]
இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் உறுதுயரையும். பழகத்தான் வேண்டும். பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள் காலெட்டிப்போட்டு நம்மைப் பின் தொடராதிருக்க வழியதுவொன்றேயெனக் குழம்பித் தெளியும் கவி யழும் கண்ணீர்த்துளிகள் வழிந்து வழிந்து தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகளாய். அந்தரத்தில் ஒவ்வொரு படியாய் தட்டுத்தடுமாறித் தடுக்கி விழுந்து தரையில் உள்ளங்கையழுந்தி நிமிர்ந்து எழுந்து போகும் கவி தன் வரிகளில் உறுதியான […]
பிரியா. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்த முதல் நாள். சேலை அவளுக்கு கொஞ்சம் அந்நியமானாலும், காஞ்சிபுரப் பட்டில் நுழைந்து கொண்டு திராட்சை விழிகள் உருள ஊஞ்சலில் அமர்ந்திருக்கிறாள். பட்டு அங்கங்கே லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகிறது. பாதங்களில் மருதாணி ஓவியம். தங்கக் கொலுசு தெரிந்தது. ஊஞ்சல் லேசாக ஆடுகிறது. பெண் பார்க்க அக்கம் பக்கத்தினர் வந்துகொண்டிருந்தனர். தட்டில் சீனியும் பூவும் கொண்டு வந்தார்கள். தரையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளத்தில் அமர்ந்து விழிகளை மட்டும் உருட்டி பிரியாவை பார்ப்பது பிறகு […]
ஜோதிர்லதா கிரிஜா (1997 இல் ஆனந்த விகடனில் வந்தது. “வாழ்வே தவமாக…” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) இப்படி ஓர் இக்கட்டு வருமென்று சாந்தி கனவு கூடக் கண்டதில்லை. திரைப்படங்களிலும், ஏட்டுக்கதைகளிலும் வரும் போக்கிரிகள் மெய்யான வாழ்க்கையிலும் உள்ளனர் என்பது அவளுக்குத் தெரியும்தானென்றாலும், அப்படி ஒரு பொல்லாதவன் தன் வாழ்க்கையிலேயே குறுக்கிட்ட போது அவளுக்கு நேர்ந்த அச்சத்தை விடவும் திகைப்பு அதிகமாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை! […]
05.11.2020 அழகியசிங்கர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பிரபல எழுத்தாளர் நாவல்கள், சிறுகதைகள் என்று வெகு ஜன பத்திரிகைகளில் தொடர்கள் எழுதியவர். ஆனால் அவர் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார் என்று எவ்வளவு பேருக்குத் தெரியும். அவர் கவிதைகள் பெரும்பாலும் ஆத்மாநாம் உருவாக்கிய ழ என்ற சிற்றேட்டிலும், பின்னால் நவீன விருட்சம் இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. ‘நானும் நானும்’ என்ற தலைப்பில் அவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு மையம் வெளியீடாக ஜøலை 1996 வெளிவந்தது. அவர் கவிதைகள் எளிமையாகவும் புரியும் படியாகவும் எழுதப்பட்டிருக்கும். அடிப்படையில் […]
ஸிந்துஜா காதல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; அதற்கும் மேலாக மனம் சார்ந்தது என்று பலரும் பல தளங்களில் சொல்லி விட்டார்கள். இளமையில் இது சற்று அலட்சியப்படுத்த வேண்டிய கருத்து என்று அன்றைய வயது நிர்மாணித்து விடுகிறது. தளர்ந்த உடல் காதலைத் தாங்கிப் பிடிப்பதில்லை. ஆனால் பௌதீக ரீதியாக வயதாகியும், மனம் அப்போதுதான் மலர்ந்த பூவைப் போல வசீகரத்துடனும் , நீர்வீழ்ச்சியில் பொங்கி வரும் தண்ணீரின் வீரியத்துடனும் இளமையாகப் பொலிந்தால் அத்தகைய வாழ்க்கை அமையப்பெற்றவர்கள் வரப்பிரசாதிகள்தாம். வெயில் கதையில் வரும் வெங்கி கிழவரைப் போல. வெங்குவின் எழுபத்தியிரண்டாவது வயதில் அறுபத்தி ஐந்து வயது மனைவி இறந்து விடுகிறாள். இறந்து விட்ட மனைவியைப் […]
. கோ. மன்றவாணன் அரசு மருத்துவ மனையில் இன்றோ நாளையோ என உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இருக்கும் போதே தன் வாழ்நாள் சாதனையான நூலை வெளியீடு செய்யத் துடிக்கிறார். செயற்கை உயிர்க்காற்றுச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த நூலை வெளியிடுகிறார். எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொள்கிறார். இப்படி ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு வேறு எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். உயிர் கரைந்துகொண்டிருக்கும் நிலையில் நூல் வெளியீடு நடத்திய இந்நிகழ்வே முதல் நிகழ்வு ஆகும். […]
முருகபூபதி – அவுஸ்திரேலியா தற்காலத் தமிழ் அகராதியில் ஈழத்தமிழ்ச்சொற்களையும் இணைத்த மூத்த பதிப்பாளர் ( இம்மாதம் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் கொரோனோ தொற்றினால் மறைந்த மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனுக்காக நினைவேந்தல் இணைய வழி காணொளி அரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. சிட்னி அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ( A.T.B.C ) வானொலி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கானா. பிரபா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் அ.ராமசாமி, ஆவணப்பட இயக்குநர் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள் ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா எண்மக் காலத்தில் பெண்ணிய ஆவணப்படுத்தலும் நெறிமுறைகளும் – இலா “உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்” – அருண் பிரசாத் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – தமிழில் – கடலூர் வாசு பூ கர்ப்பம் – பானுமதி ந. கைச்சிட்டா – 8 – பாஸ்டன் பாலா கவிதைகள்: “அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள் – ச. அனுக்ரஹா அந்த இயல்வாகை மரத்தடியில் கொஞ்ச நேரம் – குமார் சேகரன் மண்ணுக்கடியில் – கே. ராஜலட்சுமி கதைகள்: கேளாச்செவிகள் முனைவர் ப. சரவணன் அணில் – காமாட்சி சிவா காதல் – ராம்பிரசாத் தவிர: தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை புத்தகக்குறி – பதிப்புக் குழு […]
அமெரிக்காவில் 2020 இல் நடந்து முடிந்த தேர்தலை மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள். டொனால்ட் ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் . தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே . இல்லையா ? ஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான ஆபிரகாம், கடவுள் சொன்னதற்காகத் தனது மகனைப் பலியிடத் துணிந்தவர். யூதர்கள் கடவுளின் […]