குரும்பையூர் பொன் சிவராசா மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம் கனவுகள் அல்ல கனத்த இதயம் பேசியது என்னுடனே அந்த நடு ராத்திரியில் நல்லவர் போல் வேசம் வல்லவர் போல் நடிப்பு பகட்டான வாழ்க்கை தற்பெருமைப் பேச்சு இரந்து வேண்டும் பட்டங்கள் பதவிகள் அரசியல் வாதியையும் அதி பணக்காரரையும் அண்டிப் பிழைக்கும் அவலம் அடுத்தவன் துன்பத்தை அசை போட்டு மகிழும் மனிதர்கள்….. மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம்
ஆயிரம் முகில்கள் கடக்கும் – ஆனால் ஒன்றுதான் மழையை இறக்கும் ஆயிரம் பார்வைகள் தொடுக்கும் – ஆனால் ஒன்றுதான் காதலைப் பதிக்கும் சிக்கி முக்கியாய் உரசும் அந்தத் தீப்பொறியில் காதல் உயிர்க்கும் மின்னல் ஒன்று சொடுக்கும் காதல் மின்சாரம் உடம்பெங்கும் நிறைக்கும் ஆயிரங் காலத்துப் பயிராய்க் காதல் கழனியெலாம் முளைக்கட்டிச் செழிக்கும் இது அன்றையக் காதல் *********** ஒரு குறுஞ் செய்தியில் பிறக்கும் மறு குறுஞ் செய்தியில் இறக்கும் இது இன்றையக் காதல் அமீதாம்மாள்
Sand and Foam – Khalil Gibran (5) (வாலிகையும்) மணலும் , நுரையும்! (5) பவள சங்கரி புனையிழையவள் தம் முகத்தை புன்னகையால் முகத்திரையிடலாம். சோகத்தில் சோர்ந்த இதயமது, இன்பமான இதயத்துடன், இன்னிசை கீதமதை இதமாக இசைக்கும் அவரின் என்னே உயர் பண்பு. எவனொருவன் மாதொருத்தியை புரிந்து கொள்கிறானோ, அல்லது மேதைகளை, சோதனைகளுக்குள்ளாக்குகிறானோ, அல்லது மௌனத்தின் மர்மமதை விடுவிக்கிறானோ, அவனொருவன் மட்டுமே சௌந்தர்யமான சொப்பனத்திலிருந்து, எழுப்பி, காலை உணவு மேசையின் மீது அமரச் செய்யக் கூடியவன். […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், அண்மைக் காலங்களில் அதிகமாக இலக்கியத்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றி வருபவர். நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதி […]
– எஸ்ஸார்சி அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம் அவனைப்போன்ற விருது என்ற ஒன்றினை வாங்கிவிடும் பிரத்தியேக அரசியல் அல்லது கலை தெரியாதவர்கட்கெல்லாம் இந்த காலத்தில் விருது அறிவிப்பு சொல்லி விடுவார்களா. ஆனாலும் சொல்லி இருக்கிறார்களே. அவன் அடிமனத்தில் கொஞ்சம் பெருமைப் பட்டுக்கொண்டான். செல் பேசியில் யாரெல்லாமோ அழைத்தார்கள். வாழ்த்துச் சொன்னார்கள். ‘எனக்கு உங்கள் படைப்பைபப்படித்த அப்போதே தெரிந்து விட்டது.. இதற்கு நிச்சயம் […]
பி.லெனின் முனைவர்பட்டஆய்வாளர், இந்தியமொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். முன்னுரை தமிழ் மொழி பலவிதமான உள்ளமைப்புகளைக் கொண்டது. ஓலியமைப்பு, ஒலியன் அமைப்பு, இலக்கண அமைப்பு போன்ற உள்ளமைப்புகள் பலவற்றைக் கொண்டது மொழி. ஒருமொழியின் வரலாற்றை ஆராயும் போது அம்;மொழி பல்வேறு பரிணாம வளர்ச்சிநிலையினைப் பெற்று தற்போதைய நிலையினைக் கண்டுள்ளது என்பதனை அறிந்தகொள்ளமுடிகிறது. தென் திராவிட மெழிக்குடும்பத்தைச் சார்ந்தது தமிழ் மொழி. இம்மொழியில் தோன்றியமுதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்பதாகும், தொல்கப்பிய சொல்லதிகாரத்தில் தன்மைப் பன்மை வினையில் […]
-பா.சத்தியமோகன் நெஞ்சில் யாருமில்லாத போது நுழைகிறேன் இருக்கின்ற சிலரும் உறக்கத்தில் இருக்கின்றனர் காற்று இன்று அமைதியாய் இல்லை எவருக்கும் அமைதி பற்றி தெரியவில்லை நன்கு அறிய முடிகிறது ஒருவன் சந்தேகிக்க எனக்கு வரும் காற்றின் முன்நின்று அதையும் தடுக்கும்போட்டியில் உள்ளான்! விலகி எழுந்துபோக நினைக்கிறேன் இருக்கின்ற சிலரின் கால்கள் உறக்கத்தில் மட்டுமே நடக்கப்பழகியுள்ளதையும் அறிகிறேன் இதற்கு மேல் நான் எழுத எண்ணிய காகிதமும் குத்துகிறது யாருமில்லாதபோது வருகிறேன் பிறகு! *****
தோட்டத்துப் பூக்கள் பிணம், கடவுள், மணமக்கள் அலங்கரிப்பது எதை என்று தெரிந்து கொண்டா மலர்கிறது முலைப் பாலின் போதை மது புட்டியில் முடியும் நடுநிசி தூக்கம் இல்லை கனவுத் தொல்லை கை கதவைத் தட்ட உள்ளேயிருந்து பதிலில்லை படுக்கைவிரிப்பில் அவள் வந்து சென்ற சுவடுகள் நாய் காலை நக்குவது தெரிகிறது எனக்கு குவார்ட்டர் பத்தாது சுயத்தை இழக்கவே ஏதோ ஒரு போதை இரவில் நான் சாப்பிட்ட பாத்திரத்தை நக்கிக் கொண்டிருக்கும் பூனை போதையில் தெரியவில்லை நேற்றிரவு பெய்த […]
ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். அம்மா….இங்க பாரேன்..யாரோ ஒரு விஜய் ரசிகன் தன் கையை பிளேடால கீறி இரத்தத்தால விஜய் கட் அவுட்டுக்கு அபிஷேகம் பண்றான் , இன்னொரு ரசிகன் பாலால அபிஷேகம் பண்றான்….அதோட இல்லாம ஒரு ரசிகன் தன்னோட உள்ளங்கையில கற்பூரத்தை எரியவிட்டு ஆரத்தி வேற காட்டினான். எப்படி இருந்தது தெரியுமா? எல்லாம் என் மொபைல் ல போட்டோ எடுத்திருக்கேன்..இதோ… என்று காண்பித்த அரவிந்த், தீபாவளி ரிலீஸ்…”இளைய தளபதி விஜய் ” படம் ” துப்பாக்கி ” […]
கலைச்செல்வி காலையில் எழுந்துக்கொள்ளும் போதே ரஞ்சனிக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் அம்மாவின் இடைவிடாத குரல் அவளை படுக்கையிலிருந்து எழ வைத்து விடுகிறது. “ரஞ்சு.. கீசர் போட்டு வச்சாச்சு.. எழுந்திரிச்சு போய் குளி..” சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. வேகவேகமாக எழுந்து, நேரே குளியலறைக்குச் சென்றாள் ரஞ்சினி. அவள் யூனிஃபார்முடன் குளியலறையிலிருந்து வெளியே வருவதற்குள் அம்மா லஞ்ச் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். தட்டில் நூடுல்ஸ்ஸ{ம், ஸ்பூனும் ரெடியாக இருந்தது. பக்கத்தில் ஹார்லிக்ஸ் ஒரு டம்ளரில் காத்திருந்தது. இரண்டு வாய் […]