வாழ்க்கைத்தரம்

This entry is part 9 of 29 in the series 3 நவம்பர் 2013

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்நாள் கனவு. அதனால் ராகவனும் கார் வாங்க ஆசைப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலைவாசி விஷம் போல் ஏறி மாதாந்தர குடும்பச் செலவு பட்ஜெட்டைத் தாண்டினாலும், பெட்ரோல் விலை எக்கச்சக்கமாக ஏறினாலும் கார் வாங்கும் ஆசை மட்டும் அவருக்கு குறையவே இல்லை. “ஏன்னா… பக்கத்தாத்து மாமி கார் வாங்கிட்டா… வாரம் ஒருமுறை குடும்பத்தோடு வெளியே கிளம்பிடறா… ஹூம்… என் […]

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம்

This entry is part 8 of 29 in the series 3 நவம்பர் 2013

இரண்டாம் சனிக்கிழமையான 09-11-2013 அன்று நடைபெற உள்ளது. முதல் சனிக்கிழமையாகிய 2-11-2013 அன்று தீபாவளித்திருநாள் என்பதால் இம்மாதம் மட்டும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறுகின்றது.   நிகழ்நிரல் 6.00 மணி – இறைவணக்கம் 6.03 மணி –வரவேற்புரை 6.10 மணி- கம்பன் ஓர் இலக்கணப் பார்வை திருச்சிராப்பள்ளி தூயவளானர் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் இ. சூசை 7.25 மணி- சுவைஞர்கள் கலந்துரையாடல் 7.55- நன்றியுரை 8.00 மணி- சிற்றுண்டி கம்பன் புகழ் பருகிக் கன்னத்தமிழ் வளர்க்க அன்பர்கள் […]

நீங்காத நினைவுகள் – 21

This entry is part 7 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜோதிர்லதா கிரிஜா            தீபாவளியும் அதுவுமாய் விவாதத்தைக் கிளப்பும் கட்டுரையை எழுதி வம்பை விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, நகைச்சுவை நிறைந்ததாய் ஒன்றை எழுதலாமே என்று தோன்றியது.  சிரிக்க மட்டுமின்றி, அவற்றில் சிலவேனும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை என்று தோன்றுகிறது. அட, வாய்விட்டுச் சிரிக்க வைக்காவிட்டாலும்,  சில ஓர் இளநகையையேனும் தோற்றுவிக்கும் என்னும் நம்பிக்கை உண்டு. கீழ் வரும் ஜோக்குகளையோ, நகைச்சுவையான விஷயங்களையோ அன்பர்களில் சிலர் ஏற்கெனவே படித்திருந்திருக்கலாம். இருப்பினும், சிரிக்க வைப்பவையாதலால் மறுபடியும் படிப்பது வீணன்று. […]

ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

This entry is part 6 of 29 in the series 3 நவம்பர் 2013

ஜே.பிரோஸ்கான் மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்து போன மழை. அந்தப் பொழுது மழை மேகங்களால் இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக இரவாய் படர்தலாகுது. மழையின் அறிவிப்பை தவளைகள் பிரகடனம் செய்ய மழையைத் தேடி ஈசல் மற்றும் பட்சிகளின் பயணம் ஆரம்பமாகுது. பின் பயிர்கள் சிரிக்க ஆயத்தமாக குழந்தைகளும் துள்ளிக் குதிக்க ஆவலாகுது. எல்லா எதிர்பார்ப்புக்களையும் சரி செய்த படி.. பெய்யத் தொடங்கியது மழைஇ ஆராவாரமாய் மேலெழும்பும் குழந்தைகளின் சிரிப்போடு.   சாயங்காலம் – தோப்பு – தென்றல். மொழியற்றுப் […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

This entry is part 5 of 29 in the series 3 நவம்பர் 2013

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !        (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         அப்படித்தான் இருக்கும் என்று நினைப்பேன் எனக்கு விருப்ப மானவர் எண்ணிக்கை போது மானது ! மாலையில் மற்ற நண்பர்கள் மத்தியில் நின்று நான் உரையாடுவது போது மானது ! என்னைச் சுற்றிலும் வந்து எழில் மேனியர் புன்னகைத்து ஆர்வ மோடி ருப்பது போது மானது ! அவரோடு உலவிக் […]

அப்பா

This entry is part 4 of 29 in the series 3 நவம்பர் 2013

                                                          டாக்டர் ஜி. ஜான்சன்           அப்போது எனக்கு வயது ஆறு. எங்கள் கிராமத்துப் பள்ளியில் மணி அடித்ததும் நாங்கள் பைகளையும் சிலேட்டுகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினோம். வீடு திரும்ப அவ்வளவு ஆர்வம் எங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு. நான் எப்போதும் கலியபெருமாளுடன்தான் வீடு செல்வேன். அவனை கிராமத்தில் எல்லாருமே ” மண்ணாங்கட்டி ” என்றுதான் கூப்பிடுவார்கள். அப்போது அதன் காரணம் எனக்குத் தெரியாது. நானும் அவனை அப்படிதான் அழைப்பேன். அவனும் அது பற்றி கவலைப் படுவதில்லை. […]

இளைஞன்

This entry is part 3 of 29 in the series 3 நவம்பர் 2013

  யூசுப் ராவுத்தர ரஜித் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுடன் இதோ நம் இளைஞன். 6 பாடங்களில் 17 புள்ளிகள். 5 பாடங்களில் 13 புள்ளிகள். தொடக்கக் கல்லூரியா?  தடையில்லை. பல்துறைக் கல்வியா? அதற்கும் தடையில்லை. இந்தப் புள்ளிகளை வைத்துக் கோலம் போடவேண்டும். எந்தக் கோலத்தை எப்படிப் போடப் போகிறான். அதற்கு முன் அந்த இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவன் பெயர் சசிகுமார். சுருக்கமாக சசி. ‘ரேப்’ பாடல்களில் அதிக ஈடுபாடு. ஆங்கிலத்தில் காதல் கவிதை […]

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.

This entry is part 2 of 29 in the series 3 நவம்பர் 2013

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின்  வட துருவ முழுவட்ட வடிவத்தை  முதன்முறைப் படம் எடுத்தது.   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் தோரணங்கள் வடிவம் காணும் ! முன்பு சனிக் கோளின் வட துருவத்தில் தனித்துச் சுழல்கின்ற ஆறுகரச் சட்ட முகில் வடிவம் கண்டது ! அது வாயு முகில் கோலமா ? பூதக்கோள் வியாழன் முகத்தில் செந்திலகம் போலொரு விந்தை […]

மொழிவது சுகம் நவம்பர் 1 2013 – பிரான்ஸ், மொழிபெயர்ப்பு

This entry is part 1 of 29 in the series 3 நவம்பர் 2013

1. பிரான்சில் என்ன நடக்கிறது பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி. வருவாயை அதிகரிக்கவும், வீண் செலவுகளைக் குறைக்கவும் கணக்கியல் துறையும், ஐரோப்பிய நிதி நிர்வாகத் துறையும், கண்டிப்பான சில வழிமுறைகளைப் பிரெஞ்சு அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கமும் நிதி வருவாயைப் பெருக்கிக்கொள்ள சிக்கன நடவடிக்கைகள் மட்டுமே போதாதென்ற நிலையில் நாள்தோறும் புதிய புதிய வரிகளை விதித்துவருகிறார்கள். ஏற்கனவே அன்றாட உபயோகத்துகான மின் சக்தியும், எரிவாயுவும் கடுமையான உயர்வை சந்தித்து உள்ளன. […]