சின்னக்கருப்பன் பிராந்திய வாதிகளின் அரசியல் பெரும்பாலும் போலி இனவாதத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக அரசோச்சிக்கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்பு போலி இனவாதம் நமக்கு எல்லாம் பழக்கப்பட்ட ஒன்று. இதன் உப விளைவாக கர்னாடகத்தில் வாட்டாள் நாகராஜின் கன்னட போலி இனவாதம் மொழிவாதமும் நாம் அறிந்ததே. இதில் வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், கன்னடர்கள் மத்தியில் பரவிக்கொண்டிருந்த தமிழர்கள் எதிர்ப்பு போலி இனவாதத்தை அங்கிருக்கும் பெரும் கட்சிகள் கூட கண்டிக்காமல் இருந்ததுதான். மகாராஷ்டிரத்தில், பாஜகவால் ஓரம் […]
191. சீனியர் ஹவுஸ் சர்ஜன் நிதானமாக செயல்படலாம் என்ற முடிவுடன் வேலூரில் இருந்த எஸ்தர் என்னும் உறவினர் வீட்டில் தங்கினேன்.அவர் அண்ணிக்கு நெருங்கிய உறவினர். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவருடைய கணவர் வில்சன் வேலூரில் பணி புரிந்தார். அவர்களுக்கு மூன்று பெண்களும் ஒரு மகனும் இருந்தனர்.சிறிய வீடுதான். அதில் ஒரு அறையில் நான் தங்கினேன்.நான் கல்லூரியில் படித்தபோது இங்கே அவ்வப்போது வருவதுண்டு. அன்று காலையிலேயே மருத்துவமனை சென்றேன். இயக்குனர் டாக்டர் எல்.பி.எம். ஜோசப்.. அவரிடம்தான் […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) எது உன் உயரம்? குட்டையாய் இருப்பதாய் மற்றவர்களை மட்டம்தட்டிக்கொண்டேயிருப்பதா? எது உன் உயரம்? அன்றொருநாள் அன்பின் மிகுதியால் கட்டிப்பிடித்து முத்தமிட்டவளை ஆசைதீரத் தொட்டுத்தீண்டிவிட்ட பின் தட்டுக்கெட்டவள் என்று நட்பினரிடமெல்லாம் சொல்லித் திரிவதா? எது உன் உயரம்? விட்டுவிடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியின் சிறகு முறித்து சிறுகூண்டிலடைத்துவிட்டு தட்டுச்சோறு தந்து அதன் ரட்சகன் என்று மார்தட்டிக்கொள்வதா? எது உன் உயரம்? மொட்டைத்தலையைப் பார்த்து எள்ளிநகையாடிவிட்டு உன் வழுக்கை அழுக்கை மட்டும் எண்ணிப்பார்க்க மறுப்பதா? […]
A Russian Proton-M rocket carrying the European-Russian ExoMars 2016 spacecraft blasts off from the launch pad at Baikonur cosmodrome [Prototype Testing] சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் செல்ல ஈசாவின் திட்டம் 2020 ஆண்டில் செவ்வாய்க் கோள் செல்லும் ஐரோப்பியத் திட்டம் 2020 ஜூலை 24 ஆம் தேதி ஈரோப்பிய தளவுளவியைச் சுமந்து கொண்டு ரஷ்ய ராக்கெட் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ மெல்ல நீயென் அருகே சென்றால் புல்லரிக்கும் எனக்கு ! நீ பெருமூச்சு விட்டால், உட்புறம் காய்ந்து போகுது ! பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப் பட படக்குது ! நாணப் படுவது ஏன் நான், நீ அருகில் காணப் படும் போது ? காரணம் அதற்குக் காதலே ! நானிப்படி மாறிப் போனது ஏனோ ? காதலால் தான் ! கடினமாய் உள்ள தெனக்கு காதலிப்ப துன்னை […]
கவி வெற்றிச்செல்வி சண்முகம் [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து] கவிதைகள் எழுதுவதும், அவற்றை நூலாக்கிப் பார்த்துப் பரவசப்படுவதும் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். “வனம் உலாவும் வானம்பாடி” எனும் தலைப்பில் தம் கவிதைகளை நூலாகித் தந்திருப்பவர் கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்விற்குப் பிறகும் கவிதைகளைத் தொய்வின்றி எழுதி வருபவர். இத்தொகுப்பு இவரின் முதல் தொகுப்பாகும். தலைப்பிற்கு ஏற்ப வனம் […]
நிலாரவி. யாருக்கும் புரியாத கவிதையை எழுதுவதே கவிதை என்றானபின் எனது கவிதையை எழுதத்துவங்கினேன் இது புரியும் பட்சத்தில் நான் தோற்றவனாகிறேன் நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள் புரியாமல் போவதில் வெற்றி எனக்குத்தான் எப்பொழுதும் வாசகனை ஜெயிப்பது தானே எழுதுபவனின் வெற்றி எனினும் எழுதியவனின் பொருளும் வாசகனின் புரிதலும் எதிர்கொள்ளும் திசையொன்றில் ஜெயிப்பவர் யாரோ? ranusri70@yahoo.in
சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு —————————————————————————————— சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு ” மலேசியப்பின்னணி நாவலை பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கக்கட்டிடத்தில்- கோலாலம்பூர் ஜலான் ஈப்போவில் – நடைபெற்ற விழாவொன்றில் வெளியிட்டார். எழுத்தாளர்கள் அர்ஜினன், ஈப்போ முல்லைச் செல்வன் போன்றோர் பெற்றுக்கொண்டனர். நாவலை வெளியிட்டு பெ.இராஜேந்திரன், தலைவர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ., கோலாலம்பூர் அவர்கள் பேசினார் […]
லதா ராமகிருஷ்ணன் வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் மூலம் அவருடைய எழுத்தாக்கங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன; வாசகர்களிடையே நல்ல […]