தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதுண்மையே. எனக்கு சைகிள்விட கற்றுத் தந்தது எட்வர்ட் திரிஃபீல்ட் தான். அப்படித்தான் நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். பின்சக்கரத்தோடு குட்டிசக்கரம் இணைத்த ‘ஆபத்தற்ற’ சைகிள் கண்டுபிடித்து எத்தனை காலமாச்சோ அறியேன். ஆனால் இந்த கென்ட் மண்ணில் அது ரொம்ப புது ஜாமான். இதை வெச்சிக்கிட்டு ஓட்டிப்போகையில், என்னைக் கடந்து கனமான டயருடன் யாராவது சைகிளில் விர்ரென்று போகையில் ஆவென்று அது கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன். நடுவயசுக்காரர்கள் இப்பவும் கிண்டலாகப் பேசுகிறார்கள். […]
சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும் ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு […]
நீச்சல்காரன் எரிகிற கொள்ளியில் சுள்ளிகள் எடுத்து எரிக்க முனைந்தால் பொசுங்கியது ஆசை இது தான் வெற்றியென்று முடித்துக் கொள்ள முடியாமல் வெற்றிகரமாக தோல்வி கொள்கிறேன் கொதிக்கும் நீரில் குதித்தாடும் குமிழ்கள் வாய்பிளந்து மரணத்தை குடிக்கும் கற்பூரத்தை சர்க்கரை என நிருபிக்க சொன்ன பொய்கள்தான் அதை காற்றிலே கரைத்துவிட்டது புதிராக இருந்தாலும் ஒரு திசை போதும் மற்றவற்றை காட்டிக்கொடுக்க திறந்திருந்த ஒன்றை திறந்து வைத்தவர் யாரென்கிறது ஆற்றுப் பாலத்து கல்வெட்டு ஊரெல்லாம் தூங்கிக் கொண்டிருக்க மனித இனத்தையே உலுப்பியது […]
1.காலம் ஒரு கணந்தான்…! மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் உழை… தென்றலாய் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “அறிவுரை தேடிக் கேட்டுக் கொள்ளாதவன் மூடன் ! அவனது மூடத்தனம் உண்மை அறிவதில் அவனைக் குருடாக்குகிறது. மேலும் தீங்குகள் இழைக்க முரடனாய் ஆவான் ! அது சக மக்களுக்கு அபாயம் விளைவிக்கும்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? காதலற்ற வாழ்வு மலரும் கனியும் இல்லா மரம் போல் ! அழகத்துவம் இல்லாக் காதல் வாசனை யற்ற […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குருநாதரின் ஞான ஒளி பொழியும் போது கூட இருந்த குறை அறிவாளி பேசி மகிழ்ந்து பெருமிதம் அடைவான் ! பிறகு விரைவில் தாறுமாறாய் ஒழுக்க மற்று உரக்க அலறுவான் ! பிரச்சனை இதுதான் தன்மான மற்ற ஒருவனுக்கு விரைவில் வருவ திப்படி மதுவால் ! குடிகாரனுக்குப் பரிவு உள்ளம் இருக்குமே ஆயின் அதனைக் காட்டுவான் குடித்த பிறகு ! ஒளிந்துள்ள சினமும் அகந்தை, […]
ஆப்பிள் பெருநகர். பெரிய ஆப்பிள் என்று அழைக்கப் படும் நியு யார்க். ஒரிஜினல் தூங்கா நகரம். காலை இரவு என்று வேறுபாடில்லாமல் விளக்குகள் ஒளிர, மக்கள் நகரும் நகரம். சப்வே என்று அழைக்கப் படும் பாதாள ரெயில்கள். பாதாள என்பது வெறும் பெயரளவில் தான். தனக்கென்றே அமைந்த பாலங்களில் மேற்பரப்பிலும் நகரும் மின்வண்டிகள். இது ஒரு தனி உலகம். இரண்டே கால் டாலரில் நியு யார்க் நகரமெங்கும் சென்று வரலாம். பெருநகரங்களின் வெளியே இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் கார் […]
குமரி எஸ். நீலகண்டன் மரண தண்டனையை எதிர்த்தும் மனித உரிமைகளுக்காகவும் உண்ணாவிரதமிருந்தான் அவன். எந்த உயிரைக் கொல்வதற்கும் மனிதனுக்கு உரிமை இல்லையென்றே முழங்கினான். அவனைக் கடித்துக் கொண்டே இருந்த கொசுக்களை அடித்து அடித்து இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது அவனுக்கு. குமரி எஸ். நீலகண்டன்
ஷி றி ஸேதுராஜன் [ ஊமையர் கண்ட கனவுகள்] படைப்புக்கன்றி படைப்பாளருக்கே விமர்சனம் எழுதுவது மற்றெங்கேயும் எப்படியோ, நான் பார்த்த வட்டங்களில் சகஜமாகிவிட்டது. தீவிர பிரதட்சவாதத்தை (க்ஷீமீணீறீவீனீ) விட பின்நவீனத்துவமே இன்றைய சமுகத்தின் அவலங்களின் வலிவையும் அந்த அவலங்களின் எதிராக பலர் இலக்கியம் என்ற பெயரில் கொடுக்கும் குரல்களின் மலிவையும் எடுத்துரைக்கவல்லது. ஏனெனில் எல்லோரும் ஒரே மொழி பேசக்கூடிய நிலைக்கு உலகம் வளர்ந்து கொண்டிருந்தாலும், நாம் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக்கூடிய புரிந்துணர்வோ குறைந்துகொண்டே வருகிறது. […]
ஆசை இல்லா உலகம் புத்தனின் ஆசை கடிவாளமில்லா கடிவாளம் போகஸ் இல்லா போகஸ் எனது ஆசை. பாசத்திலிருந்து ஆபாசம் ஆபாசத்திலிருந்து பாசம் காதலர்களின் ஆசை. உலகம் வேண்டும் அலெக்சாண்டர் ஆசை வியாபாரம் வேண்டும் ஆப்பிள் ஸ்டீவ் ஆசை. எல்லாம் அடைந்த இவர்கள் வாழவில்லை! எல்லாம் இழந்த புத்தன் இன்றும் வாழ்கிறான். ஆடை துறந்தால் இன்பம் ஆசை துறந்தால் பேரின்பம் Sridhar. China