தமிழ்ச்செல்வன் அண்டைய நாடான மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் சுமார் 40,000 ரோஹிங்யா முஸ்லிம் மக்களைத் திரும்பவும் மியான்மருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசின் இந்த முடிவிற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமை அமைப்புகளும், இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பில் உள்ள நாடுகளும் (OIC Countries) மற்றும் பல பட்டாலும் திருந்தாத நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவிலேயே கூட, இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் […]
ந.சுரேஷ்,ஈரோடு உழைக்கும் மக்களின் உள்ளங்கை ரேகை தேய சலவைக் கற்களின் சாம்ராஜ்யம்; கலவியல் உன்மத்தம் தான் காதலின் சின்னமெனில் அதிசயங்களின் கூரைக்குள்ளே ஆயிரமாயிரம் சுரண்டலின் பலிபீடங்கள்!
தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே [கழிசூழ் மருங்கு=kஅழிகள் சூழ்ந்துள்ல கடற்கடைப் பக்கம்; நாணிரை கொளீஇ=தூண்டில் நாணில் இரை வைத்து; முயலல்=செய்தல்] ஆவன் அடிக்கடி அவளைச் சந்திக்க வந்து போறான்; ஆனா கல்யாணம் கட்டற நெனப்பே இல்ல; ஊருக்குத் தெரிஞ்சிட்டா அவனும் வர முடியாது; அவனுக்கும் ஆபத்து; தனக்கும் கெட்ட பேருன்னு நெனக்கறா […]
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இழக்கப் போறாய் நீ அவளை ! இழக்கப் போறாய் அவளை ! இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில் தன்மனதை மாற்றிக் கொள்வாள்; நானவளை அழைத்துச் செல்வேன் இன்றிரவு ! மேலும் நானவளைக் கனிவுடன் நடத்துவேன்; நீ அவளை இழக்கப் போறாய் ! நீ அவளை இழக்கப் போறாய் ! கண்ணியமாய் நீ அவளை நடத்தா விடில், திண்ணமாய் காணப் போறாய் அவள் இழந்து போவதை ! ஏனெனில் […]
டாக்டர் ஜி. ஜான்சன் 31. 8. 1973. என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் என் திருமணம் நடந்தது. அது ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகவே நடந்தேறியது. நான் பிறந்து சிறு வயதில் வளர்ந்த தெம்மூர் கிராமத்தில் அற்புதநாதர் ஆலயத்தில் திருமணம் நடந்தது. கிராமச் சூழலுக்கேற்ப எங்கள் வீட்டுமுன் போடப்பட்டிருந்த பந்தலில்தான் வரவேற்பும் நடந்தது. ஒரு டாக்டருக்கும் மலேசிய மணப்பெண்ணுக்கும் நடக்கும் ஒரு திருமணத்துக்கான ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையான முறையிலேயே எங்களில் திருமணம் நடந்தேறியது. […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே சுனாமி எழும் ! பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! பருவம் மாறும் ! நாளின் நீட்சி குன்றும் ! கனல் திரவம் அழுத்தமாகிக் குப்பெனப் பொங்கும் எரிமலைகள் […]
லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் புறமொதுக்க முடியாத ஒன்று அவருடைய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் தமிழ் இலக்கிய நூல்களில், குறிப்பாக இலக்கியத்திற்கான மாற்றிதழ்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழின் குறிப்பிடத்தக்க பதிப்பகங்கள் மூலம் அவருடைய எழுத்தாக்கங்கள் நூல்வடிவம் பெற்றுள்ளன; வாசகர்களிடையே […]
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” என்கிறாய்; ”நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்ல” என்கிறாய். “உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை சிறகுகள்” என்கிறாய்; உன் மனத்துணிவு ஒரு கூடையெனில் எனதோ கடற்கரைமணலளவு” என்கிறாய்……. உன் என்னிடையேயான தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்: என்னை நீ வெல்லவே யியலாது _ ஏனெனில் […]
ராமலக்ஷ்மி கவிதைகளைத் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் மற்றவர் மனங்களைத் திறக்கும் சக்தி வாய்ந்தவையாக, எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் மாற்றங்களைக் கொண்டு வரக் கூடிய சாத்தியங்களைச் சத்தமின்றித் தம்முள் கொண்டவையாக ஒளிருகின்றன. உரக்கச் சொல்லவில்லை எதையும். ஆனால் உணரச் செய்கின்றன அழுத்தமாக. நூலிம் 91 கவிதைகளையும் நாம் கடந்து வரும்போது இது புரிய வரும். இயற்கையின் உன்னந்தங்கள், சமூகத்தின் அவலங்கள், […]
அருணா சுப்ரமணியன் 1 .படையல்… இலையில் படைத்த பொங்கல் அப்படியே இருக்க.. வழியில் சிந்திய பருக்கைகளை உண்டு மகிழ்ந்தன எறும்பு தெய்வங்கள்… 2. காணிக்கை தினமொரு பட்டுச்சேலை காணிக்கை… அம்மனோ கோயில் வாசலில் கந்தலில் … 3. சேரும் சிதறல்… சிதறடித்த துண்டுகளை ஒவ்வொரு முறையும் பொறுக்கி சேர்க்கிறேன்… சிறிதும் யோசிக்காமல் தட்டி விடுகிறாய்… சிதறுவதும் சேர்வதுமாய் நான்…