ஜோதிர்லதா கிரிஜா நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் வீட்டாருடன் தங்குவதால் ரமணியால் தனக்குத் தொல்லை ஏற்படலாம் என்னும் அச்சத்தில் தயாவும் அவ்விடுதியில் இருக்க முடிவு செய்தாள். சங்கரனின் தங்கை பவானியின் திருமணமும் ஒரு வழியாக எல்லாருடைய உதவியுடனும் நடந்தேறியது. ஒரு நாள் ரமா தற்செயலாகப் பேருந்து நிறுத்தத்தில் சங்கரனின் அப்பா தரணிபதியைப் பார்த்தாள். அங்கே வேறு யாரும் இல்லாத துணிச்சலில் அவரோடு சங்கரன் […]
சத்யானந்தன் மே 7, 2000 இதழ்: கட்டுரை : இலங்கைப் போர் சின்னக்கருப்பன். பங்களாதேஷ் விஷயம் போல ஏன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் சி.க. இந்திய அரசு இதில் தனி ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் அது காஷ்மீரில் தனி நாடு கோருவோருக்கு வலு சேர்த்துவிடும் என்று கருதுகிறது. காஷ்மீரில் நடப்பது நில ஆக்கிரமிப்பு. பங்களாதேஷில் நடந்ததோ வேறு. உருது பேசும் பாகிஸ்தான் உருது பேசும் பீகாரிகளைத் துணைக் கொண்டு வங்க […]
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய கண்கள் ரெண்டும் சாகுதே ! ஏன் தானோ…? சுகமான பேச்சில் சுகராகம் பாடி இதமாக வருடிச் சென்றவனே இதழோரம் இன்று வெறுப்பமிலம் உமிழ்ந்து அணு அணுவாகக் கொன்று நீ செல்வது ஏன் ? தொடாமல் அணைத்து, தொட்டுவிடத் தவித்து, கட்டில் சுகம் விடுத்து, கண்டதையும் ரசித்து, கருத்துகள் பகிர்ந்து, எழுத்துகள் உதிர்ந்து, இரவுகள் கடந்து, விடியலும் தொடர்ந்து, சுகித்திட்ட சுகங்களும் போனது […]
தாகூரின் கீதப் பாமாலை – 86 உன்னதத் தருணம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வாழ்வின் உன்னதத் தருணத்தை நழுவ விடாதே ! கர்வம் பெண்ணே ! தருணத்தைத் தவற விடாதே ! காலம் வீணாய்ப் போகுது ! பந்தய விளை யாட்டுகள் யாவும் முடிவடைந்து போகும் ! அமுதம் விற்கும் வர்த்தகச் சந்தையும் நிறுத்தப் போகுது வாணிபத்தை, கர்வப் பெண்ணே ! ஆத்மாவிற்கு இணையவன் வருகிறான் இரகசியமாய் உன்னருகில் நிற்பதற்கு ! பின்னர் விட்டு விலகிச் செல்வான் […]
புகழ் பெற்ற ஏழைகள் (முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 29.இந்தியாவை அடிமையாக்கிய ஏழை என்னங்க பேசாம உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு வர்ரீங்க…அட பதில் சொல்லுங்க…என்னது…நீங்க பாட்டுக்கு வரும்போது யாரோ சிலபேரு வழியில ஒங்கள மறிச்சு பணத்தைத் தர்ரீங்களா…இல்லையான்னு கேட்டாங்களா….?அட அப்பறம் நீங்க என்ன செஞ்சீங்க…என்னது நீங்களும் ஒங்ககூட வந்த நண்பரும் அவங்கள அடிச்சு விரட்டிட்டு வந்தீங்களா…காலம் […]
ஆஸ்திரேலிய மண்ணைத் தொட்ட பின் தான் வாழ்க்கை என்ன என்பதை உணர முடிந்தது. விமான நிலையத்தில் பையை வைத்துக் கொண்டு பெற்றோரைத் தேடி அலைந்தான். அவர்கள் சொன்னஎந்தக் குறியீடுகளும் அங்கு இருக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. சீன மொழி பேசுவோர் ஒருவரும் இருக்கவில்லை. சின்ன சீட்டில் வீட்டு முகவரியை வைத்துக் கொண்டு அலைந்தான். அங்கிருக்கும் மனிதர்களிடம் கேட்கலாம் என்றால், நீண்ட முடியும், ஆசிய உருவமும் சாதாரண உடையும் அவர்களை ஓட வைத்தன. அங்கே தனித்துவிடப் பட்டான். அதுவும் அன்னிய நிலத்தில். இறுதியில் ஒரு விமான பணிப்பெண், சீன மொழி தெரிந்திருந்ததால், அவனிடம் வந்து பேசினாள். “எங்கே போக வேண்டும்?” “நான் இந்த முகவரிக்குப் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சீட்டைக் கொடுத்தான். அவள் அதை வாங்கிப் பார்த்தாள். “இந்த இடம் சிட்னி. இந்த முகவரி கான்பராவில் இருக்கிறது” என்று சொன்னதும் அதிர்ந்து போனான். தவறான இடத்திற்கு வந்து விட்டோமோ .. இனி என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, “நீங்கள் இன்னொரு விமானத்தில் அங்கு போக வேண்டும்” என்று கூறினாள். அதைக் கேட்டதும், “அது எங்கே இருக்கும்?” என்று உடனே கேட்டான். விமானப் பணிப்பெண் அவன் செல்ல வேண்டிய விமானம் நிற்கும் இடத்தைக் காட்டி விட்டுச் சென்றாள். பயந்து கொண்டே சென்றான். இன்னும் என்னவெல்லாம் பட வேண்டுமோ? ஆங்கிலம் தெரியாமல் திண்டாட வேண்டியிருக்கிறதே என்று வருந்தினான். கான்பரா சென்று சேர்ந்ததும், அங்கும் தன் பெற்றோரைத் தேடினான். அரைமணி நேரம் தேடினான். அவர்களைக் காணவில்லை. தான் வந்த இடம் சரிதானா என்ற ஐயம் ஏற்பட்டது. இனி தன் கதிஅதோ கதி தான் என்று எண்ணி, மிகச் சோர்வுடன், வெறுத்துப் போய் ஒரு நாற்காலியில் தன் பையை தொப்பென்று போட்டு விட்டு, முகத்தை மூடிக் கொண்டு என்ன செய்வதென்று யோசிக்கத்தொடங்கினான். ஹாங்காங் தான் மோசம் என்றால், இங்கு அதை விடவும் மோசமல்லவா? யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்? பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பார்கள்? அப்போது யாரோ தோளைத் தொட்டது போல் தோன்றியது. நிமிர்ந்து பார்த்தான். அதீத மகிழ்ச்சி. நின்றிருந்தது அவனது தாய். “அம்மா..” அப்படியே மகிழ்ச்சியில் கத்தினான். தாய்க்குப் பின்னால் அவனது தந்தை நின்றிருந்தார். சான் தன் தந்தையைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான். அவர் சற்று தளர்ந்து காணப்பட்டார். தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது. “அம்மா.. எங்கே போனீங்க?” என்று கோபத்துடன் கேட்டான். “நாங்கள் இங்கே தான் இருந்தோம்” “அப்போ ஏன் என்னிடம் வரல்லை..” “நீ ஆளே மாறிட்டே போ.. உன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் நாங்களும் உன்னை தேடிக் கொண்டிருந்தோம். கடைசியில் நீ இங்கே வந்து உட்கார்ந்ததும் தான் உன்னைத் தெரிந்துகொண்டு இங்கே வந்தோம்..” என்றார் தாய். பத்து வருடங்கள் அவனைப் பெரிதும் மாற்றியிருந்தது என்பது உண்மை. குண்டாக இருந்தது மாறி ஒல்லியாகி விட்டருந்தான். உயரமும் கூடியிருந்தது. ஆள் அடையாளம் தெரியாமல்உருமாறியிருந்தது உண்மை தான். தந்தைக்கு அவன் அங்கு வந்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏனென்றால் பத்தொன்பது வயதில் அங்கு குடியுரிமைப் பெறுவது மிகவும் எளிது. ஹாங்காங்கை 1997லில் சீனாவிற்கு கொடுத்த பின்னர் என்ன நடக்குமோ என்பது தெரிந்திராத நிலையில் ஹாங்காங்வாசிகள் இன்னொரு நாட்டின் குடியுரிமையை வாங்கி வைத்துக் கொள்வதைநல்லது என்று எண்ணியிருந்த காலம் அது. அதையே சானின் தந்தையும் எண்ணினார். கான்பராவில் தந்தை பணி செய்து கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் அலுவலக குடியிருப்புப் பகுதியில் சான், தன் பெற்றோருடன் தங்கினான். சான் அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்து குடியுரிமையைப் பெற்றான். அதைப் பெற்ற பின், அவனுக்கு தான் மேலும் அன்னியமாகிப் போனதைப் போல் தோன்றியது. பிறந்து வளர்ந்த ஹாங்காங்கிலேயே தன்னால் சாதிக்க முடியாத போது, இந்த அன்னிய மண்ணிலா சாதிக்கப் போகிறோம் என்ற வெறுப்பு தொற்றிக் கொண்டது. […]
: சுப்ரபாரதிமணியன் பாவடிக்கு இடம் தேடுகிற அவஸ்தை மனசிற்கு சிரமம் தந்தது. பாவடிக்கு இடம் பத்தாது போலிருந்தது. பள்ளிக்கூடத்திற்கு சின்ன விளையாட்டு மைதானம் பின்பக்கத்தில் கொஞ்சம் காலி இடம் இருந்தது. இரண்டாம் முளைக் கடப்பாரையை அந்த மைதானத்தில்தான் அடிக்க வேண்டும் போலிருந்தது. அப்போதுதான் இடம் பத்தும், அய்ம்பது கெஜம் என்றால் சற்று சிரமம்தான். பள்ளிக்கூடம் ஆரம்பப் பள்ளிதான். அதிகம் குழந்தைகள் படிப்பதில்லை. தெரிந்த ஒரு வாத்தியாரும் இருந்தார். அவரிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று ரங்கசாமி நினைத்தார். நரகலாகஇருந்தது. […]
அ.சத்பதி முனைவர் பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் மலையாள மொழிக்கு உருவாக்கப்பட்ட முதல் இலக்கண நூல் லீலாதிலகம் ஆகும். இந்நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. லீலாதிலகம் மலையாள மொழியில் தனிமொழியின் பண்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய மலையாள மொழியின் முதல் இலக்கண நூலாகிய லீலாதிலகம் வேற்றுமையைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் மலையாள வேற்றுமை உருபுகளின் வருகை, அவற்றின் பொருள்பாகுபாடுகள், அமைப்பு முறைகள் ஆகியவற்றைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். லீலாதிலகம் அறிமுகம் லீலாதிலகத்தைப் […]
பாவண்ணன் பெஞ்சமின் முசே முனகும் சத்தம் கேட்டது. ஆனால் கண்களைத் திறக்கவில்லை. கிடத்தப்பட்ட சிலைபோல படுத்திருந்தார். வைத்தியர் வந்து மருந்து கொடுத்துவிட்டுச் சென்று மூன்றுமணி நேரத்துக்கும் மேல் கடந்துவிட்டது. விரைவாகவே எழுந்துவிடுவார் என்றும் பசிக்கு ஏதாவது கேட்டால் சூடான கஞ்சித் தண்ணீர் மட்டும் தந்தால் போதும் என்றும் வைத்தியர் சொல்லியிருந்தார். சில கணங்களுக்குப் பிறகு “வீர்ப்பா வீர்ப்பா” என அவருடைய குரல் மட்டும் எழுந்தது. தரையில் உட்கார்ந்து அவருடைய பாதங்களைத் தேய்த்து சூடு உண்டாக்கியபடி இருந்த […]
நான் ஏன் ஓர் அச்சகத்தின் உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் செய்துவிடத் துணிந்தேன். முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது. கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு என் அச்சகமே ராசி என்றாகிவிட்டது. எனது அச்சகம் வந்த பின்புதான் ஊரில் அதிகமாய்ச் சாவுகள் நேர்கிறதா அதிகமாய்ச் சாவுகள் நேர்வதால்தான் எனது அச்சகம் வளர்கிறதா…. முட்டையிலிருந்து கோழி கோழியிலிருந்து முட்டை…. சாவுகளில்தான் எத்தனை வகைகள்….! வயதாகிச் சாவு, குழந்தைச் சாவு, […]