புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

This entry is part 16 of 26 in the series 27 அக்டோபர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை “உ​ழைப்பதிலா இன்பம்? உ​ழைப்​பைப் ​பெறுவதிலா இன்பம்? எதி​லே உண்​டென்று ​சொல் ​தோழா” வாங்க…வாங்க… என்னங்க பாட்​டுப் பாடிக்கிட்டு அமர்க்களமா வர்ரீங்க…என்ன பதி​லக் கண்டுபிடிச்சிட்டீங்களா….? அட…ஆமா…உலகப் புகழ் ​பெற்ற தாய் அப்படிங்கற நாவல எழுதின ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தான் அவர். […]

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

This entry is part 15 of 26 in the series 27 அக்டோபர் 2013

சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில் காவியம் படைத்த பெண்டிர் மிக மிகச் சிலரே. பொதுவாகப் பெண்டிர் காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல மாட்டார், சொல்லக் கூடாது, சொன்னால் பலருக்குத் தாங்காது, மனம் உடைவார். பெரும்பான்மைப் பெண்டிர் விரும்பினாலும் சொல்லத் தயங்குவார். […]

வணக்கம் சென்னை

This entry is part 14 of 26 in the series 27 அக்டோபர் 2013

– சிறகு இரவிச்சந்திரன் எதிர்மறையான குணங்கள் கொண்ட இருவர், ஒரு அறையில் மாட்டிக் கொண்டதால் நிகழும் மோதல்களும், முடிவாக ஏற்படும் காதல் உணர்வுகளுமே கதை.. அஜய் தேனி பக்கத்து கிராமத்துப் பையன். அப்பா இல்லை.. அம்மா வளர்ப்பு. கல்லூரி படிப்பில் தங்கப் பதக்கம்.. வேலை கிடைத்து சென்னைக்கு வரும் அவனுக்கு அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு படுக்கை அறை வீட்டை ஏற்பாடு செய்து தரும் வீடு தரகர் நாராயணன், அதே குடியிருப்பை, லண்டன் வாழ் அஞ்சலிக்கும் வாடகைக்கு […]

அழித்தது யார் ?

This entry is part 13 of 26 in the series 27 அக்டோபர் 2013

24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி…..! நீ என்னடா சொல்ற…?” “ஜீவா அண்ணே……நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க…..! நீங்க மெத்த படிச்சவங்க……யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க…..நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா?” இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழரசு பால்ய நண்பன் மணியைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கின்றான். பிரளயம் வெடிக்கும் சூழல்.ஏற்கனவே ஒருமுறை இது போன்று அவர்கள் இருவரும் பேசியது அவன் நினைவுக்கு வருகிறது. ம்……இன்று சிறிது வேடிக்கைப் பார்க்கலாம்.களுக்கென்று […]

ப மதியழகன் சிறு கவிதைகள்

This entry is part 12 of 26 in the series 27 அக்டோபர் 2013

அலை   பாதத்தின் கீழே குழிபறிக்கும் அலைகளுக்குத் தெரியாது இவன் ஏற்கனவே இறந்தவனென்று.     சில்லென்று   உறக்கத்தில் இருக்கும் மரங்களை உசுப்பிவிட்டுப் போகிறது மழை.     கூடு   பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது பரண் மீது அணில் கட்டிய கூட்டினை கலைத்துவிட்டோம் அந்தியில் கூடு திரும்பிய அணில் எப்படித் தவித்திருக்கும் என்ற குற்றவுணர்வு மட்டும் அடுத்த பொங்கல் வரை நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.     அதுபோல   புளிய மரம் […]

ரகளபுரம்

This entry is part 11 of 26 in the series 27 அக்டோபர் 2013

– சிறகு இரவிச்சந்திரன் துப்பறியும் சாம்புவின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். தேவனின் ஆவி சும்மா விடாது கருணாஸை.. ரகளபுரம்.. ரணகளபுரம் ரசிகனுக்கு! ஓரளவு நகைச்சுவை எடுபடக்கூடிய கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குனர் மனோவைப் பாராட்ட வேண்டும். ஓரளவுக்கு காமெடிக்கு உத்திரவாதம் தரக்கூடிய கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா போன்றோரை சரியான பாத்திரத்தில் லாக் செய்ததும் இயக்குனரின் புத்திசாலித்தனம். காமெடி அம்மா பாத்திரத்தில் உமா பத்மநாபன் வித்தியாச நடிப்பைத் தந்திருக்கிறார். இயக்குனர் கோட்டை விட்டதெல்லாம் நாயகன் தேர்வில் தான். […]

தமிழுக்குக் கிடைத்துள்ள புதையல் – வசனம்

This entry is part 10 of 26 in the series 27 அக்டோபர் 2013

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் இயங்கிக்கொண்டிருந்த முகாமுக்குச் செல்லும்படி சொன்னது எங்கள் நிர்வாகம். அங்கே முகாம் பொறுப்பாளர் ஹோஸ்பெட்டிலிருந்து கொப்பள் என்னும் ஊர் வரைக்கும் முப்பத்திரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தொலைபேசிக் கேபிள் புதைக்கும் அணியில் சேர்ந்துகொள்ளும்படி சொன்னார். அபோது எங்கள் முகாமுக்கு அருகில் வாழ்ந்துவந்த பசவராஜ் என்பவர் எனக்கு நண்பரானார். வீட்டையொட்டி ஒரு சின்ன பகுதியில் தேநீர்க்கடை நடத்திவந்தார். தேனீ போலச் சுறுசுறுப்பானவர் அவர். எல்லா […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 9 of 26 in the series 27 அக்டோபர் 2013

  (Children of Adam) மின்னதிர்ச்சி தரும் மேனியைப் பாடுகிறேன் .. !    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         மின்னதிர்ச்சி கொடுக்கும் மேனி உடற்கட்டைப் பாடுகிறேன் ! நானிச்சை கொண்ட நாரீமணிப் பெண்டிர் படை என்னைச் சூழ்ந்து கொள்ளும் !   நானும் அப்பெண்டிரைச் சுற்றி வலம் வருவேன் ! மாதரை விட்டு நான் விலகிப் போக என்னை  விட மாட்டார், அவரோடு உடன்பட்டு […]

மது விலக்கு தேவையா ? சாத்தியமா?

This entry is part 8 of 26 in the series 27 அக்டோபர் 2013

மது என்ற விஷயத்தில் எதிர்கருத்தை கேட்க கூட மாட்டேன்.மது அருந்துவது தவறல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு வாழ வேண்டிய அவசியம் இல்லை.வேறு எங்காவது சென்று விடுங்கள் என்று மது எதிர்ப்பாளர்கள்/மது விலக்கு போராளிகள் எடுக்கும் நிலை வருந்த வேண்டிய ஒன்று.இதே போல தான் மத மாற்றம்,சாதி மறுப்பு திருமணம் போன்றவற்றை எதிர்க்கும்  மத/சாதி அடிப்படைவாதிகளும் பேசுகிறார்கள்           addiction எனபது வியாதி. மது இல்லை என்றால் மாத்திரை/பக்தி,சாதி வெறி(முக்கால்வாசி வெறி பிடித்தவர்கள்,காந்தியை கொலை செய்ய துணியும் […]

துளிப்பாக்கள்

This entry is part 7 of 26 in the series 27 அக்டோபர் 2013

தழும்பி நின்றது எதிர்காலம் குறித்த பயம் தேர்வறை. ——————————————————— புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள் பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு தேர்தல். —————————————————————- காளைகளுமில்லை கழனிப்பானையுமில்லை நவீன விவசாயம் ———————————————————————- யாரை தேடி இரவெல்லாம் பயணம்? நிலா —————————————– சிலைகளாய் நின்றவர்கள் உயிர்தெழுந்து வந்தார்கள் மாறுவேடபோட்டி. ————————————————————— மு.கோபி சரபோஜி