குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத […]
பொருளதிகாரம் நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே வாசிப்போரும் வழிமொழிவதற்கு… அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல – பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக் கண்டபடி துண்டுதுண்டாய்ப் பிய்த்துப்போடுவதற்கு; சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக பாவித்து அதில் கவிதையின் அர்த்தமெனச் சிலவற்றைச் சுருட்டியெறிவதற்கு. ஒற்றையர்த்தம் எனும் அதிகார மையத்தைச் சிதறடிப்பதான போர்வையில் குறிப்பிட்ட சில அர்த்தங்களைக் கவிதையின் மேல் கைபோன போக்கில் பொதியேற்றிச் சுமக்கவைக்கலாகாது வாசகப்பிரதியென்ற பெயரில். கவிதை விரித்துவைக்கும் […]
. கோ. மன்றவாணன் பாழடைந்த நூலகக் கட்டடங்களில் பள்ளிக்கூடக் கொட்டகைகளில், யாருடைய மாடியிலோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் என்பது காலங்காலமாய் இருந்துவந்த நிலைமை. அன்று இலக்கியம் பேசியவர்கள் ஏழைகளாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவில் செலவு குறைவாகவும் சீர்மை நிறைவாகவும் நிகழ்வுகளை நடத்தி இருக்கிறார்கள். தம் கைப்பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நன்றிக்குரியவர்கள்தாம். அவர்கள்தாமே இலக்கியத்தையும் தமிழையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு வழங்கியவர்கள். இப்போது இலக்கிய விழாக்கள் மிகுபொருள் செலவில் நடத்தப்படுகின்றன. இவற்றிலும் நூல் […]
கு. அழகர்சாமி இருள் ஏற்கனவே உறங்கிக் கொண்டிருக்கிறது என் அறையில். நிலவுக்கு நிலவன்றி ஆதரவின்றி அலைகிறது. எதிர் வீடு பூட்டியே கிடக்கிறது. ஆஸ்பத்திரியில் இருக்கிற எதிர்வீட்டுச் சிறுமி பிழைத்து வீடு திரும்பக் காத்திருக்கிறது அவளின் நிழல் வாசலில். வழி தெரியாமல் அல்லாடியிருந்த அணிலொன்று தப்பி ஓடுகிறது இருளின் வாசலைத் திறந்து. கட்டிப் போட்ட காவல்நாயின் குரைப்பில் கடிபடும் நிலவு. திரியும் தெருநாயின் ஊளையில் திகிலுறும் தாரகைகள். எம் மரம் காத்திருக்கும் இன்னும் அடையாமல் இருள் கிழித்துப் பறக்கும் […]
NASA, SPACE X, BOEING HUMAN SPACEFLIGHT சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://everydayastronaut.com/crew-dragon-vs-starliner/ https://youtu.be/P_LLNuLhEXc https://youtu.be/oV319JAmxCM +++++++++++++++++++ Orion Spaceship and Space Station ++++++++++++++++ Starliner Spaceship +++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில்நிலவில் தடம் வைத்தார்.பூமியைச் சுற்றி வரும்அகில நாட்டு விண்வெளி நிலையத்தில்சிலநேரம் தங்கிச்சுற்றுலாப் பயணம் செய்யநிற்கிறார் வரிசையில்புவி மனிதர் !நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் !கனவில்லை இது !மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி. […]
1.கருங்காணு.நாவல் அ ரங்கசாமி மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள். 1940களில் தொடங்கி சுமார் 20ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து […]
கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’ என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம் அவரோடு ஒட்டிக் கொண்டது. ஈசூனில் இருக்கும் ஒரு பெரிய முதியோர் இல்லத்தில் தன்னை ஒரு தொண்டூழியராக இணைத்துக் கொண்டார். சனிக்கிழமைகளில் காலை 9 முதல் 12 வரை தேர்வே இருந்தாலும் அதைப் புறக்கணிக்கும் அளவுக்கு […]
கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான் சோப்பு வேண்டாம் எண்ணெய்க் குளியல் இன்றுதான் தீயின் தீண்டலில் மத்தாப்பூச் சிரிப்பது இன்றுதான் முறுக்குரல்கள் சுறுசுறுப்பாவதும் இன்றுதான் இனி பறக்கும் டாக்ஸியில் நானூறடி உயரத்தில் கொண்டாடுவோம் நாளைய தீபாவளியை அமீதாம்மாள்
போருக்காகச் சென்றிருக்கும் அரசரும், படைத்தலைவர்களும் தங்கியிருக்கும் இடமே பாசறையாகும். அங்கே போர் குறித்த திட்டங்கள் தீட்டப்படும். போருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படும். அங்கே இருப்பவர்கள் போரில் புறங்கொடாமல் வீழ்ந்தாலும் புகழை விரும்புவோரே ஆவார். இப்பத்துப் பாடல்களும் பாசறையில் நிகழ்வும் நிகழ்ச்சிகளைக் காட்டுவதால் இப்பெயர் பெற்றது. =====================================================================================1. ஐயஆயின, செய்யோள் கிளவி; கார்நாள் உருமொடு கைஅயறப் பிரிந்தென, நோய்நன்கு செய்த எமக்கே; யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே. [ஐ=அழகு; செய்யோள்;செம்மையானவள்; கிளவி=தூதிடம் சொல்லி விட்ட […]