மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை

This entry is part 27 of 36 in the series 30 செப்டம்பர் 2012

புனைப் பெயரில்… மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் சரி, அங்கு பணி புரியும் நிறைய பேர், அரசு ஆஸ்பத்திரிகளிலும் வேலை பார்ப்பார்கள். இது சட்டப்படி குற்றம்… தண்டனைக்குறியது… ஆனால், எல்லா மருத்துவ கல்லூரி இணைந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் தலைமை மருத்துவராக இருப்பவர்கள் கூட வெளியே தனியே பிராக்டிஸ்… அரசு மருத்துவமனைகளின் தரக் குறைவுக்கு டாக்டர்கள் காரணமில்லை… பின்..? அங்கு அந்த மருத்துவ மனைகளின் […]

நினைவுகளின் சுவட்டில் (101)

This entry is part 26 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி […]

நம்பிக்கை ஒளி! – 1

This entry is part 25 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ”அம்மா.. அம்மா. தூங்குறயா நீனு.. இந்த பாப்பா பொம்மையைப் பாறேன். திடீர்னு கண்ணே திறக்க மாட்டீங்குது.. அச்சச்சோ, பாப்பா மாரியே நீயும் கண்ணே தொறக்க மாட்டீங்கறே.. ஐய.. பாப்பா மாதிரி நீனும் வெள்ளாடறியா… அம்மா.. அம்மா…”   “அக்கா, அம்மா தூங்கறாங்க பாரு. தொந்திரவு பன்னாத. அம்மா நேத்தே காச்சல்னு சொல்லிச்சுதானே. நல்லா தூங்கட்டும். அப்பதான் சீக்கிரமா காச்சல் சரியாவும்.”   “இல்லை, மாலு எனக்கு வயிறு பசிக்குதே. அம்மா இன்னும் சோறு செய்யவே இல்லியே.. […]

எங்க வீட்டு தங்க ஊசிகள்…!

This entry is part 23 of 36 in the series 30 செப்டம்பர் 2012

தெருவில் “ஊ…ஊ…ஊ….ஊ…..லொள்..லொள்..லொள்…லொள்….ஊ..ஊ..ஊ..ஊ.. ” இரவின் அமைதியைக் கிழித்துத் துவம்சம் பண்ணிக் கொண்டிருந்த தெருநாய்களின்  ஊளையிடும் சத்தம் கேட்டு ஏற்கனவே பயந்து கொண்டிருந்த ஜெயந்திக்கு வயிற்றைப் பிசைந்து..தொண்டை வரண்டது..கடிகார முள் சத்தம் வேற “டிக் டிக் டிக்..”..என்று இதயத் துடிப்போடு சேர்த்து அதிவேகமாக நகர்வது போல  உணர்ந்தவள், கார்த்தால ஸ்பெஷல்  கிளாஸ்  இருக்குன்னு  சொல்லிட்டு சீக்கிரமாக் கிளம்பி  காலேஜுக்குப் போன அபிலாஷ் பாதி ராத்திரி ஆகியும்  இன்னும், வீடு வந்து சேரலை. அவன் கேட்டதும்  பைக் வாங்கிக் கொடுத்தது […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30

This entry is part 22 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்   ஒரு பெண்ணின் கதை அவள் ஓர் அழகான விதவை அவளுக்கு ஒரு மகன் மட்டும் உண்டு. அரசில் பணி கிடைத்ததால் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் அழகும் தனிமையும் பலருக்கு சபலத்தை ஏற்படுத்தியது. அதிலும் சிலர் வேட்டை நாயைப் போல் சுற்றிச் சுற்றி வந்தனர். அவள் கண்ணியமாக வாழ்ந்தும் வீண்பழி சுமத்தி அவளை வேதனைப் படுத்தினர். அவளுடைய நேர் மேலதிகாரி ஓர் பெண். நிலைமையைப் […]

குரானின் கருவும் உருவும்

This entry is part 21 of 36 in the series 30 செப்டம்பர் 2012

முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனின் அத்தியாயங்களுக்கான தலைப்புகளில் பல கவித்துவக்குறியீடுகளாகவும், யதார்த்த மொழித் தன்மையாகவும் அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் இயக்கமாகவும், இயற்கையின் அற்புதங்களாகவும் திகழ்கிற இடி (அர்ரஃது), அந்த ஒளி (அந்நூர்), மலை (அத்தூர்), புழுதிக்காற்று (அத்தாரியாத்), நட்சத்திரம் (அந்நஜ்மு), சந்திரன் (அல்கமர்), கிரகங்கள்(அல்புரூஜ்), விடிவெள்ளி (அத்தாரிக்), வைகறை(அல்பஜ்ர்), இரவு(அல்லைல்), முற்பகல் (அல்லுஹா) காலைப்பொழுது(அல்பலக்) என்பதாக இவை அமைந்துள்ளன. உயிரினங்களின் அடையாளங்களைக் கொண்ட பெயர்கள் பிறிதொருவகை. பசுமாடு(அல்பகறா), கால்நடைகள்(அல்அன்ஆம்), தேனீ(அந்நஹல்), எறும்பு(அந்நமல்), சிலந்தி(அல் அன்கபூத்), யானை (அல்பீல்) என […]

அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க

This entry is part 20 of 36 in the series 30 செப்டம்பர் 2012

அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம் அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும்  அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற www.annavinpadaippugal.info என்ற புதிய இணையதளம்  உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத்தகவலை தங்களை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரிவிக்கும்படி  அன்புடன் வேண்டுகிறோம். அண்ணா இணையதளத்தில் அண்ணா பேரவையின் அண்ணா பிறந்த நாள் விழா செய்திகளை அறிய  www.arignaranna.net நன்றி. அன்புடன், இரா.செம்பியன் அண்ணா பேரவை, தஞ்சாவூர்

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்

This entry is part 18 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

This entry is part 17 of 36 in the series 30 செப்டம்பர் 2012

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில் கோலமிடும் பாய்மரத் தீவுகளாம் காலக்ஸி ஒளிமந்தை ! சூடான வாயு முகில் குளிர்ந்து போய் மாயமாய் ஈர்ப்பு விசை சுருக்கி உஷ்ணம் பல மில்லியன் ஆகி உருண்டு திரண்டு ஒளிமந்தை விண்மீன்களாய் விழி சிமிட்டும் ! அகிலவெளி அரங்கில் வெப்ப முகில் வாயுவில் மிதக்கும் காலக்ஸிகள் இரண்டு மோதினால் கைச்சண்டை புரியாமல் கைகுலுக்கிப் பின்னிக் கொள்ளும் ! வாயு மூட்டம் கட்டித் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4

This entry is part 16 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]