இரகசியமாய்

இரகசியமாய்

இருக்க முடியவில்லை.

 

ஜன்னலாய் மூட நினைத்தால்

நான்

கதவில்லாத ஜன்னல்.

 

திரையென்று மறைக்க நினைத்தால்

நான்

வெட்டவெளி வானம்.

 

வாசல் கதவு சாத்தப் போய்

வாசலுக்கு வெளியே

நான்.

 

பிறர் கண்களை மூடப் பார்த்தால்

என் கண்கள் பிறர் கண்கள்.

 

என் கண்களை மூடப் பார்த்தால்

பிறர் கண்கள் என் கண்கள்.

 

இருளென்று நினைத்தால்

இருளுக்குள் கரந்திருக்கும்

வெளிச்சம்

கவனிக்கும் என்னை.

 

என் ஆடையும்

’சக்கரவர்த்தி’ ஆடை.

 

இரகசியமாய்

வைத்திருக்க முடியவில்லை

என் ‘இரகசியத்தை’.

’என் வாழ்க்கை’யென்று

இரகசியமாய்

இருப்பதில்லை வாழ்க்கை.

Series Navigationகவிதைகள்தனக்கு மிஞ்சியதே தானம்