This entry is part 21 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

சூர்யா நீலகண்டன்

அந்த குழந்தை
அப்பாவிடம் கூறியது
அதற்கு ஏன்
மீசை வளரவில்லை
என்று.

அப்பா அதனிடம்
கேலியாக
மூன்றில்
எங்கு மீசை
என்று.

அப்பாவை கேட்ட
அப்பாவிக் குழந்தை
தன் செல்லப் பூனையிடம்
கேள்வியாக இரண்டில்
உனக்கு மட்டும்
எப்படி மீசை
என்றது.

திடீரென பூனையின்
மீசையிலேறிய
கௌரவத்தில்
அப்பாவின் தோரணை
அதன் உறுமலில்
உருவம் கொண்டது.

சூர்யா நீலகண்டன்

Series Navigationஅறப்போராட்டமாம் !கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)