வால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. !

This entry is part 27 of 40 in the series 26 மே 2013

(Song of Myself)

தீயணைப்பாளி நான் .. !

 Walt Whitman

 (1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

நானொரு விடுதலைக் கூட்டாளி 

இரவில் வெளிப்புறக் கூடாரமே

எனது குடில்.

தீரரின் பேருள்ளம்

கூர்ந்தறிபவன் !

தற்கால வல்லமையும்,

எக்கால வல்லமையும் புரிந்தவன்.

நானோர் அடிமை வேட்டை நாய்

நாய் கடித்தால் ஓடுபவன்

நரகமும், நம்பிக்கை இழப்பும்

என் மேல்தான்.

குறி வைப் போனை

முறித்து விடு ! மீண்டும்

முறித்து விடு !

முள் வேலியின் தூண்களைப்

பற்றிக் கொண்டேன் !

சொட்டுகிறது குருதி

மெலிந்து போனது தோல்.

கற்களின் மேலும்,

களைப் புற்களின் மீதும் விழுந்தேன் !

குதிரைச் சவாரி செய்வோர் 

சவுக்கடிப் பிரம்பால்

சிரசில் அடித்தார் என்னை

மூர்க்கத் தனமாய் !

 

 

உடல் வேதனை எனது 

உடை மாற்றத்தில் ஒன்றாகும் !

காயப் பட்டோனை

காயம் எப்படி வலிக்கு துனக்கு

எனக் கேட்க மாட்டேன்.

நானே காயம் அடைந்தவன் !

என் வலியே தீராமல்

இன்னும் தொடருது !

நெஞ்செலும்பு நொறுங்கி

நசுக்கப் பட்ட

தீயணைப் பாளி நான் !

இடிந்து விழுந்தன சுவர்கள்

என்னைப் புதைத்து

சிதைந்த குப்பை களால் !

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (May 22, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationடெஸ்ட் ட்யூப் காதல்யாதுமாகி….,
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *