(Song of Myself)
என்னுரிமைத் தோழன்
(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
நீ யாரென நான் கேட்ப தில்லை
எனக்கது முக்கிய மில்லை
எதுவும் செய்ய இயலா தவன்
ஏதேனும் தன்னிடம் இல்லா தவன்
ஆயினும் உன்னை
என்னுள் ளத்தின் உள்ளே வைத்துப்
பின்னிக் கொள்வேன் !
பருத்திக் காட்டு கடும் உழைப்பு
அல்லது
கழிப்பறைச் சுத்தப் பிழைப்பு
ஊழிய னுக்கு
வலது கன்னத்தில் சாய்ந்து
குடும்ப உரிமையில்
ஓர் முத்தம் கொடுப்பேன்.
அடுத்தென் ஆத்மா விடம்
உரைப்பேன் வாக்குறுதி ஒன்று !
ஒருபோதும் நான் அவனைக்
கைவிடப் போவ தில்லை !
கருத்தரிக்க ஏற்புடைய
காரிகை யோடு
சுறுசுறுப்பு மதலைகள் உருவாக்க
விரைவாக முனைவேன் !
மரணப் படுக்கையில் மீளாத
மனிதன் ஒருவனின்
படுக்கைத் துணி சுருட்டி
அறைக் கதவைத் தாழிடுவேன்
மருத்துவனும்
மதப் பாதிரியும் வெளித் தள்ளி !
கவிழ்ந்து விழும் மனிதனைக்
கை தூக்கி விடுவேன்
மேலே
எதிர்ப்பிலா வலுவோடு !
எல்லாம் இழந்தவனே !
என் உதவி உனக்குண்டு !
இறைவன் பரிவில்
உனக்கில்லை ஒரு வீழ்ச்சி !
ஏற்றிக் கொள்
உன் பாரம் முழுதும்
என் தோள் மீது !
ஓய்வெ டுத்துக் கொள் !
நானும் அவனும்
உன்னருகில் இரவு முழுதும்
உறங்கா திருப்போம் !
ஐயமில்லை
நோய் எதுவும் தாக்கா துன்னை
உன்னைத் தழுவினேன்
என்னுரிமைத் தோழனாய்.
பொழுது புலர்ந்து நீ
விழித்தெழும் போது உனக்குப்
புரியும் நான்
உரைத்த தெல்லாம்
சரியென்று !
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 18, 2013)
http://jayabarathan.wordpress.
- படைப்பு
- மொழியின் அளவுகோல்
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் – ஒரு பார்வை.
- புகழ் பெற்ற ஏழைகள் – 12
- கல்யாணியும் நிலாவும்
- மருத்துவக் கட்டுரை மதுவும் கணைய அழற்சியும்
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 25
- நம்பிக்கை
- தாகூரின் கீதப் பாமாலை – 70 பிரிவுக்கு முன் செய்த முடிவுகள் .. !
- என்னைப் பற்றிய பாடல் – 23
- காரைக்குடி கம்பன் கழகம்
- மனதாலும் வாழலாம்
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- லிங்கூ-வில் இயங்கும் காலமும் வெளியும் – கவிஞர் என்.லிங்குசாமி கவிதைகளை முன்வைத்து
- மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்
- ப.மதியழகன் கவிதைகள்
- பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்
- கவிதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 8,9,10
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 15
- உள்ளே ஒரு வெள்ளம்.
- ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது
- டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 8
- “செங்கடல்”
- இரயில் நின்ற இடம்
- என்ன ஆச்சு சுவாதிக்கு?
- நான் ஒரு பொதுமகன். And Im not a terrorist
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -7