மதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்

author
19
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 15 in the series 1 மார்ச் 2015

nagore

வைகை அனிஷ்

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல பாடல்கள் நாகூரைப்பற்றிப் பாடுவதுண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது நாகூர். நாகூர் பிரபலம் ஆவதற்கு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நாகூர் சாகுல்ஹமீதுவின் கல்லறை தான்.
இந்து மதசாயலில் இஸ்லாமிய கலாச்சாரத்தை இந்த தர்காவில் காணலாம். நாகூர் பேரூந்து நிலையத்தில் இறங்கி நம்மை வரவழைப்பது அலங்கார வாசல். அலங்கார வாசலின் இருபுறமும் இரண்டு அறைகளில் மங்கல வாத்தியம் ஒலித்துக்கொண்டு இருக்கும். அதனைக்கடந்து சென்றால் இந்துக்கோயில்களில் யானைகள் வரவேற்பது போல இங்கும் யானைகள் நிறுத்தப்பட்டு ஆசி வழங்கி கொண்டிருக்கும். தர்காவின் நுழைவு வாயில் நுழைந்தவுடன் தங்கள் எண்ணம் நிறைவேறவேண்டும் என்ற நோக்கில் புறாவை இந்துக்கோவில்களில் தலையில் தடவி காணிக்கை செலுத்துவது போல இங்கும் ஒவ்வொருவரும் தங்கள் தலையில் புறாவை தடவி பறக்கவிடுவதை காணலாம். அதன் பிறகு நுழைந்தவுடன் மயில் இறகால் நம்முடைய தலையை வருடி தர்காவின் உள்ளே நுழைய அனுமதிப்பார்கள். அதற்கு எதிரே இந்துக்களின் கலாச்சாரமான விளக்கு ஒன்று எரிந்து கொண்டே இருக்கும். தங்கள் எண்ணம் நிறைவேற இந்த நந்தியாவிளக்கில் நெய்யை ஊற்றுவது அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு.அதனை அடுத்து சென்றால் இந்துக்கோயில்களில் உள்ள குளங்கள் போன்று இங்கும் குளம் உள்ளது. தங்கள் நேர்ச்சைகளை செய்பவர்கள் இங்கு மொட்டையடித்து தங்கள் முடிகாணிக்கையை செலுத்துகிறார்கள். இவ்வாறு இந்துமதத்தின் சாயலில் இருப்பதால் ஏராளமான இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். அதிகாலையிலும் மாலையிலும் கோயில்களில் வெடி வெடிப்பது போல இங்கும் வெடிகள் வெடிக்கப்படுகிறது.
யார் அந்த சாகுல் அமீது.
நாகூர் சாகுல்ஹமீது அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மாணிக்கப்ப+ரில் கி.பி.1490 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய 44 வது வயதில் நாகூர் வந்தடைந்தார். கி.பி.1558ல் தனது 68 வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
கி.பி.16-ம் நூற்றாண்டில் இவரது அமைதியான பிரச்சாரம் மூலம் பலர் இஸ்லாமியர்கள் ஆனார்கள். ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவரது பெயரால் தஞ்சாவ+ரை ~காதர் நகர்~ என அழைத்தனர்.
சாகுல்ஹமீது நாகூரை வந்தடைந்தபோது (1560-1614) ஆம் ஆண்டு தஞ்சாவ+ரை அச்சுதப்ப நாயக்கர் ஆண்டு வந்தார். சாகுல்ஹமீது அவர்கள் மீது ஈடுபாடு கொண்ட கொண்டிருந்தார். பிரதாப்சிங்(1739-1763) இந்த தர்காவிற்கு 15 கிராமங்களை கொடையளித்துள்ள செய்தியினை கல்வெட்டுக்கள் கூறுகிறது. பிரதாப்சிங் காலத்தால் தர்காவில் கட்டிடங்கள் விரிவு படுத்தப்பட்டது. பிரதாப்சிங்கை நாகூர் தர்காவின் சிற்பி என ஆங்கிலேய பதிவேடுகள் கூறுகிறது. பிரதாப்சிங் ஆட்சியில் தர்காவில் நிர்வாகத்தை கவனிப்பதற்கு தனியாக உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் தர்காவிற்கு வெளியே உள்ள பெரிய மினாராவை கட்டி(உயரம் 131 அடி) இந்நகருக்கு பெருமை சிறப்பித்தார். பிரதாப்சிங்கிற்கு பின்வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு நிறைய நன்கொடைகள் வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் தர்கா கந்தூரி உற்சவத்தின்போது மராட்டிய மன்னரிடமிருந்து அலங்கார ஆடை தர்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று வரை மராட்டிய மன்னர்கள் வம்சாவழிகள் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.;இந்திய சுதந்திரப்போராட்டத்தில் போராடிய குஞ்ஞாலி மரைக்காயரை தூத்துக்குடி கடல் பகுதியில் வரவழைத்தவர் நாகூர் சாகுல் ஹமீது. இதனால் நாகூரில் உள்ள தெரு ஒன்றின் பெயர் குஞ்ஞாலி மரைக்காயர் தெரு உள்ளது.துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடனும், நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை கண்டு ஆங்கிலேயர்கள் திகைத்துள்ளார்கள்.
இந்து கலாச்சாரத்தில் முஸ்லிம்கள்
இந்து கலாச்சாரத்தின் தாக்கத்தினால் முஸ்லிம்கள் சமுதாயத்தில் பல பழக்கங்களை தர்காவில் காணலாம். தர்கா வழிபாட்டு முறைகளிலும் இந்த தாக்கத்தினை காணமுடிகிறது. இறந்தவர்களுக்கு சிறப்பு விழாக்கள் எடுப்பது இந்து கலாச்சார வழக்கமாகும். இதற்கு ~குருப+ஜை~ என்று கூறுவார்கள். இதே பழக்கத்தை ஒட்டி ~கந்தூரி~ எனப்படும் விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த விழாக்களில் நடைமுறைகளில் பெரும்பாலானவை இந்து கலாச்சாரத்தின் கூறுகளாகும். இந்து திருவிழாக்களில் தேர் இழுத்து வருவது போன்று தர்கா கந்தூரி விழாவில் ~சந்தனக்கூடு~ வலம் வருவதை பார்க்கலாம். தேரில் உற்சவமூர்த்தி வலம் வருவது வழக்கம். ~சந்தனக்கூடு-தேர் போன்று அலங்கரிக்கப்பட்டு அதில் சந்தனம் நிரம்பிய குடம் ஒன்று வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, தர்காவில் கல்லறைகளில் ப+சப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களால் பிரசாதமாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்து கோயில்களில் நடைபெறும் நேர்ச்சை(வேண்டுதல்) போன்று மொட்டையடித்துக் கொள்ளுதல், கோழி, புறா, கால்நடைகளை காணிக்கையாக செலுத்துதல் ஆகியவற்றையும் இங்கு வரும் முஸ்லீம் மக்களும் செய்வதை காணலாம்.
கட்டிடக்கலை
தர்காவின் கட்டிடக்கலை அமைப்பு(மனோராக்களைத்தவிர) திராவிடக் கட்டிடக்கலை பாணியிலேயே அமைந்துள்ளது. தர்காவிற்கு கிழக்கு வாயிலில் குளம் இருப்பதை காணலாம். இது போன்ற குளங்கள் இந்து கோயில்களோடு இணைந்து காணப்படுவதாகும். மேலும் இங்குள்ள மண்டபத்தின் தூண்களும் கூறைகளும் திராவிடக் கட்டிடக் கலைப்பாணியிலேயே கட்டப்பட்டுள்ளன. பொதுவாக மனோராக்கள் வட்டி வடிவில் இருக்கும். இங்குள்ள ஐந்து மனோராக்களும் சதுரமாக கட்டப்பட்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
மினார்
தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு பள்ளிவாசலை அடையாளம் காட்டும் சின்னமாக மினராக்கள் உள்ளது. எகிப்து நாட்டில் உள்ள பஸ்தாத் என்ற நகரில் ஹஜ்ரத் அமர்பின்ஆஸ் அவர்களால் மினராக்கள் இல்லாமல் கட்டப்பட்ட பள்ளிவாசலில் ஹஜ்ரத் முஆவியா(உமைய்யா வம்சத்து முதல் கலீபா) வின் கவர்னர் நான்கு மினராக்களை கட்டினார். இப்பள்ளியில் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக மினாரா கட்டப்பட்டது. உமைய்யா வம்சத்து கலீபாக்களே பள்ளிவாசல்களில் மினராக்களை அறிமுகப்படுத்;தினார்கள். நான்கு மினராக்கள் கட்டும் முறை எகிப்து நாட்டிலிருந்தும், ஒரு மினரா கட்டும் முறை ஈராக் நாட்டிலிருந்தும் வந்தவை. ராவுத்தர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்ட பள்ளிகளில் குதிரை குளம்பு வடிவத்தில் மினராக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
பள்ளி
சங்க காலத்தில் அரசர்கள் உயிர்துறந்த பின் புதைத்த இடங்களைப் பள்ளி என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பள்ளி என்ற சொல்லானது துறவிகள் தங்குவதற்கும், உறங்குவதற்கும் அமைக்கப்பட்ட இடங்களுக்கு பள்ளி என்றே தமிழ்பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. இவை தவிர முனிவர்கள் ஆசிரமம், பௌத்த கோயில்கள், அரண்மனை, படுக்கை, பள்ளிக்கூடம் போன்றவை பள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஆதியில் சமண, பௌத்த கோயில்களே பள்ளி எனப்பட்டன. அவைகள் சைவ, வைணவக் கோயில்களாக மாறியபின்பும் அதே பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி, அகத்தியான்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி போன்ற ஊர்கள் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் தங்கள் தொழுகைக்கான இடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கின்றனர்.
நாகூர் மினராக்கள்
மராட்டிய மன்னன் பிரதாபசிங் கட்டியுள்ள பெரியமனோராவுக்கு மன்னர் துக்கோஜி கொடையளித்துள்ளார். தஞ்சாவ+ர் விஜயநாகவ நாயக்கர் தர்காவின் முதல்வாயில் மனோராவைக் கட்டியுள்ளார். தலைமாட்டு மனோராவை நாகூர் நல்ல சையது மரைக்காயரும், மூன்றாவது மனோராவை பீர் நைனா மரைக்காயரும், நான்காவது மனோராவை தாவ+த்கானும் கட்டியுள்ளார்கள். இதற்கு கூத்தாநல்லூரைச்சேர்ந்த நடேச ஐயர் தங்க கலசம் வைத்துள்ளார். மேலும் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்துமே 17-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிவந்த திராவிடக் கட்டிடக்; கலைப் பாணியும், இஸ்லாமிய கட்டிடக் கலைப்பாணியும் கலந்து கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இந்துக்கள் கோயில்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு இந்துக்களும் கொடைகள் மற்றும் திருப்பணிகள் வழங்கியுள்ளனர். வழங்கியும் வருகின்றனர். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நாகூரைப்போலவே ஏர்வாடி, திருச்சி, சென்னையில் உள்ள தர்காக்களிலும் பல உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதற்கு இதுவே தக்க சான்றாகும். இங்குள்ள கல்வெட்டுக்கள் மதவெறிக்கு சாட்டையடிக்கும் கல்வெட்டுக்களாக காலங்களை கடந்தும் திகழ்கிறது.
இந்துக்கள் வழங்கிய கொடைகள் பற்றிய கல்வெட்டுக்கள்
இடம்:நாகூர் புகைவண்டி நிலையம் அருகில் காணப்படும் கல்வெட்டு
காலம்:1911
கல்வெட்டு:ஸ்ரீமது.நாகூர் ஆண்டவர் துணை
சென்னப்பட்டனம்
ஸ்ரீபழனியாண்டி பிள்ளை அண் சன்ஸ்
தர்மசத்திரம்
என குறிப்பிட்டுள்ளது.
இதே போல இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தர்மசத்திரம் கொடையாக கொடுத்துள்ளார்.
2.மண்டபத் திருப்பணி செய்த அப்துல்காதார்
நாகூர் தர்ஹா அலங்கார வாசல் என்று அழைக்கப்டும் நுழைவு வாயிலின் வலது புறத்தூணில் தமிழிலும், இடது புறத் தூணில் உருதுவிலும் எழுதப்பட்டுள்ளது.
இடம்:முன் மண்டபத்தூண் இடது புறம்
காலம்:பிரமாதி வருடம் கி.பி.1879
செய்தி:முன் மண்டபத்தின் கீழ்ப்புறம் ஒரு பத்தியை நாகூர் அகமது லெப்பை குமாரர் ஹாஜி அப்துல் காதர் கட்டி வைத்தார். இதனைக்கட்டிய கொத்தனார் இருவர் பெயரும் கூறப்படுகிறது.
கல்வெட்டு:
1.பிஸ்மில்லாஹிஃ2.இந்தக் கட்டிடமும் கீள்ஃ3.புறம் ஒரு பத்தி கட்டிடமும்ஃ4.ஹஜரத்து ஷாஹனால்
5.ஹமீது செய்யிதுஃ6.அப்துல் காதிர் ஒலிஃ7.கஞ்ஜ சவாயி கஞ்ஜ பகுசுஃ8.பாத்துஷா சாஹிபு
9.ஆண்டவர்களுக்காகஃ10.நாகூர் அஃமது லெவ்வைஃ11.குமாரற் ஹாஜிஃ12.அப்துல் காதிர்
13.நகுதாவால் கட்டப்பட்டதுஃ14.பிரமாதி வரு 1879ஃ15.இந்த வேலை திருச்சினாப்பள்ளி ஒறைய+ர்
16.சின்னத் தம்பி முத்து கருப்ப கொத்தர் குமாஃ17.ரர்கள் க.று.ம. சிவந்திலிங்கம்
18.தாறானூர் ஆ.அண்ணாவி
3.பிரதாபசிங் கொடை
இடம்:நாகூர் தர்கா முன்னர் உள்ள வெளி மினார்
காலம்:தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங் மகாராசா
(1739-1763) காலம், யுவ வருடம் தை மாதம் 11:கி.பி.1755
செய்தி:தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் மகாராசா வெளி மினார் கட்டி வைத்தார். நாகூரில் ;அதிகாரியாக இருந்தவர் சேக் அப்துல் மலிக் அவர்கள் குறிப்பெறுகிறார். மராட்டிய அதிகாரிகள் மானோசி செகதாப், ராமோசி நாயக்கர் ஆகியோரும் குறிக்கப் பெறுகின்றனர்.
கல்வெட்டு:
1.அசரத்து மீறா சாயிபுஃ2.ராஸ்ரீ பிறதாபசிங்கு மஃ3.காராசா சாயிபு அவர்ஃ4.கள் கட்டிவச்ச மணாறா
5.ரா.மானோசி சிகதாபு ரா.ஃ6.அவர்கள் ரா.ரா.ராமோசிஃ7.னாயக்கர் அவர்கள் மத்தி
8.ஷத்தில் உத்தாரப்படிக்கு சேகுஃ9.மலிக்கு நாகூர் மத்திஷத்ஃ10.தில் மனாரா பதினொரு நிலம் க
11.ட்டி முடிஞ்சுது யுவ வருஷம் தை மாதமஃ12.தேதி கும்பம் வச்சது
4.விசயராகவ நாயக்கர் கொடை
இடம்:நாகூர் தர்கா உள் மினார்
காலம்:தஞ்சை நாயக்கர் விசயராகவ நாயக்கர் (1640-1674)
காலம் பார்த்திப ஆடி15: கி.பி.3.7.1645
செய்தி:தஞ்சை நாயக்க மன்னரின் அதிகாரியாக இருந்த நாகூர் மீரா ராவுத்தர் உள் மினாரைக் கட்டினார்
கல்வெட்டு
1.பாத்திப வருஷம் ஆடி மாதம் 10 தேதிஸ்ரீ விசையராவுகஃ2.நாயக்கய்யன் காரியத்துக்குக் கர்த்தரான
3.மதாறு ராவுத்தர் நாவ+ர் மீரா ராவுத்தர் முதஃ4.ல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் த
5.ம்மத்துக்கு அகுதம் பஃ6.மக்கத்திலே அகுதம் பஃ7.ண்ணின பாவத்திலேஃ8.போக கடவாராகவும்
9.கெங்கைக் கரையில் காராஃ10.ன் பசுவை கொன்ற பாஃ11.வத்திலே போககடவாராகவும்
5.தங்க கலசம் வைத்த மகாதேவ அய்யர்
வடக்கு மனோரா கல்வெட்டு
1.உஃ2.கூத்தா நல்லூர்ஃ3.எஸ்.மகாதேவ ஐயர் அவர்களால்ஃ4.தங்க கலசம்ஃ5.வைக்கப்பட்டதுஃ6.92-1956
6.குஞ்சு மரைக்காயர் கட்டிய பீர் மண்டபம்
பீர்மண்டபத்தில் உள்ள கல்வெட்டு
காலம்:ஹஜ்ரி 972 றசப் மாதம்
செய்தி:குஞ்சு மரைக்காயர் காதர் மீரா சாயபு தன் சொந்தப் பணத்தில் பீர் மண்டபம் கட்டிய செய்தி கூறப்பட்டுகிறது.
கல்வெட்டு:
1.பீர் மண்டபம்ஃ2.பிசுமில்லாகிஃ3.றரு கிசரத்துஃ4.972 வருஷம் றசப்ஃ5.மாதம் முதல் நாகூர் கலா
6.ரத்து சாகுல் கமீதொலிஃ7.ஆண்டவரவர்கள் சீசறுஃ8.மான குஞ்சு மரைக்ஃ9.காயர் முகம்மது அ
10.பு பக்கர் மரைக்காஃ11.யரவர்கள் குமாரருஃ12.மாகிய குஞ்சு மரைக்ஃ13.காயர் காதிறு மீறா சா
14.கிபு சொந்தத்தில் சிலஃ15.வு செய்து கட்டிய பீர்ஃ16.மண்டபம் 7031ஃ17.நள வருஷம் சித்திரை மாதம்
7.மினார் கட்டிய சையது மரைக்காயர்
இடம்:நாகூர் தர்கா வடக்கு மினார்
காலம்:19ம் நூற்றாண்டு:ஸ்ரீமுக மாசி:கி.பி.1873
செய்தி:நாச்சிகுளம் உதுமா மரைக்காயர் பேரனும், நல்லதம்பி மரைக்காயர் மகனுமான நகுதா நல்ல சையது மரைக்காயர் கட்டிய விபரம் கூறப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1.அமானல்லாயி சாஃ2.த்துக்தண நிறெகவுஃ3.ம் சிறிமுக வருஷம் மாசிஃ4.மாதம் நாச்சிகுழம்
5.உதுமா மரைக்காஃ6.யர் குமாரர் நல்லஃ7.தம்பி மரைக்காயஃ8.ர் குமாரர் நகுதாஃ9.நல்ல செயிது மரை
10.க்காயர் அவர்கள் நாஃ11.கூர் மீரா சாயபுஃ12.அவர்கள் தறுகாஃ13.வில் கட்டிவச்ச மினாற்
கட்டுரை
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி-625 602.
செல்:9715-795795

Series Navigationபாரம்பரியத்தை பறைசாற்றும் கல்வெட்டுக்கள்மிதிலாவிலாஸ்-4
author

Similar Posts

19 Comments

 1. Avatar
  suvanappiriyan says:

  சகோ வைகை அனீஷ்!

  //இந்து கலாச்சாரத்தின் தாக்கத்தினால் முஸ்லிம்கள் சமுதாயத்தில் பல பழக்கங்களை தர்காவில் காணலாம். தர்கா வழிபாட்டு முறைகளிலும் இந்த தாக்கத்தினை காணமுடிகிறது. இறந்தவர்களுக்கு சிறப்பு விழாக்கள் எடுப்பது இந்து கலாச்சார வழக்கமாகும். இதற்கு ~குரு பூஜை~ என்று கூறுவார்கள். இதே பழக்கத்தை ஒட்டி ~கந்தூரி~ எனப்படும் விழாக்கள் நடைபெறுகின்றன.//

  நாகூர் தர்ஹாவுக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற தர்ஹாக்களை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகத்தின் போதனை இருக்கிறது. நபிகள் நாயகத்துக்கு கூட இது போன்ற ஒரு கல்லறை மதினாவில் கிடையாது. அவருடைய கல்லறை வெறும் மண்ணால் ஆனதே. இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை விட ஷாஹூல் ஹமீது எந்த வகையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை கட்டுரை ஆசிரியர் விளக்கட்டும். ஒரு மதத்தினரின் கலாசாரத்தை மற்றொருவர் காப்பி அடிப்பதால் எந்த மத நல்லிணக்கமும் வந்து விடப் போவதில்லை.

  அதே நேரம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையருக்கு பிறந்தவர்கள். அதிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும் என்று குர்ஆன் சொல்கிறது. இதன் மூலம் அவர் கிறித்தவராகவோ, இந்துவாகவோ இருந்தாலும் அவரும் எனது சகோதரரே குர்ஆனின் வசனப்படி. இந்த முறையில் சமூக நல்லிணக்கம் வருவதற்கு எந்த தடையும் இல்லை. இன்று தமிழகத்தில் பெருகியுள்ள ஏகத்துவ (வஹாபிய) கொள்கையினால் மத நல்லிணக்கம் அதிகரித்துள்ளதை காணலாம். 20 வருடங்களுக்கு முன்பு இருந்த முறுகல் நிலை இன்று இல்லாதிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் பல வருடங்களாக இரத்ததானம் செய்து வருவதில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது ஏகத்துவ வாதிகளின் இயக்கங்களே! இந்து கிருத்தவர்களோடு இரத்த உறவை இந்த நிகழ்வு அதிகப்படுத்தியுள்ளது.

  மூடப்பழக்கத்தை ஒழிப்பதற்காக வந்த இஸ்லாத்தின் பெயரால் நாகூர் தர்ஹாவில் தினமும் அனாச்சாரங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இன்று உயிரோடு இருந்திருந்தால் அங்கு அடங்கியிருக்கும் பெரியவர் ஷாகுல் ஹமீத் உண்மையிலேயே மனம் வருத்தப்பட்டிருப்பார்.

  எனவே மத நல்லிணக்கம் என்பதையும் மூடப்பழக்கங்களையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று வைகை அனீஷூக்கு சொல்லிக் கொள்கிறேன்.

 2. Avatar
  ஷாலி says:

  / /இன்றும் இந்து கோயில்களில் நடைபெறும் நேர்ச்சை(வேண்டுதல்) போன்று மொட்டையடித்துக் கொள்ளுதல், கோழி, புறா, கால்நடைகளை காணிக்கையாக செலுத்துதல் ஆகியவற்றையும் இங்கு வரும் முஸ்லீம் மக்களும் செய்வதை காணலாம்.//

  மத நல்லிணக்க(சின்ன)ம், எம்மதமும் சம்மதம் போன்ற எழுத்துக்களும் கருத்துக்களும் ஒரு போலியான அறியாமையின் வெளிப்பாடோ என்று கருத வேண்டி உள்ளது.
  ஒவ்வொரு மனிதனின் மத நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டியதே!ஆனால் முரண்பட்ட கடவுள் கொள்கையைக் கொண்ட மதங்களை அதன் சின்னங்களை கூட்டாக வழி படுவது அறிவுடைமையா அல்லது அறியாமையா?

  தனது சொந்த மத நம்பிக்கையை பிற மதச் சின்னங்கள் பிரதிபலிப்பதால் தேரிழுக்கவும்,(சந்தன) கூடு இழுக்கவும் கூட்டம் கூடுகிறதோ…

  வணங்கத் தகுதியானவன் ஒரே இறைவன் என்கிறது இஸ்லாம்.பிதா-சுதன்-பரிசுத்த ஆவி, திரித்துவம் மட்டுமே வணக்கத்திற்குரியது என்பது கிருஸ்தவம். இல்லை,இல்லை..இறைவன் தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான். எல்லாமே வழிபாட்டிற்குரிய தெய்வங்களே இருப்பவர்களும் இறந்தவர்களும் தெய்வங்களே..என்று முப்பது முக்கோடி தேவர்களை தெய்வமாக வணங்கும் இந்துமதம்.

  முரண்பட்ட கொள்கை உடைய இம்மூன்று மதங்களையும் வழிபடும் ஒரு மனிதன் மத நல்லிணக்க வாதியா? அல்லது மன குழப்ப வியாதியா?
  ஒரு மனிதனின் மத நம்பிக்கை அவனது பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.

 3. Avatar
  ஒரு அரிசோனன் says:

  //முரண்பட்ட கொள்கை உடைய இம்மூன்று மதங்களையும் வழிபடும் ஒரு மனிதன் மத நல்லிணக்க வாதியா? அல்லது மன குழப்ப வியாதியா?
  ஒரு மனிதனின் மத நம்பிக்கை அவனது பகுத்தறிவுக்கு விடுதலை கொடுத்து விட்டால் அவன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை.//

  பகுத்தறிவு என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு பழிக்கவேண்டுமா? எப்பொழுது பகுத்தறிவு எனக்குத்தான் இருக்கிறது, எனவே, நான் நினைக்கும்வண்ணம் மற்றவன் நினைக்காவிட்டால் அவன் மனிதனே இல்லை என்பது எந்தவிதத்தில் பகுத்தறிவாகும்?

  எந்த இடம் ஒருவனைத் தொழத் தூண்டுகிறதோ, அது ஒரு இந்துவுக்கு ஆலயம், முகமதியனுக்கு மசூதி, கிறித்தவனுக்கு சர்ச், யூதனுக்கு சினகாக், சீக்கியனுக்கு குருத்துவாரா.

  அவன், அந்த மனிதன் எங்கு தொழுகிறான் என்பது முக்கியமே இல்லை. அவன் எந்த சமய நம்பிக்கையுடன் தொழுகிறானோ, அந்த சமய நம்பிக்கையுடன் தொழட்டுமே! அந்த சமயக் கடவுள் (அது சிவனோ, விஷ்ணுவோ, முருகனோ — அல்லாவோ — பரமபிதாவோ — யாவேயோ) அருள் செய்துவிட மாட்டாரா?

  //இது போன்ற தர்ஹாக்களை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகத்தின் போதனை இருக்கிறது.//

  ஆக, தனக்குப் பிடிக்காத எதையும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகம் போதனை செய்தாரா? அப்படி என்றால், மக்காவில் இருக்கும் காபாவில் உள்ளே உள்ள பழைய அரபுத் தெய்வங்கள் ஏன் உடைத்து எறியப்படவில்லை? காபாவுக்கு மட்டும் ஏன் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்று சான்று காட்ட இயலுமா, சுவனப்பிரியன்?

  தாங்கள் கூறுவதைப் படித்தது என்னுள் ஒரு மயிர்க்கூச்சர்ப்பு ஏற்பட்டது. தங்கள் கையில் அதிகாரம் இருந்த்திருந்தால் நாகூர் தர்கா மட்டுமா, மற்ற தர்காக்களும் தரை மட்டமாக அல்லவா ஆகி இருக்கும்!

  சாதாரணமா அங்கு வழிபடுபன் ஒரு முகமதியனாக இருக்கமுடியாது என்றல்லவா விஷயத்தைப் பூவென்று ஊதியிருப்பீர்கள். தர்காக்களை இடித்துத் தரைமட்டமாக்கவேண்டும் என்று எழுதியதைப் பார்த்தால் தங்கள் மனதில் வன்முறை தன்னையும் அறியாமல் விதையூன்றுகிறதோ என்று என்னை அச்சப்பட வைக்கிறீர்களே, இது நியாயமா!

 4. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  மிக அருமையான் மத நல்லிணக்க வ்யாசம் சமர்ப்பித்த அன்பர் வைகை அனீஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ஹிந்துஸ்தானத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய குமுகங்களும் அவர்களது வாழ்க்கை முறைகளும் இருக்கின்றன. நாகூர் மட்டிலும் என்ன ஹிந்துஸ்தானமுழுதும் இவை விரவியுள்ளன. இதன் முக்ய பொது அம்சம் அந்தந்தப் பகுதியின் மொழி, கலாசாரம், இசை, பண்பாடு இவற்றுடன் ஒத்து இயங்குவது. இவற்றுடன் மிக அதிக அளவில் ஒன்றியவர்கள் கோடிக்கணக்கான நமது ஏழை எளிய இஸ்லாமிய சஹோதரர்கள்.

  அரேபியாவிலிருந்து இறக்குமதியாகியுள்ள வஹாபியம் / ஸலாஃபியம் என்ற புதிய மதம் ஹிந்துஸ்தானத்தில் இயங்கும் தேசத்தின் பண்பாட்டுச்சுவட்டினை ஒட்டி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இயங்கி வரும் இஸ்லாத்தை அடிச்சுவடு இல்லாமல் அழித்தொழித்து ஹிந்துஸ்தானியரை முற்று முழுதாக அராபியர்களின் நகல்களாக மாற்ற விழைகிறது. ஆனால் இந்த பண்பாடு போற்றும் ஹைந்தவ இஸ்லாத்துக்கும் ஹிந்து முஸ்லீம் மத நல்லிணக்கத்துக்குமான நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உள்ள பாந்தவ்யம் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாதது. மிக முக்யமான தொடர்புகள்………..தர்க்காஹ் ஷெரீஃபுகள் காலங்காலமாக பேணிப்பாதுகாத்து வரும் இணையிலா இசைமரபு, அதுவும் நாகூர் தர்க்காஹ் ஷெரீஃபின் உஸ்தாதுகள் அவர்களது பெருமை வாய்ந்த பரம்பரை விருந்தாவனத்து ஸ்வாமி ஹரிதாஸரின் சிஷ்யராக இருந்த……… ஹிந்துவாகப்பிறந்து முஸல்மானாக ஆகிய…… மியா(ந்) தான்ஸேன் அவர்களது கிளையைச் சார்ந்தது என்பது மிகுந்த உகப்புக்குறியது. ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை, தேச ஒற்றுமை…… போன்ற பல நல்ல விஷயங்களின் ஆதாரம் நாகூர் தர்க்காஹ் ஷெரீஃப்.

  \\ எம்மதமும் சம்மதம் போன்ற எழுத்துக்களும் கருத்துக்களும் ஒரு போலியான அறியாமையின் வெளிப்பாடோ என்று கருத வேண்டி உள்ளது. \\

  அதே அதே சபாபதே. அன்பர் ஷாலி, அடியேன் விக்ஞானி ஜெயபாரதன் அவர்களது மஹாத்மாகாந்தி மரணம் வ்யாசத்தின் எதிர்வினை வ்யாசத்தில் பகிர்ந்த கருத்து இது………..அங்கே அப்போது நீங்கள் ஒத்துக்கொண்டதாக எனக்கு நினைவில்லை. அபூர்வமாக நம் கருத்துக்கள் இப்போது ஒத்துப்போகிறது பாருங்கள்.

  எம்மதமே எமக்கு சம்மதம். ஆனால் மற்ற மதங்களை நான் நிச்சயம் மதிப்பேன். வஹாபிய / ஸலாஃபிய ISIS வெறியுள்ள மதங்கள் மாதிரி மாற்று மதஸ்தர்களை என்ன சொந்த கருத்துக்கு ஒத்து வராத சொந்த மதஸ்தர்களை புல் பூண்டு இல்லாமல் த்வம்சம் செய்வது என்பது நிச்சயம் உலக அமைதிக்கு குந்தகமே.

  \\ வணங்கத் தகுதியானவன் ஒரே இறைவன் என்கிறது இஸ்லாம்.பிதா-சுதன்-பரிசுத்த ஆவி, திரித்துவம் மட்டுமே வணக்கத்திற்குரியது என்பது கிருஸ்தவம். \\

  இன்னமும் கொஞ்சம் முன்னேறி தங்கள் ப்ரவசனம் தொடர்ந்தால் ஸ்ரீமான் தங்கமணியார் அவர்களது ப்ரதி வசனத்தையும் கேழ்க்கலாம். கூடவே காக்கா கத்துவதால் ரெவ ரெண்டு ஜோ அவர்களது விஜயமும் ஸன்னத்தமாகிறது.

  \\ வணங்கத் தகுதியானவன் ஒரே இறைவன் என்கிறது இஸ்லாம்.பிதா-சுதன்-பரிசுத்த ஆவி, திரித்துவம் மட்டுமே வணக்கத்திற்குரியது என்பது கிருஸ்தவம். இல்லை,இல்லை..இறைவன் தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான். எல்லாமே வழிபாட்டிற்குரிய தெய்வங்களே இருப்பவர்களும் இறந்தவர்களும் தெய்வங்களே..என்று முப்பது முக்கோடி தேவர்களை தெய்வமாக வணங்கும் இந்துமதம். \\

  அதெல்லாஞ்சரிதேன். தமிழ் ஹிந்து தளத்தில் குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்க்ளது நந்தீஸ்வர சதகத்திலிருந்து நான் பகிர்ந்த ஒரு துளியை கேட்ட ஜெனாப்-ஏ-அலி சுவனப்ரியன் அவர்கள் பக்தி பரவசமாகி “”சிவ சிவ”” என்று தமது திருக்கரங்களால் பொறித்ததும் அடியேன் அதை மங்களாசாஸனம் செய்ததையும் நினைத்தால்………. லோக மதங்களில் பெரிய அளவு பின்ன பின்னமான கருத்துக்களும் பேதங்களும் நெறய இருந்தாலும்…….. ஸாம்யதைகளும் இருப்பதும்……ஒன்றையொன்று ஆகர்ஷணம் செய்வதும் புலனாகிறது.

  1. Avatar
   BS says:

   ஷாலி சொல்லும் கருத்து சுவனப்பிரியன் கருத்தோடுதான் சேர்ந்து வருகிறது. அதாவது பல மதக்கருத்துக்கள் ஒன்றுக்கொன்று ஒட்டாமலிருக்கும்போது எம்மதமும் சம்மதம் என்பது வேஷம் என்கிறார். கிருஷ்ணகுமார் கருத்தோடு எப்படி ஒத்துவருகிறது? கிருஸ்ணகுமாருக்கு மதமில்லாமிலிருக்கலாம், பிறருக்கு இருக்கிறதே? அங்கே சொன்னேன்; எப்போதே சொன்னேன் எனறு நீட்டாமல், இப்போது இங்கே என்ன சொல்லவருகிறீர்கள் என்பதுதான் வேண்டும. காரணம்: படிப்பவர்கள் புதியவர்களாக இருக்கலாம்.

   இந்தியாவில் இசுலாமியர் வழக்கங்களும் இந்துக்கள் வழக்கங்களும் சேர்ந்து வருவது உண்மைதான். அதனால் இருவரும் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் என்பது பொய் என்பதை மதக்கலவரங்கள் காட்டிக்கொண்டிருக்கின்றன. யூத மதத்துக்கும் இசுலாத்துக்கும் ஒன்றன்று; இரண்டன்று; நூற்றுக்கணக்கான ஒற்றுமைகள்: எழுதப்பட்டவை மட்டுமல்லாமல் அனுஸ்டிக்கப்படும் வழிபாட்டுமுறைகளிலும் ஒற்றுமை. இருவரும் அமைதியோடா வாழ்கின்றார்கள்?

   தமிழ்நாட்டில் ஏனில்லை என்பது சிறப்பான ஆராய்ச்சிக்குரியது. தமிழ்நாட்டில் வாழ்பவரால்தான் ஆராய முடியும். மற்றவரால் முடியாது.

 5. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  \\ நாகூர் தர்ஹாவுக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற தர்ஹாக்களை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகத்தின் போதனை இருக்கிறது. \\

  ஜெனாப்-ஏ-அலி, இப்படியெல்லாம் தாங்கள் சவூதி அரேபியாவில் பேசலாம். தகர்ப்பவர்களுக்கு குண்டு எடுத்தும் கொடுக்கலாம்.

  ஹிந்துஸ்தானத்தில் தர்க்காஹ் ஷெரீஃபுகளில் வழிபட எமது இஸ்லாமிய சஹோதரர்களுக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது.

  ஹிந்துஸ்தானத்தில் சட்டத்தை மீறிய செயல்களுக்கு அங்கீகாரம் கிடையாது.

 6. Avatar
  suvanappiriyan says:

  திரு அரிசோனன்!

  //ஆக, தனக்குப் பிடிக்காத எதையும் இடித்துத் தரைமட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகம் போதனை செய்தாரா? //

  இஸ்லாம் ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது என்று சொல்கிறது. ஆனால் நாகூர் தர்ஹாவிலும் அஜ்மீர் ஷரீஃபிலும் எனது தலையை சாய்ப்பேன் என்று ஒரு முஸ்லிம் சொன்னால் குர்ஆனை விளங்கிய ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டவரை திருத்த முயல வேண்டும். தனி மதமாக தங்களை அறிவித்துக் கொண்டு நாகூர் தர்ஹாவைப் போல் இன்னும் 10 கட்டிக் கொண்டாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக நடக்க ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் இல்லை என்பதனையே நான் சொல்ல வந்தேன்.

  குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமாக இருப்பதால் தான் நபிகள் நாயகம் தனது மருமகனிடம் ‘தரை மட்டத்துக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் எந்த சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே’ என்று சொன்னார். அதே நேரம் ஏசு, மோசே, ஆப்ரஹாம் போன்ற இறைத் தூதர்களைவிட உயர்வாக தன்னைப் புகழ வேண்டாம் என்றும் தடுத்துள்ளார்கள்.

  //அப்படி என்றால், மக்காவில் இருக்கும் காபாவில் உள்ளே உள்ள பழைய அரபுத் தெய்வங்கள் ஏன் உடைத்து எறியப்படவில்லை? காபாவுக்கு மட்டும் ஏன் அந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்று சான்று காட்ட இயலுமா, சுவனப்பிரியன்?//

  கஃபாவின் உள்ளே இன்றும் சிலை இருக்கிறது என்று உங்களுக்கு யார் சொன்னது? இதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியுமா?

  நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை அன்றைய அரபு மக்களிடம் போதிக்கும் போது அந்த மக்கள் தினம் ஒரு தெய்வத்தை வணங்கி வந்தனர். கஃபாவை சுற்றி 365 சிலைகள் இருந்ததாம். அதில் ஆப்ரஹாம், இஸ்மாயீல், ஏசு போன்ற நபிமார்களின் சிலைகளையும் அந்த மக்கள் வணங்கி வந்தனர். மக்கா இஸ்லாமிய ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை சிலைகளையும் அப்புறப்படுத்த நபிகள் நாயகம் கட்டளையிட்டார். அதன்படி அந்த சிலைகள் அகற்றப்பட்டன. நான்கு சதுரமான கஃபா கட்டிடத்துக்குள் வேறு எந்த சிலைகளும் இன்று வரை இல்லை. தமிழர்கள் பலரும் கஃபாவின் உள்ளே சென்று தூய்மைபடுத்தியுள்ளார்கள். பல உலக முஸ்லிம்களும் உள்ளே சென்றுள்ளனர். அது சதுர வடிவில் கட்டப்பட்ட ஒரு செங்கல் கட்டிடமே.

  //தாங்கள் கூறுவதைப் படித்தது என்னுள் ஒரு மயிர்க்கூச்சர்ப்பு ஏற்பட்டது. தங்கள் கையில் அதிகாரம் இருந்த்திருந்தால் நாகூர் தர்கா மட்டுமா, மற்ற தர்காக்களும் தரை மட்டமாக அல்லவா ஆகி இருக்கும்!//

  இதனை எந்த ஒரு தனி மனிதனும் செய்து விட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய வேலை அது. உடைக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஆனால் தர்ஹா வணக்கம் தவறு என்று முஸ்லிம்களிடம் பிரசாரம் பண்ணலாம். அந்த உரிமை எனக்கிருக்கிறது. அதனை நான் தொடர்ந்து செய்து வருவேன். இன்றில்லா விட்டாலும் இன்னும் சில ஆண்டுகள் கழித்தாவது அந்த மக்கள் நேர் வழியைப் பெறுவார்கள். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 7. Avatar
  ஒரு அரிசோனன் says:

  ISIS தான் ஒப்புக்கொள்ளாத கலைப்பொக்கிஷங்களை சிதைத்துச் சுக்குநூறாக்கி இருக்கிறது — ஈராக்கில். இது ஒரு கலாச்சாரத்தையே அழிக்கும் கண்மூடித்தனமான முயற்சி என்று ஊடகங்கள் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

  இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகள் முன்பு அன்னியப் படையெடுப்பின்போது என்ன நடந்திருக்கும் என்று ISISன் அழிவு முயற்சி படம் பிடித்துக்காட்டும் இந்நேரத்தில், //இது போன்ற தர்ஹாக்களை இடித்து தரை மட்டமாக்குங்கள் என்றுதான் நபிகள் நாயகத்தின் போதனை இருக்கிறது.// என்று எழுதுவது இந்தியாவில் ஒரு குட்டி ISIS உருவாக வாய்ப்பை ஏற்படுத்திவிடுமோ என்று எனக்கு மிகவும் அச்சமாக இருக்கிறது.

 8. Avatar
  ஷாலி says:

  //ஹிந்துஸ்தானத்தில் தர்க்காஹ் ஷெரீஃபுகளில் வழிபட எமது இஸ்லாமிய சஹோதரர்களுக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது.//

  // ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.
  ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை. //
  http://puthu.thinnai.com/?p=9707

  க்ரிஷ்ணாஜி! உங்களுக்கும் சம்பிரதாயப்படி வணங்குவதற்கு அனுமதி உள்ளதாக மறைந்த மஹாசயர் மலர் மன்னன் குறிப்பிடுகிறார்கள். சூபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம் என்று,புறப்படுங்கோ நாகூருக்கு,ஒரு மங்களாசாசனம் பண்ணிபுட்டு “ நமனை விரட்ட மருந்து விக்குராங்க…”வாங்கி சாப்பிட்டீர்கள் என்றால் நீங்க சிரஞ்சீவி!..வடபுலத்து தேசாந்திரத்தில் வசிப்பதால் கூடவே “க்வாஜா மேரே க்வாஜா” பாட்டை பாடி உருகிப்போங்கள்.

 9. Avatar
  BS says:

  தர்காக்கள் இறந்த இசுலாமியர் மேல் எழுப்பப்பட்ட சமாதிகள் மட்டுமல்ல, இறந்த இசுலாமியரல்லாதோர் மேலும் எழுப்பப்பட்ட சமாதிகளும் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை. பிராமணர்களுக்கும் தர்காக்கள் உண்டு. திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் காட்டுப்பள்ளிவாசல் என்ற நிறுத்ததில் வரும் புகழ்பெற்ற தர்கா இரு இசுலாமியச்சஹோதரகளும் 7 பிராமணப்பெண்டிரும் தொடர்பான கதை. தஞ்சைக்குப்பக்கத்தில் இருப்பது பாப்பாத்திஅம்மன் தர்கா (ஒரு பிராமணப்பெண்ணுக்கு இசுலாமியராக மாறி இறந்து)

  இப்படிப்பட்ட பல தர்காக்களுக்கு நாயக்க மன்னர்கள், பாண்டியர்கள், மராட்டிய மன்னர்கள், பிற இந்துக்கள் கொடுத்த கொடைகளும், இன்றும் அவர்கள் பெயரால் நடைபெறும் மண்டகப்படிகள், அறக்கட்டளைகள் உண்டு. நாகூர் தர்காக்கு மட்டுமன்று.

  ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய தர்காக்கள் என்ற சிறுநூலில் மேலும் விவரங்கள் காணலாம். (2014, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)

  லேட் மலர்மன்னன், க்ருஷ்ணகுமார் போன்ற இந்துக்கள் இத்தர்காக்களுக்குச் சென்று வழிபடுதலும் உருகுதலும் ஏராளமான நம் தமிழ்நாட்டுக்கிராம இந்துமக்கள் சென்று வருவதலிலிருந்தும் ஒன்று தெரியலாம். அது:

  இத்தர்காக்கள் நாட்டார் வழிபாட்டைச் சேர்ந்தவை. நாட்டார் வழிபாட்டின் சிறப்பு அம்சம், இறந்த முன்னோர் வழிபாடு. அவர்களில் பலர் அகால துர் மரணமடைந்தவர்கள்.

  அகால மரணம், வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட துர்மரணப்பெண்டிர்களுக்கு, நாட்டார் வழிபாட்டில் பெருமிடமுண்டு. பலர் அம்மன் பேர்களில் கிராமியத்தேவதைகளாக வழிபடப்பட்டுவருகிறார்கள். மாதொருபாகன் நாவலில் ஏழு இளைஞர்களால் வன்புணரப்பட்டு கொல்லப்பட்ட ஆதிவாசிப்பெண், பாவாடையம்மன் என்ற பெயரில் திருச்செங்கோட்டில் அருள் பாலிக்கிறார் என்றும் அத்தேவதையிடம் வேண்டினால் பிள்ளைபேறில்லாதவர்கள் தங்கள் மேலுள்ள் சாபத்தை போக்க முடியும் என்று கதாநாயகியிடம் சொல்கிறார்கள் மூத்தோர்.

  பல தர்காக்கள் இந்துகள் மட்டுமே செல்பவை. எடுத்துக்காட்டு: ஊத்துமலையிலிருந்து தேவர்குளத்துக்குச் செல்லும் வழியிலுள்ள தர்கா தேவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வணங்கப்படுகிறது. அங்கு சமாதியாக உள்ள கான் சாஹிப், கான்சாமாடன் எனவணங்கப்படுகிறார். பல தர்காக்கள் இந்துக்களுக்குக் குலதெய்வங்கள்.

  மதுரை மாவட்டத்தில் தி மு க எம் எல் ஏ காதர் பாட்சா என்பவர் இரு வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அவரைப்பற்றிய வந்த செய்தி: இவர் முத்துராமலிங்கத்தேவர் அக்காள் மகன். ஏன் காதர் பாட்சா என்ற பெயர்? இவர் குழந்தையாக இருக்கும்போது இவர்கள் குடும்பம் அவ்வூரிலிருந்த தர்காவில் தொடந்து வழிபட்டு பின்னர் இவருக்குக் காதர் பாட்சா என்ற பெயர் இடப்பட்டது. இவர் இந்து. இப்படி இந்துக்களுக்கு தெய்வமாக தர்காக்கள் விளங்குகின்றன.

  கான்சாமாடன் தர்காவைப்பற்றி:

  //கிராமத்தில் வாழும் இந்துக்கள் வீட்டில் பசுமாடு ஈன்றதும் பசுவின் முதற்பாலை கான்சாமாடன் சமாதியின் மீது ஊற்றுகிறார்கள். இதனால் பசு நன்றாக பால் காக்கும் என்று நம்புகிறார்கள். கொலைக்குற்றத்தில் மரண தண்டனை பெற்றோர் இங்கு வேண்டுதல் செய்தால் மரண தண்டனையிலிருந்து தப்பலாம் என்ற நம்பிக்கை உள்ளது. ஜமீன் பரம்பரையைச்சேர்ந்த நடராஜ பாண்டியன் இத்தர்காவில் கந்தூரி விழாவை இப்போதும் முன்னின்று நடத்தி வருகிறார்//

  (ஆ. சிவசுப்பிரமணியன், – மேலது)

  பலதர்க்காக்களில் சந்தணக்கூடு தேரிழுப்பது, சந்தணக்குடம் கொடுப்பது போன்ற வகைகள் இசுலாமியர் செய்வதல்ல. இந்து குடும்பங்களே அவற்றிற்கு பாரம்பரீய உரிமைகள் பெற்று செய்துவருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு கிராமத்திலுள்ள செய்யது ஒலியுல்லா தர்காவில் கம்பளத்து நாயக்கர் கட்டளை உண்டு. (ஆ. சிவசுப்பிரமணியன் – மேலது)

  அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது, இத்தர்கா வழிபாடு ஒரு நாட்டார் தெயவ வழிபாட்டைச் சேர்ந்தததாகத்தான் எடுக்க முடியும். இப்படிப்பட்ட வழிபாடுகள் இருந்தே தீரும். மக்கள் பய உணர்வு மிக்கோர். அவ்வுணர்வைப் போக்க எதையும் எவரையும் தெய்வமாக்கி வேண்டுவோர். அதிலொன்றுதான் இவ்வழிபாடும். இறந்தோர் இந்துக்களாக இருப்பின் அம்மன், அல்லது மாடன். அவரகளில் இசுலாமியர் இருப்பின் தர்கா. அவ்வளவுதான். பல தர்காக்கள் பேய் விரட்டுவதற்கென்றேயிருக்கின்றன.

  இசுலாமியருக்குச் சொல்லிச்சொல்லி அவர்களைப்போக விடாமல் செய்வேன் என்று சுவனப்பிரியன் எழுதுகிறார். அபபடியே இசுலாமியர் நிறுத்திக்கொண்டாலும் இந்துக்களால் தர்கா வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழகத்தின் மத வழிபாட்டு பாரம்பரியங்களுள் ஒன்றாக மாறிவிட்டது. மத நல்லிணக்கம் என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். மற்றபடி இஃதொரு இந்து கிராமிய நாட்டார் வழிபாடே. தமிழ்நாட்டுக்கிராமங்களில் மத நல்லிணக்கம் தர்காக்கள் இல்லாமலும் நன்றாகவே இருக்கிறது. ஏன் கிராமத்துக்குப்போக வேண்டும்? மதுரை மாநகருக்கே சென்று பார்க்கலாமே? தெற்குவாசல் தர்கா இல்லாவிட்டால் இசுலாமியரும் இந்துக்களும் அடித்துக்கொள்வார்களா என்ன‌? கிடையவே கிடையாது. அப்படிப்பட்ட சஹோதர ஒற்றுமை காணப்படுகிறது அங்கே.

  வடநாட்டு சுஃபி வழிபாடு ஆன்மிக நிலையில் வேறிடத்தில் வரும். அதையும் நம் நாட்டார் வழிபாட்டு தர்காக்களையும் இணத்துப்பார்க்கவியலாது.

 10. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் ஷாலி

  \\ பண்ணிபுட்டு “ நமனை விரட்ட மருந்து விக்குராங்க…”வாங்கி சாப்பிட்டீர்கள் என்றால் நீங்க சிரஞ்சீவி!..வடபுலத்து தேசாந்திரத்தில் வசிப்பதால் கூடவே “க்வாஜா மேரே க்வாஜா” பாட்டை பாடி உருகிப்போங்கள். \\

  மருந்து மாயமெல்லாம் தர்க்காஹ் ஷெரீஃபிலிருந்து எனக்குத் தேவையில்லை. திருப்புகழ் எனும் அருமருந்து தான் எங்கள் வசமிருக்கே.

  க்வாஜ மேரே க்வாஜா மட்டுமென்ன…………… ஜூலே ஜூலே லால் தம் மஸ்த் கலந்தர் பாடலும்………… அல்லாஹூ அல்லாஹு பந்திஷும் பல நூறு முறை உஸ்தாத் நுஸ்ரத் ஃபதே அலி கான் சாஹேப் பாடியதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேனே.

  அதனால் என்ன மோசம் போயிடும். ஜூலே லால் பாட்டுக்கேட்டதால் ………. பயலே நீ மீளா நரகத்தில் வீழ்வாய் என்று எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமானோ எங்கள் வள்ளிக்கு வாய்த்த பெருமானோ சொல்லவே மாட்டார்கள்.

  ஒரு தபா அல்லாஹு பந்திஷ் கேட்டுப்பாருங்கள். சொக்கிப்போகிறீர்களா இல்லையா நீங்களே சொல்வீர்கள். அதுவும் நுஸ்ரத் சாஹேப் குரலில்.

 11. Avatar
  ஒரு அரிசோனன் says:

  //இதனை எந்த ஒரு தனி மனிதனும் செய்து விட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய அரசு செய்ய வேண்டிய வேலை அது. //

  பேஷ்! இஸ்லாமிய அரசு இருக்கும் இடங்களில் அவர்களுக்குப் பிடிக்காததைத் தரைமட்டமாக்கவேண்டும் போலும்!

  அதையும் நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்கள்! உங்களைப்[பற்றிய எனது அச்சத்தையும் உறுதிப்படுத்துகிறீர்கள், சுவனப்பிரியன்!

  உங்களுப்பிடிக்கவில்லை என்றால் அதைத் தரைமட்டமாக்குவது என்பது மிகவும் கொடிய செயல்! அதை ஆதரிப்பதுபோல (however subtle and implicity) அதைவிடக் கொடியது. நீங்கள் உங்கள் இதயத்தில் அனைவர்பாலும் அன்பு கொள்ளவேண்டும். உடை, தரைமட்டமாக்கு, அது இஸ்லாமிய அரசு செய்யவேண்டியது என்பது….

  நான் மேலே எதுவும் சொல்ல விரும்பவில்லை.

 12. Avatar
  suvanappiriyan says:

  திரு பிஎஸ்!

  //இசுலாமியருக்குச் சொல்லிச்சொல்லி அவர்களைப்போக விடாமல் செய்வேன் என்று சுவனப்பிரியன் எழுதுகிறார். அபபடியே இசுலாமியர் நிறுத்திக்கொண்டாலும் இந்துக்களால் தர்கா வழிபாடு தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

  அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல இன்று நாகூர் தர்ஹா போன்ற தமிழக தர்ஹாக்களை பெரும் பாலான இஸ்லாமியர்கள் விட்டு விட்டனர். எனது குடும்பத்திலேயே பலர் வருடா வருடம் நாகூர் தர்ஹாவுக்கு சென்று வருவர். குர்ஆன் வசனங்களையும் நபி மொழிகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி இன்று பெண்களும் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்கிறார்கள்.

  மற்றபடி இந்துக்கள் தர்ஹாவுக்கு இன்றல்ல. தொன்று தொட்டு வந்து கொண்டேயிருக்கிறார்கள். பள்ளி வாசலுக்கும் தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து ஓதி விடச் சொல்வார்கள். திருத்தணி பள்ளி வாசலில் சில நேரம் நானும் ஓதி ஊதி விட்டுள்ளேன். :-) அது அவர்களின் நம்பிக்கை. அதில் நான் தலையிட முடியாது. ஆனால் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றினால் ஒரு இஸ்லாமியன் என்ற முறையில் அதற்கான ஆதாரத்தை கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது.

  //தர்காக்கள் இறந்த இசுலாமியர் மேல் எழுப்பப்பட்ட சமாதிகள் மட்டுமல்ல, இறந்த இசுலாமியரல்லாதோர் மேலும் எழுப்பப்பட்ட சமாதிகளும் ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை. பிராமணர்களுக்கும் தர்காக்கள் உண்டு. திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் காட்டுப்பள்ளிவாசல் என்ற நிறுத்ததில் வரும் புகழ்பெற்ற தர்கா இரு இசுலாமியச்சஹோதரகளும் 7 பிராமணப்பெண்டிரும் தொடர்பான கதை. தஞ்சைக்குப் பக்கத்தில் இருப்பது பாப்பாத்தி அம்மன் தர்கா (ஒரு பிராமணப்பெண் இசுலாமியராக மாறி இறந்து அது தர்ஹாவாக மாறியுள்ளது) //

  இது எனக்கு புதிய தகவல். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

  1. Avatar
   BS says:

   //இது எனக்கு புதிய தகவல். தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!//

   ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய அக்கதையை நான் இங்கு போட்டுவிடுகிறேன்.

   //தற்போது கங்கைகொண்டான் பகுதியில் உள்ள தர்காவிற்கு தென்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பீர்முகமதுவும் பீர்மைதீனும் தங்கியிருந்தனர். ஏழு பிராமணப்பெண்கள் காசிக்குச் செல்லும் வழியில் தாழையூத்துக்குத் தென்பகுதியில் உள்ள பண்டாரகுளம் காட்டுப்பகுதிக்கு வந்தனர். அப்போது அப்பகுதியைச் சார்ந்த கள்ளர்கள் அப்பெண்களை வழி மறிக்க அவர்களிடம் இருந்து தப்பியோடி காட்டுப்பகுதியில் தங்கியிருந்த இச்சகோதர்களிடம் வந்து அடைக்கலம் ஆயினர். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அப்பெண்களைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி வேண்ட சகோதரர்கள் மறுத்தனர். பின்னர் கள்ளர்கள் அவர்களை அச்சுறுத்த சகோதரர்கள் இருவரும் அவர்கள் கண்பார்வை போகும்படி செய்துவிட்டனர். இதனை அறிந்த கள்ளர்களின் உறவினர்கள் 40 பேர்கள் திரண்டுவந்து அச்சகோதரர்களைத் தாக்க முனையும் போது அவர்களது முகம், கால்கள் செயலற்றுப்போயின. தப்பியோடி ஒரு சிலர் நடந்த நிகழ்ச்சிகளைக்கள்ளர்களின் மனைவிமார்களிடம் கூற, அவர்கள் வந்து அவுலியாக்கள்டம் முறையிட்டனர். அவர்கள் இரக்கம் கொண்டு பார்வை திரும்பி வரச்செய்தனர். காசிக்குப்புறப்பட்டு வந்த ஏழு பிராமணப்பெண்களும், காசி செல்லும் எண்ணத்தைக் கைவிட்டதுடன், சொந்த ஊருக்குத் திரும்பிச்செல்லவும் மறுத்தனர். பின் கழுகுமலைக்குத் தெற்கிலுள்ள கோமலைக்கு அக்கள்ளர்களின் துணையோடு அனுப்பி வைத்தனர். அங்குச்சென்றதும் அக்கள்ளர்கள் அப்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றனர். அப்பெண்கள் அபயக்குரல் கொடுக்க அக்கள்ளர்களை மஞ்சள் அரைக்கும் கல்லாக அவுலியாக்கள் மாற்றினர். பின்னர் அப்பெண்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டு இசுலாமியப்பெயர் பெற்றனர். சரசுவதி என்ற பெண் ஆயிஷா பீவி என்றும், பாப்பாத்தி என்ற பெண் பாத்திமுத்தம்மா என்றும் பெயர் பெற்றனர். அவுலியாக்களின் இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்து ஏழு பெண்களும் பூமி பிளந்து வெடிப்பு ஏற்படட, அதற்குள் மறைந்துவிட்டனர். அவுலியாக்கள் இருவரும் அதற்கு வடகிழக்கில் ஏர்வாடியில் மறைந்துவிட்டனர்.

   (பக்கம் 17லிருந்து)

 13. Avatar
  BS says:

  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை வளாகத்தில் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு மேற்குப்பகுதியில் உள்ள பக்கிரிசாய்புவின் தர்கா. பக்கிரிசாயபு ஏழு கள்வர்களிடமிருந்து ஒரு பிராமணப்பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்தவர். அவர் உயிர்துறந்ததைக்கண்ட அப்பிராமணப்பெண்ணும் தன் நாவைப்பிடுங்கிக்கொண்டு உயிர் துறந்தாள். அவளும் இப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டாள். அதன் பெயர் இஸ்மாயில் ஷா தர்கா.

  (பக்கம் 20)

  அடுத்தபக்கத்தில் வரும் நான்கு பத்திகளின் தலைப்பே பிராமண அவுலியாக்கள். அவை இன்னும் பல பிராமண தர்காக்களைப்பற்றி. போக, 63 நாயன்மாரில் ஒருவர் இசுலாமியர் ஆன கதை தெரியும் சேரமான் பெருமாள் நாயனார். கோட்டக்கல் வைத்யசாலை வாரியர் கேள்விப்பட்டிருப்பீர்கள். அக்கோட்டக்கல்லுக்கு அடுத்தவூர் (கேரளாவில்) தலைநகராகக்கொண்டு ஆண்ட மன்னன் இவர். மெக்காவுக்குச் சென்று இசுலாமியராகி, ஒரு இசுலாமியப்பெண்ணைத் திருமணம் செய்து காலமானதாகவும். அவர் உடல் குலசேகரன் பட்டிணம் கடற்கரையில் ஒதுங்கியதாகவும், அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட தர்காவே ஹசரத் செய்யது சிராஜிதின் ஒலியுல்லாஹ் தர்கா. நீர்ப்பறவை படத்தில் அத்தர்கா அடிக்கடி காட்டப்படும்.

  பாப்பாத்தியம்மன் தர்கா (பக்கம் 21)

  தஞ்சை நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள பழைய மாரியம்மன் கோயில் தெருவில் ‘பாப்பாத்தியம்மன் தர்கா’ இருக்கிறது. இசுலாமிய சமயத்தைத் தழுவிய ஒரு பிராமணப்பெண்ணும் அப்பெண்ணுக்கு இசுலாமிய சமயநெறியைப்புகட்டிய அவுலியா ஒருவரும் அடுத்தடுத்து அடுத்தடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தர்காவின் சந்தணக்கூடு விழாவில் இந்துக்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.

  (மேலே எழுதியவைகளையும் இன்னும் பலபல செய்திகளையும் இச்சிறிய நூலில் படிக்கலாம்.

  நியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசை. “தர்காக்களும் இந்து- இசுலாமிய ஒற்றுமையும்’- ஆ.சிவசுப்பிரமணியன், முதற்பதிப்பு – திசம்பர் 2014. விலை உருபா 20.)

  தில்லி உலகப்புத்தக்கண்காட்சியில் நான் வாங்கி தமிழ்நூலகளில் இஃதொன்று – ரேட் கம்மின்னாத்தான் வாங்குவேன்!)

 14. Avatar
  BS says:

  Matters about Kondungallur (near Kottakkal) and about Tamil film Neerpparavai are my additions. Prof A Sivasubramanian is not that much up to date with Tamil cinema :-)

 15. Avatar
  ஷாலி says:

  பிராமண அவ்லியா,பாப்பாத்தியம்மன் தர்கா,முஸ்லிம் நாயனார். போன்ற தகவல்களை அள்ளித் தரும் “தகவல் களஞ்சியம்” திரு.B.S.அவர்களுக்கு நன்றி!

 16. Avatar
  BS says:

  பேரா. ஆ சிவசுப்பிரமணியன், இங்கே வைகை அனீசு மற்றும் கிருஸ்ணகுமார் போன்றோரைப்போல ஒரு முடிவுரையும் எழுதுகிறார். மத நல்லிணக்கத்தை இத்தர்காக்கள் உருவாக்குவதாகவும், இதை விரும்பா சில அடிப்படைவாத இசுலாமியர்கள் இத்தர்கா வழிபாட்டிலிருந்து இசுலாமியரை விலக்கிக்கொண்டு வருவதாகவும் எழுதுகிறார். ஆனால், அவர் இன்னொன்றையும் சொல்கிறார். அஃது இங்கே சொல்லப்படவில்லை. இந்து முன்னணி இயக்கமும் இந்துக்களை தர்காக்களுக்குப் போய் வழிபடக்கூடாதென்று சொல்லிவருவதாகவும் எழுதுகிறார்.

  என்னைப்பொறுத்தவரை, கதம்ப சாதம் உடலுக்கு நல்லது. மனத்திற்கு? மதங்கள் தங்கள்தங்கள் தனிமைச்சிறப்பைத் தொடருமானால் மட்டுமே அவை இருக்கும். இல்லாவிட்டால் காலப்போக்கில் காணாமல் போகும். அப்படிக்காணாமல் போவதற்கா மதத்தை உருவாக்கியோர் அவ்வளவு சிரமப்பட்டார்கள்? பலர் சித்திரவதைக்கு ஆளானார்கள்? பலர் உயிரை மாய்த்தார்கள்? அவர்களுடன் அவர் தொண்டர்களுமல்லவா மாணடனர்? தர்கா வழிபாட்டை நாட்டார் வழிபாடாகவே ஏற்று கிராமமக்களிடம் விட்டுவிடுவதே சாலப்பொருத்தம் என்று பேராசிரியர் முடித்திருந்தால், விரும்பியிருப்பேன்.

  மதங்கள் அப்படியே இருந்துவிட்டால் யாருக்கும் எந்த கெடுதலுமில்லை. கேடு என நினைப்பது ஒரு மத அரசியலே. தர்காக்கள் கட்டாமல் வரும் மத நல்லிணக்கமே உன்னதமானது. ஓர் இசுலாமியன் இசுலாமியனாகவே இருந்து கொண்டு, ஒரு கிருத்துவன் கிருத்துவனாகவே இருந்து கொண்டு, ஓர் இந்து இந்துவாகவே இருந்து கொண்டு – ஒற்றுமையாக வாழும் சமூகம் உயர்ந்ததல்லவா?

  இருப்பினும், ஏற்கனவே சொன்னது போல, மக்கள் ஒரு ஆட்டு மந்தைகள் போல. சிந்தித்து வாழவேண்டிய அவசியம் அவர்களுக்கில்லை; சிந்தனை செய்தல்; கேள்விகள் கேட்டல் என்பனவெல்லாம் வெட்டி வேலை என்ற நினைப்பினர். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்!! என்பது நம் தமிழர் கொள்கை. எனவே அவர்கள் மகிழ்ச்சியில் நாமேன் மண்ணைப்போட வேண்டும்?

  முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *