பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

author
0 minutes, 23 seconds Read
This entry is part 21 of 26 in the series 10 மே 2015

Socrates - MAXI Photo (1)

கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும் மனித நேயரும் ,கருத்து போராளியுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம் மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட கருத்து நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளைஞர் ஒருவருக்கு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது வழங்க பெரியார் சாக்ரடீஸ் நினைவு விழாக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டு பலரும் பரிந்துரைக்கும்படி முக நூல் மற்றும் இணையத்தில் கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக பலரும் செய்த பரிந்துரைகளின் படியும் குழுவின் ஆலோசனை மற்றும் இறுதி முடிவுகளின் படி 2015ம் ஆண்டுக்கான

 

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

ஆவணப்பட இயக்குனர் .ஆர்.பி,அமுதன்

அவர்களுக்கு வழங்கப்படுகிறது இவ்விருது பெரியார் சாக்ரடீஸ் முதலாம் நினைவு தினமான மே 12 செவ்வாய் மாலை, மாலை 6 மணிக்குகே.கே. நகர்,எண்.5,முனுசாமி சாலை,டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, இயக்குனர் தங்கர்பச்சான் ஆகியோர் முன்னிலையில் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. ஊடகத்துறை சார்ந்த நிகழ்வென்பதால் நண்பர்கள் அனைவரும் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு

டாக்டர். நாச்சி முத்து , எழுத்தாளர் அஜயன் பாலா

 

                                                                 இணைப்பு :1. விருதாளர் வாழ்க்கை குறிப்பு

  1. விருதாளர் புகைப்படம்
  2. பெரியார் சாக்ரடீஸ் புகைப்படம்

                                                                        4.அழைப்பிதழ்

                                

விருதாளர் வாழ்க்கை குறிப்பு

அமுதன் ஆர்.பி.

 

ஆவணப்பட இயக்குநர், ஊடகக் களப்பணியாளர்;

 

வயது 43; சொந்த ஊர்: பழையூர்பட்டி (மேலூர் அருகில்), மதுரை மாவட்டம்.

 

மதுரை மற்றும் சென்னையில் மறுபக்கம் எனும் அமைப்பின் மூலமாக ஆவணப்படங்கள் எடுப்பது, அவற்றைத் திரையிடுவது, திரைப்படவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள், வகுப்புகள் நடத்துவது ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

 

அப்பா ராமலிங்கம் ஒரு விவசாயி. நல்ல படிப்பாளி. பொது வேலைகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்த்க்கொண்டவர்.  முதலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்.  பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்த போது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  உறுப்பினர். கட்சி வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர் கொடுத்த அரசியல் அடித்தளமே அமுதனின் ஆவணப்பட வேலைகளை பிற்காலத்தில் தீர்மானித்தது. அப்பா இப்போது உயிரோடு இல்லை.

 

அம்மா புஷ்பம் குடும்பத்தலைவி. மதுரையில் இருக்கிறார். அம்மாவுடன் சிறிய வயதில் பார்த்த எம்.ஜி.ஆர் படங்களே அமுதனுக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவை. அம்மாவுடன் வெள்ளலூர் டெண்ட் கொட்டகையில் பார்த்த படகோட்டி, அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப்பிள்ளை, அன்பே வா ஆகிய படங்களே ஆரம்ப சினிமாப் பாடங்கள்.

 

 

கல்வி:

 

மதுரையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு .

 

1992-1994ல் எம்.ஏ. வளர்ச்சி தொடர்பியல் (டெவலப்மெண்ட் கம்யூனிகேசன்ஸ்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .

 

1994-1996ல் டில்லியில் ஆவணப்படதயாரிப்புப் பயிற்சி .

 

ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள்.

 

மனைவி தாட்சா திரைப்பட மற்றும் விளம்பரத்துறையில் உடை அலங்காரக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.  இருவருக்கும் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

 

ஆவணப்படங்கள்:

 

அமுதன் இதுவரை 19 படங்கள் எடுத்திருக்கிறார். அவற்றில் குறுகிய நேர மற்றும் முழுநீள ஆவணப்படங்கள், இசைப் படங்கள்  ஆகியன அடங்கும்.

 

குடிநீர் மாவியாவால் மதுரையில் வெட்டிக்கொல்லப்பட்ட மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர் லீலாவதியைப் பற்றி அமுதன் தயாரித்து இயக்கிய முதல் ஆவணப்படம் 1997ல் வெளிவந்தது.

 

1998ல்  குண்டுப்பட்டியில் காவல்துறை அத்துமீறல் பற்றி எடுத்த “தீவிரவாதிகள்” என்கிற படமும், 2003ல் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளி மாரியம்மாள் பற்றி எடுத்த  “பீ” என்கிற படமும், 2006ல்  தலித் கிறிஸ்தவர்கள் பற்றி எடுத்த “செருப்பு” என்கிற படமும் 2012ல் கூடன்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் பற்றி எடுத்த  “கதிர்வீச்சுக்கதைகள் பாகம் 3: கூடன்குளம்” என்கிற படமும்  அமுதன் ஆர்.பி, இயக்கிய படங்களில் அதிகக் கவனம் பெற்றவை.

 

அமுதன் மேலும் மயானத்தொழிலாளர்கள், மரண தண்டனை எதிர்ப்பு, கல்பாக்கம், மணவாளக்குறிச்சி, கொடைக்கானலில் மெர்குரி பாதிப்பு, திருமங்கலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம், நெடுஞ்சாலை விரிவாக்கம், தஞ்சை விவசாயிகளின் பட்டினிச்சாவு என்று பல்வேறு சமூக, அரசியல் தலைப்புக்களில் இதுவரை ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

 

மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா:

 

1998ல் பிரதமர் வாஜ்பாய் நடத்திய  பொக்ரான் அணு குண்டு சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை நண்பர்கள் சுந்தர், லோகு, பாபு, மற்றும் கேரளாவைச் சேர்ந்த மறைந்த ஆவணப்பட இயக்குநர் சரத் சந்திரன்  ஆகியோர் உதவியுடன்  தொடங்கப்பட்ட மதுரை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழாவை இதுவரை 17 ஆண்டுகளா, தொடர்ந்து ஒவ்வொரு டிசம்பர் 6 முதல் 10 வரை (5 நாட்கள்) பேரா முரளி, யதார்த்தா ராஜன், பாபு, பர்வதவர்த்தினி, முத்துக்கிருஷ்ணன் போன்ற  நண்பர்கள், ஆவணப்பட ஆர்வலர்கள், மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் மதுரையில் இருக்கும் கல்லூரிகளில் ஆதரவுடன் மதுரையில் அமுதன் நடத்தி வருகிறார்.

 

மேலும் சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்படவிழா, சென்னை மாதாந்தர திரையிடல், மதுரை மாதாந்தர திரையிடல், பல்வேறு தலைப்புகளில் சிறிய திரைப்படவிழாக்கள், ஆவணப்படத் தயாரிப்புப் பயிற்சி ஆகிய வேலைகளில் அமுதன் ஆர்.பி. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

 

தற்போது அமுதன்,  கோலார் தங்கவயல் சுரங்கத் தொழிலாளர்கள் பற்றிய புதிய ஆவணப்படத்திற்கான ஆய்வுப்பணியில் இருக்கிறார்.

 

 

தொடர்புக்கு:

 

86952 79353; 99406 42044

 

amudhan.rp@gmail.com

 

www.amudhanrp.blogspot.com

www.maduraifilmfest.blogspot.com

www.chennaimonthlyscreenings.blogspot.com

 

புகைப்படங்கள் தனியே இணைக்கப்பட்டுள்ளன

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது விழா குறித்து…

 

 

மதிப்பீடுகள் தான் நம்பிக்கையை உருவாக்குகின்றன.

 

பொய்யான மதிப்பீடுகள் சமூகத்தில் ஊழலும் அவ நம்பிக்கையும் பெருகச்செய்கின்றன.

 

இந்நிலையை மாற்ற நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு

முன் மாதிரியான மனிதர்களுக்கு நாம் உண்டாக்கும்

ஒரு மேடை,,

 

சரியான ஆளுமைகளுக்கு கிடைக்கும் சரியான வெளிச்சம்     மேன்மையான சமூகத்தை உருவாக்குகிறது.

 

அப்படியான காரியங்களூள் ஒன்றாக நாங்கள் துவக்கியுள்ளதே பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது.

 

பெரியார் சாக்ரடீஸ், விடுதலை நாளேட்டின் ஆசிரியர் குழுவிலும், மக்கள் தொடர்பு அலுவலராகவும் பணிசெய்தவர்

பிற்பாடு தமிழக அரசு பணீயாளராகவும் பணி செய்தவர்

 

பெரியார் உருவாக்கி தந்த நெறிகளை வாழ்வின் மூச்சாக கருதி செயல்பட்டவர் .கொள்கையில் அவர் காட்டி வந்த உறுதி போலவே மாற்று கருத்தாளர்களை மதிப்பதிலும் மனித நேயத்தை போற்றுவதிலும் முன் மாதிரியாக திகழ்ந்த சிறந்த பண்பாளர்

 

கறுப்பு சட்டைக்குள் ஒரு வெள்ளை புறாவாய் வாழ்ந்த காந்த மனிதர்

 

சிறுவயதிலேயே பெரியாரின் மடியில் அமரும் பாக்கியம் பெற்ற காரணத்தினாலோ என்னவோ பெரியாரை முழுமையாக உள் வாங்கி அவர் கொள்கைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்.

முற்போக்கு சிந்தனை , தமிழ்ப்பற்றும் இரண்டையும் கண்களாக பாவித்தவர்

தன் மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்த தனித்தன்மை ஒன்றே போதும் அவரது முற்போக்கு சிந்த்னை தமிழ் பற்று மனித நேய பண்பு ஆகியவற்றின் ஒட்டு மொத்த அடையாளத்தையும் கூறும்

 

தமிழ் வளர்ச்சிக்காக இது நாள் வரையிலும் வாழ்வை அர்ப்பணித்த நூறு தமிழ் அறீஞர்களின் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு நூலான செம்மொழி சிற்பிகள் நூலாக பதிப்பிக்க பட்டபோது அதில் தீவிரமாக பணியாற்றிய தொகுப்பாசிரியர்களில் ஒருவர்

 

யார் எப்போது கேட்டாலும் உதவி செய்ய ஓடிவரும் களப்போராளி

 

கடந்த ஆண்டு மே 12ம் நாள் ஒரு சாலை விபத்தில் 44 வயதில் காலமான பெரியார் சாக்ரடீசுக்கு ஒரு துணைவியாரும் மகளும் உண்டு

 

அவர் பவுதீக வாழ்க்கை அறுந்தாலும் அவரது சீரிய எண்ணங்களும் சிந்தனைகளும் தொடர்ந்து உயிரோட்டமாய் உருவம் தரும் பொருட்டாக ஆரம்பிக்கப்பட்டதே பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது.

 

ஊடகத்துறையில் பெரியாரின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் முனைப்போடு இருப்பவர்கள் சிலரை இணைய விண்ணபங்களின் வழியாகவும் குழு ஆலோசனை மூலமாகவும் தேர்ந்தெடுத்து அவர்களில் சாத்தியமான முதன்மையாளரை அந்த ஆண்டின் விருதுக்குரியவராக தேர்ந்தெடுத்து கவுரவிக்கப்படுவதே இதன் நோக்கம் .

அதன் படி…

 

2015ம் வருடத்துக்கான் பெரியார் சாக்ரடீஸ் விருதுக்க்குரியவராக

திரு .ஆர். பி. அமுதன் , ஆவணப்பட இயக்குனர் ,

Link :   (http://en.wikipedia.org/wiki/Amudhan_R_P)

அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

 

பெரியார் சாக்ரடீஸ் முதலாம் ஆண்டு நினைவு தினமான

மே 12 செவ்வாய் கிழமை , மாலை 6 மணிக்கு

சென்னை., கே.கே. நகர் ,5, முனுசாமி சாலை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கவிருக்கும் சிறு விழாவீல் இந்த விருதை வழங்கி கவுரவிக்க உள்ளோம்..

 

அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளோம்

விழாவில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

 

விழாவில் பங்கேற்பவர்களுக்கு செம்மொழி சிற்பிகள் நூல் அன்பளிப்பாக தர உத்தேசித்துள்ளோம்.

 

வாருங்கள் விழாவை சிறப்பியுங்கள்

 

 

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது குழு

டாக்டர். நாச்சி முத்து.M ,

எழுத்தாளர் அஜயன் பாலா

 

Series Navigationதிரை விமர்சனம் – உத்தம வில்லன்கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *