முதல் வண்ணத்துப்பூச்சி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 10 in the series 29 டிசம்பர் 2019

கு. அழகர்சாமி

நிலத்தில் கிளை

நட்டேன்.

நீரூற்றினேன்

நல் உரமிட்டேன்.

நாளும்

மண்ணிலா-

கண்ணில்

வளர்த்தேன்.

செடி

செழித்து

பூப்

பூத்தது

அது

அதன்

முதற்

பூ-

முறுவலுடன்

முதலில

தலையில் சூடி

அதன்

முதல்

ஆசை-

எப்படி நான்

அதை

இரக்கமின்றி

பறிப்பது?

எப்படி நான்

முதல் வண்ணத்துப்பூச்சியாகி

முதற் பூவை

முதன் முதலாய்

முத்தமிடுவது?

கு. அழகர்சாமி

Series Navigationஅம்மா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *