மனுநீதிச் சோழனாய்
அந்த மக்கட் தலைவன்
அவர் வீட்டில்
மனுக் கொடுக்க
மக்கள் கூட்டம்
ஒப்புதல் பெற
ஆவணங்களுடன்
அதிகாரிகள்
இதோ
மின்னல் ஒன்று
மண்ணுக்கு வந்ததுபோல்
அந்தத் தலைவன் வருகிறான்
அந்த வருகையால்
குடில் கோயிலாகிறது
வீட்டுக்குள்ளிருந்து
அம்மாவின் குரல்
‘எவ்வளவு பேரு
காத்துக்கிட்ருக்காங்க
எங்கடா போனே’
அமீதாம்மாள்