மாயவரம் பாட்டி

This entry is part 4 of 12 in the series 28 பெப்ருவரி 2021

                     

 

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 

 

அந்தப் பாட்டியின்

மனக்காயங்கள்

இப்போது ரணமாகிவிட்டன

 

புலம்பல்களில் 

தத்தளித்துக் கொண்டிருக்க

ஆறுதல்

திசை தேடி அலைகிறது

 

” ரெண்டு காலும் போச்சு …

ரெண்டு கையும் போச்சு …

ரெண்டு கண்ணும் போச்சு … ” 

என்ற ஆதங்கம்

பேரன் ரவி திலகனுக்கு

பெரிய காமெடி ஆகிவிட்டது

 

பாட்டியைப் போல்

பேசி நடித்துக் காட்டுகிறான்

 

பழங்காலத் தேய்ந்த

இசைத் தட்டாக 

சோபை இழந்தது அவள் நிலை

 

—- எல்லா கோலங்களையும்

அழித்து அழித்து

வேடிக்கை பார்க்கிறது காலம் ! 

 

                  ++++++++++ 

Series Navigationஅறங்தாங்கிகவிதையும் ரசனையும் – 12 – க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *