இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை

author
1
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 8 in the series 31 ஜூலை 2022

 

          அழகியசிங்கர் 

 

          முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் கீழ் பல எழுத்தாளர்களின் கதைகளை அம்ருதா என்ற பதிப்பகம் புத்தகங்களைக் கொண்டு வருகின்றன.

          அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர்.  இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார்.  எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.

          பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப் பற்றி எழுத்தாளர் இந்துமதியைப் பற்றியது.

          பாலகுமாரன் இப்படிக் கூறுகிறார் : ‘இந்துமதி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அழகி. கெட்டிக்காரப் பெண்.  நல்ல சினேகிதி. அவர் ஏற்றத்தாழ்வுகளில் நான் அவ்வப்போது பங்கு கொண்டிருக்கிறேன்.  அவர் வேதனைப்பட்டபோது என் தோளில் சாய்ந்திருக்கிறார்.  என் மனைவி சாந்தாவிற்குப் பிரியமானவராக இருந்தார்…’

          இன்னொரு இடத்தில்

          ‘என்னுடைய இரண்டாவது திருமணம் அவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது.  அவர் அதைச் சிறுகதையாக்கினார்.  அது என்னைக் காயப்படுத்தியது.  நான் கொஞ்சம் விலகினேன்.’

          எழுத்தாளர் இந்துமதியை தன் போட்டியாளராக  நினைத்து  எழுதியிருக்கிறார்  பாலகுமாரன்.  அதை வெளிப்படையாக த் தெரிவிக்கிறார். 

          முதலில் அவருடைய எழுத்தைப் பாரத்து வியந்து, பின் போட்டியாளராக மாறி வெற்றி கண்டதாக மார்தட்டிக்கொள்கிறார். இது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது சிறுவர்கள் சண்டை போடுகிற நிகழ்ச்சியாக எனக்குத்  தோன்றுகிறது.

 

வெ.இறையன்பு முன்னுரையில்,  ‘இந்துமதி அவர்களின் கதைகள் வெறும் கற்பனையானவையல்ல இவற்றில் தெறிக்கும் உண்மையும், சோகமும் அவர் பார்த்தவற்றின் சாரம் என்பதும், அவற்றைச் சிறிதும் மிகையின்றி மெருகேற்றித் தந்திருக்கும் அவரது கலை வெளிப்பாடு என்பதும் நம்மை சிலிர்க்க வைக்கிறது, என்கிறார்.

 

          ‘கரிப்பு’என்ற கதையில் சிங்கப்பூரில் வசிக்கும் ஆவுடையப்பன் அவர் மனைவியுடன் காரில்  கோயில் கோயிலாகச் சுற்றுகிறார்கள்.

 

            ஒரு பெருமாள் கோயிலுக்கு வருகிறார்கள்.  இந்துமதி கோயில் எந்த இடத்தில் உள்ளது என்று முதலில் குறிப்பிடவில்லை.  ஆனால் கோயில் பற்றிய விபரம் வருகிறது.  

          கோயில் பிரம்மாண்டமாக ஆள் அரவமற்று ஹோ வென்றிருந்தது.  வாசலில் ஒரு பூக்கடை. தேங்காய்ப் பழக்கடை என்று எதுவுமில்லை.  கற்பூரம் விற்பதற்குக் கூட யாருமில்லை.  

          ஈ காக்காவைக் கூட காணாத கோயிலுக்கு வருகிறார்கள்.  ஊர் பேர் சொல்லாமல் இருந்தால் கூட ஒரு சின்ன கிராமம் என்று குறிப்பிடுகிறார் இந்துமதி.

          கோயில் சாத்தியிருக்கிறதா திறந்து இருக்கிறதா என்று தெரியவில்லை.  கோயிலுக்குள் நுழைகிறார் ஆவுடையப்பன்.  கோயிலிருந்து வெளியே வருகிறார் ஒரு பெரியவர். 

          கார் டிரைவர் கிருஷ்ணன் அந்தப் பெரியவரைப் பார்த்து, “சாமி இவங்க கோவில் பார்க்கணும்னு வெளிநாட்டிலிருந்து வந்திருக்காங்க.  சிங்கப்பூரு.  எல்லா இடங்களையும் பார்த்திட்டு இப்போ கோடியக்கரைக்கு வந்திருக்கிறோம்” என்கிறான்.

          அவன் மூலம்தான் கோடியக்கரையில் கோயில் இருக்கிறதா இந்துமதி தெரிவிக்கிறார்.

          “தேவரீர் நாமதேயம் என்னவோ?” என்று பெரியவர் கேட்டவுடன், ஆவுடையப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.  

“சந்நிதியை மூடிட்டீங்க போல இருக்கு” என்கிறார் ஆவுடையப்பன்.

 

          “மூடினா என்ன, பேஷா திறந்து தரிசனம் பண்ண வைக்கிறேன்”,.  என்கிறார் பட்டர்.

          “ஏன் சாமி இந்தக் கோவில்களுக்கெல்லாம் விளக்கே கிடையாதா?” என்று கேட்கிறார் ஆவுடையப்பன்.

          “இருக்கு.  எல்லா இடத்துலேயும் வெறும் திருவிளக்கு மட்டும் நின்னுட்டிருக்கு.  ஏத்தறதுக்கு எண்ணெய் வேண்டாமோ..அதனால்தான் பகவான் இங்க இருளே துணையென்று இருந்ததாய் எம்பிரான் இருந்துண்டிருக்கார்” என்று பட்டர் சொல்கிறார்.

          அந்தக் கோயில் பெரிய பெரிய கல்தூண்களோடு விசாலமாய் இருந்தது.  சிற்பங்களைப் பார்க்க இயலாமல் இருட்டு அடித்தது. 

          வௌவாலும், துறிஞ்சலும் முகத்திற்கெதிராகப் பறக்க ஆவுடையப்பன் மனைவி மீனாட்சியம்மாள் பயந்து போனாள்.

          பேசிக்கொண்டிருக்கும்போதுதான் பட்டரை உற்றுப்  பார்க்கிறார்.  ஒல்லியாய், கறுப்பாய், முகம் ஒட்டியிருந்தாலும் கண்களில் ஒரு தீட்சண்யம் தெரிந்தது.  சிரிப்பில் சினேகம் இழையோடிற்று.  என்ன காரணத்தினாலோ ஆவுடையப்பனுக்குப் பட்டரைச் சட்டென்று பிடித்துப் போயிற்று.

          பட்டர் கோயில் வரலாற்றை அவருக்கே உரித்தான முறையில் சொல்கிறார்.  சன்னிதியைத் திறந்து உள்ளே போய் விளக்கேற்றினார்.

          மரகதவல்லி தாயார் என்று அம்மனை விவரிக்கிறார்.  நல்ல வரப்பிரசாதி.  முக்கியமா இங்க பிரார்த்னை பண்ணிண்டு போனா உடனே சந்தானப்பிராப்தி ஏற்பட்டுடறதுன்னு சொல்லிக்கிறா என்கிறார்.

தீபாராதனைத் தட்டில் ஐந்து ரூபாய் பணம் போட்டார் ஆவுடையப்பர்.  பட்டர் ஒரு முறை மிரண்டு போன மாதிரிப் பார்த்தார். 

          ஆவுடையப்பர் விடைபெற்றுக் கிளம்பும்போது, பட்டர் தயங்கித் தயங்கிக் கேட்டார். 

          “தேவருக்கு ஆட்சேபணை இல்லேன்னா..என் குடிசைக்கு வந்து கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிண்டு ஏதாவது ஆகாரம் சாப்பிட்டுட்டுப் போறது”  என்கிறார்.

          முதலில் தயங்கினாலும் பின்னர் ஆவுடையப்பர் சம்மதிக்கிறார்.  

          “சின்ன குடிசைதான் பார்த்து வரணும்.  தலைல இடிக்கும்” என்கிறார் பட்டர். 

          பட்டர் அவர் மனைவி வைதேஹியை கூப்பிட்டு, ‘இவா சிங்கப்பூர்லேருந்து நம்ம கோவிலைப் பார்க்க வந்தா.  எதாவது சாப்பிட்டுப் போகணூம்னு அழைத்து வந்தேன்” என்கிறார்.

          அவர்களுக்கு ஒரு பழைய பாயை விரித்து உட்காரச் சொல்கிறாள்.  பின் முகுந்து, நரஸிம்மா அமிர்தா எல்லோரும் சித்த வெளியே போய் விளையாடிக்கோங்கோ என்று  குழந்தைகளைத் துரத்துகிறாள். 

          ஒரு எட்டு வயதுப்பெண்.”தலையைப் பின்னிவிடச் சொல்கிறது.  “அப்புறம் ; பின்றேன்னு” அவளையும் துரத்தி விடுகிறாள்.

          பட்டாச்சாரியார் பின்பக்கம் போக, “இதோ வந்துர்றேன்” என்று அந்த அம்மாளும் கூடப் போனாள்.

          அவர்களுடைய இன்னும் இரண்டு குழந்தைகளையும் அறிமுகப்படுத்துகிறார் இந்துமதி.

          பாயை ஒட்டிச் சுவர் ஓரமான வாயில் விரலைப் போட்டுக்கொண்டு மூன்றுவயதுப் பெண் குழந்தை படுத்திருந்தது.  சற்றுத் தள்ளி மேலிருந்து தொங்கிய ஏணையில் கைக்குழந்தை ஒன்று கிடந்தது.

ஆவுடையப்பருக்குத் தாயார் சன்னிதியில் பட்டர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.  மரகதவல்லி தாயார் நல்ல வரப்பிரஸதி. வேண்டிண்டு போறவாளுக்கு உடனே சந்தானப்பிராப்தி ஏற்பட்டுடறது.  இவர் இங்கேயே சேவை செய்வதால் பிராப்தி அதிகம் போலிருக்கு என்று கிண்டலாக எழுதி இருக்கிறார் இந்துமதி.

          அந்தப் பழம் புடவை தூளிக்கு அடியில் குழந்தை கழித்த சிறுநீர் தேங்கிக் கிடக்கப் புத்தகமும், ஒரு டம்ளரும் துணிகளுமாக அறை அலங்கோலமாகக் கிடைத்ததைப் பார்த்து மீனாட்சி முகம் சுளித்துக் கணவனை ஏறிட்டாள்.  அவர் மனைவி  அருவெறுப்படைந்து அங்கிருந்து போகலாம் என்கிறாள்.

          பட்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, பட்டரின் மனைவி

அவர்களைக் கடந்து  பொட்டலமாக எதை எதையோ வாங்கிக் கொண்டு வந்தாள்.  

          ஆவுடையப்பர் தன் இலையில் விழுந்த ரவா உப்புமாவைச் சிணுங்காமல் எடுத்துச் சாப்பிட, அவர் மனைவி தூளியில் கீழ் தேங்கி நின்றதையும் சுற்றுப்புறத்தையும் ; பார்த்து முகம் சுளிக்கக் கணவனிடம் சொன்னாள்.

          “எனக்குப் பசியே இல்லீங்க வேணாங்க” என்று.

          “கொஞ்சம் சாப்பிடு என்கிறார் ஆவுடையப்பர்.”

பாயை ஒட்டிச் சுவர் ஓரமா வாயில் விரலைப் போட்டுக்கொண்டு மூன்றுவயதுப் பெண் குழந்தை படுத்திருந்தது.  சற்றுத் தள்ளி மேலிருந்து தொங்கிய ஏணையில் கைக்குழந்தை ஒன்று கிடந்தது.

          ஆவுடையப்பருக்குத் தாயார் சன்னிதியில் பட்டர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.  மரகதவல்லி தாயார் நல்ல வரப்பிரஸத்தி. வேண்டிண்டு போறவாளுக்கு உடனே சந்தானப்பிராப்தி ஏற்பட்டுடறது.  இவர் இங்கேயே சேவை செய்வதால் பிராப்தி அதிகம் போலிருக்கு என்று கிண்டலாக எழுதி இருக்கிறார் இந்துமதி.

          அந்தப் பழம் புடவை தூளிக்கு அடியில் குழந்தை கழித்த சிறுநீர் தேங்கிக் கிடக்கப் புத்தகமும், ஒரு டம்ளரும் துணிகளுமாக அறை அலங்கோலமாகக் கிடைத்ததைப் பார்த்து மீனாட்சி முகம் சுளித்துக் கணவனை ஏறிட்டாள்.  அவர் மனைவி  அருவெறுப்படைந்து அங்கிருந்து போகலாம் என்கிறாள்.

          பட்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, பட்டரின் மனைவி

அவர்களைக் கடந்து  பொட்டலமாக எதை எதையோ வாங்கிக் கொண்டு வந்தாள்.  

            ஆவுடையப்பர் தன் இலையில் விழுந்த ரவா உப்புமாவைச் சிணுங்காமல் எடுத்துச் சாப்பிட, அவர் மனைவி தூளியில் கீழ் தேங்கி நின்றதையும் சுற்றுப்புறத்தையும்  பார்த்து முகம் சுளிக்கக் கணவனிடம் சொன்னாள்.

          “எனக்குப் பசியே இல்லீங்க வேணாங்க,” என்று. 

          “கொஞ்சம் சாப்பிடு” என்கிறார் ஆவுடையப்பர்.

          மீனா வேண்டா வெறுப்பாக இலையில் போட்ட ரவா உப்புமாவை இரண்டு வாய்கள் போட்டுக் கொண்டாள்.

          அப்படியே மேலும் தொடாமல் வைத்து விட்டாள்.

          பட்டரின் மனைவி, மீனா மீத்து வைத்ததை எடுத்துக்கொண்டு போகிறாள்.

அப்போ நான் வரட்டுங்களா என்று எழுந்து நின்ற ஆவுடையப்பார் ஒரு வினாடி தயங்கி, பின் கேட்டார்.

          “பாத்ரூம் போகணும் பின்னால் போகலாமுங்களா..”

          “ஓ.”.என்கிறார் பட்டர்

    குளியல் அறையிலிருந்து வெளிப்பட்டார் ஆவுடையப்பார் கால் கழுவிக்கொண்டு நிமிர்ந்த போது சாக்குத் தடுப்பால் பிரிக்கப்பட்டிருந்த சமையலறை கண்ணில் பட்டது.  அதிர்ச்சியில் அப்படியே   நின்றுவிட்டார்.

          இரண்டு வாய் சாப்பிட்டு மீனா மீதம் வைத்திருந்த இலையின் உப்புமாவை உருட்டி உருட்டி மூன்று குழந்தைகளின் கையிலும் கொடுத்துக் கொண்டிருந்த பட்டரின் மனைவி கண்ணில்பட அதிர்ந்து போனார் அவுடையப்பர்.

          குழந்தைகளைப் பார்த்து வைதேஹி,  “இன்றைக்கு இவ்வளவுதான் இன்னொரு நாளைக்கு வேற யாராவது மாமா கோவிலுக்கு வருவா அப்போ நிறையப் பண்ணித் தரேன் இப்போ இதைச் சாப்பிடுங்கோ” என்ற பதிலைக் கேட்ட ஆவுடையப்பரின் மனம் கனத்து வலிக்கத் தொடங்கிற்று.

          இந்தக் கடைசிப் பாராவில்தான் இந்துமதி அந்தக் குடும்பத்தின் வறுமையை இரக்கமில்லாமல் சுட்டிக் காட்டுவதுபோல் படுகிறது.

          இந்தக் கதையில் ஏழ்மையைக் குறித்து எந்த புலம்பலும் இல்லை. பிரசாரமும் இல்லை.  

            இந்தக் கதையை யார் படித்தாலும் கலங்கத்தான் செய்வார்கள். அவ்வளவு துல்லியமாகவும் நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்ட இக் கதையை நாம் கொண்டாடத்தான் வேண்டும்.

Series Navigationபால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளதுஅனுபவமா? தண்டனையா?
author

Similar Posts

Comments

  1. Avatar
    Jyothirllata Girija says:

    அருமையான கதை. படிப்பவர்கள் மறக்க மாட்டார்கள்.
    ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *